23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
product
அலங்காரம்ஃபேஷன்

பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். ….

அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது

இப்படி தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும்  பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபா டுகளே தெரியாத அளவுக்கு அவர்களை ஆடை வடிவமைப்பு மூலம் அழகில் மெருகேற்றி காட்டுகிறார்கள், பேஷன் டிசைனர்கள்.

அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும்.

பெண்கள் தினமும் காலையில் கண்விழித்து கண்ணாடிமுன் நின்று தங்கள் அழகை பார்க்கும் போது அவர்களுக்கு பளிச்சென்று தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகள்தான் தெரியவரும். அதிக உடல் எடை கொண்டவர்கள் சற்று வருத்த த்தோடு ‘இன்னும் கொஞ்சம் உடல் மெலிந்தால் அழகாக இருக்கும்’ என்று நினைப் பார்கள். அளவுக்கு அதிகமாக உடல்மெலிந்து காணப்படுகிறவர்கள், ‘சற்று உடல் பூசிமெழுகியது போன்றிருந்தால் அதிக அழகு கிடைக்குமே..’ என்று மனதிற்குள் சொல்லிக் கொள்வார்கள். தங்கள் உயரத்தை குறித்தும், சரும நிறத்தை குறித்தும் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு தினமும் கவலைப்படும் பெண்கள் ஏராளம்.

product

பெண்கள் ஆடையின் அழகு ரகசியங்கள் ( #SecretOfDressForGirls / #Secret )

“பெண்கள் பண்டிகைகள், விழாக்கள், தங்கள் வாழ்க்கையின் முக்கிய நாட்கள் போ ன்ற எல்லாவற்றுக்கும் புதிய ஆடைகள் வாங்கி, அதை உடுத்திதான் கொண்டாட விரும்புகிறார்கள். திருமணம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. அப்போது விதவிதமான ஆடைகளில் வித்தியாசமாக எல்லோரையும் கவர விரும்புகிறார்கள்.

அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தன் உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும். பொதுவாக பெண்களின் உடலமைப்பை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல், செவ்வக மாடல், ஹவர் கிளாஸ் ( #HourGlass ) மாடல் என்று பிரிக்கிறோம். இடுப்பு க்கு மேல் பகுதி பெரிதாகவும்- இடுப்புக்குகீழ் பகுதி சிறுத்தும் காணப்படும் உடல் வாகை கொண்ட பெண்கள், ஆப்பிள் மாடல். இடுப்புக்கு மேல்பகுதி சிறுத்தும்- கீழ் பகுதி பருத்தும் காணப்படுகிறவர்கள் பேரிக்காய் உடல்வாகு பெண்கள். இந்தியா வில் இந்த இருவகை உடல்வாகு கொண்ட பெண்களே அதிகம் இருக்கிறார்கள். செவ்வகவடிவ பெண்கள், கிட்டத்தட்ட மேல் இருந்து கீழ் வரை ஒரே மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள். ஹவர்கிளாஸ் எனப்படும் உடுக்கை போன்ற உடல் அமைப்பை கொண்ட பெண்கள் தான், துல்லியமான கட்டுடலைக் கொண்டவர்கள்.

இந்த நான்கில் தனது உடல் அமைப்பு எத்தகையது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ளவேண்டும். அதை அடிப்படையாக வைத்துதான் அவர்கள் தங்களு க்கான உடைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். அடுத்து தங்கள் சரும நிறத்தை அவர் கள் கருத்தில்கொள்ள வேண்டும். நிறத்துக்கு ஏற்ற ‘பேப்ரிக்’கை தேர்ந்தெடுப்பது அவசியம். காட்டன், பட்டு போன்று ஏராளமான பேப்ரிக் உள்ளது. அவை ஒவ்வொன் றிலும் ஏராளமான உட்பிரிவுகளும் உள்ளன. ஆடை தேர்ந்தெடுக்கும்போது தங்கள் உயரத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். பொருத்தமான உடைகளை தேர்ந்தெ டுத்து அணிந்தால், அவர்களது உடல் அமைப்பில் அவர்கள் குறையாக கருதும் விஷயங்களை நிறைவாக்கி, அழகாக தோன்றலாம்.

“பேஷன் என்பது ‘பழைய ஒயின் புதிய பாட்டில்’ என்று சொல்வார்களே அது போன் றது தான். பெயர் மாறும், அதன் தோற்றத்திலும் சிறிய மாற்றங்கள் இருக்கும். அடிப் படையை ஆராய்ந்தால் அது ஆதிகாலத்தில் இருந்தே சற்று மாறி மாறி வந்ததாகத் தான் இருக்கும். அக்காலத்தில் நடிகைகள் பானுமதியும், சரோஜாதேவியும் சினிமா வுக்காக அணிந்த லெஹங்கா இப்போது கூடுதல் அழகுடன் வலம் வந்து கொண்டி ருக்கிறது. அதன் சோளிக்கு இப்போது கிராப்டாப் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டி ருக்கிறது. எல்லா வயதினரும், எல்லா சூழலுக்கும் அணிந்துகொள்ளும் விதத்தில் இது வடிவமைக்கப்படுகிறது.

மணப்பெண்கள் லெஹங்கா ( Lehenga )வை அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக் காக இதில் அதிகவேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. கூடுதல் கைவேலைப்பாடு கள் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு, இணைப்புகள் சேர்க்கப்படும்போது, அதிக எடை இருப்பதுபோல் தோன்றினாலும், மூன்று கிலோவுக்குமேல் ஆகாது. அதனால் இது கனமாக இருக்கும் என்று கருதவேண்டியதில்லை.

தற்போது பெண்கள் பெரும்பாலும் பேஸ்டல் கலர்ஸ் ( #Colors / #Color )எனப்படும் இள நிறங்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். அது எல்லோரையும் கவர்ந்து, அமைதியான தோற்றத்தை தருகிறது.வேட்டி கவுன் இப்போது அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கி றது. வித்தியாசமான அழகுக்காகவும், சவுகரியத்திற்காக வும் பெண்கள் இதனை தேர்ந்தெடுக்கிறார்கள். இது நீளமாக ஒரே கவுனாக இருக் கும். இடுப்புக்கு கீழ்பகுதி யில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது.

துப்பட்டா போட்டுக்கொள்வது என்பது பெண்களை பொறுத்த வரையில் சற்று கடின மான அனுபவமாக இருக்கிறது. பயணத்தின் போதும், வேலை செய்து கொண்டிருக் கும் போதும் அவர்கள் துப்பட்டாவில் தனிக்கவனம் செலுத்தி அங்கும் இங்குமாக சரிசெய்துகொண்டிருக்க வேண்டியதிருக்கும். அந்த குறையை தீர்க்க இப்போது கேப் துப்பட்டாக்கள் வந்திருக்கின்றன. இதனை மேலாடையுடன் சேர்த்து அப்படியே தைத்து விடுகிறார்கள். சேர்த்து அணிந்து கொள்ளும் போது தைத்திருப்பது போல் தெரியாது. நகர்ந்துபோகாமல் சவுகரியமான அழகுடன் இது காட்சிதரும்.

எத்தனை நவீன உடைகள் வந்தாலும், பாரம் பரியமிக்க புடவைகளுக்கு இருக்கும் மதிப்பு பெண்கள் மத்தியில் குறையவே இல்லை. அதிலும் புதுமைகள் இடம் பெற்று க் கொண்டிருக்கின்றன.

விலை உயர்ந்த புடவைகள்தான் கூடுதல் அழகுதரும் என்ற கருத்து இப்போது வலு விழந்து விட்டது. சராசரியான விலையிலே புடவை வாங்கி, அதில் தேவையான இணைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் அழகாக்கிக்கொள்ளலாம். புடவைகளில் பிராணிகளின் உருவங்களை பிரிண்ட் செய்துகொள்வது இப்போது புதிய பேஷனாக இருக்கிறது. பகல்பூர் சில்க் அதற்கு ஏற்றது. அதில் யானை, மான், வாத்து போன்ற வைகளை பிரிண்ட் செய்து அழகுபடுத்தலாம். யானை உருவம் பொறித்த புடவை கள் நடுத்தர வயது பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

Related posts

உள்ளம் கொள்ளை போகும் – வைர நகைகள்

nathan

ப்ரைடல் ப்ளவுஸ் – விதவிதமான வடிவமைப்பும் அசத்தும் டிசைன்களும்

nathan

வசீகரிக்கும் வைரம்!

nathan

குண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம்

nathan

ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்

nathan

குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான உடைகளை தேர்வு செய்யவே கூடாது.

nathan

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் தேர்தெடுப்பது எப்படி?

nathan

கன்னங்களின் அழகான ஒப்பனைகளுக்கான 5 முக்கிய குறிப்புகள்

nathan

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

sangika