26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
03 beautiful eyes
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க……

உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்களுக்கான முக்கிய பதிவு இது!

மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மை களையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவையே. முகத்தின் மெருகிற்கு முத்தி ரை பதித்ததுபோல் இருக்கும் கண்கள் ஆரோக்கிய மாகவும், அழகாகவும் ஜொலிக்க வேண்டு ம் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் எல் லோரும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொ டுக்கிறார்கள்.

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, பார்வை குறைபாட்டை கண்டறிந்து கண்ணாடிகள் அணிந்த னர். பின்பு கான்டாக்ட் லென்சுகள் அணிந்தனர். இரண்டும் வேண்டாம் என்று கருதுகிறவர்கள் லேசர் சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள்.

இப்போது உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்கள், உடை க்கு தக்கபடி கலர்கலரான காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகளை பொரு த்திக்கொள்கிறார்கள். அதில் டிஸ்போசபிள் லென்சுகளும் வரத் தொட ங்கிவிட்டன.

03 beautiful eyes

அது தொடர்பான கேள்விகளும் – பதில்களும்:

கான்டாக்ட் லென்ஸ் என்றால் என்ன?

பார்வை குறைபாட்டிற்காக கண்ணாடி அணிவது பலநூறு வருடங் களாக நடைமுறையில் உள்ளது. கண்ணாடிக்குப் பதிலாக கண்ணின் மேல் புறத்தில் பொருத்தப்படும் ஒரு மெல்லிய சாத னம் `கொன்டாக்ட் லென்ஸ்’ எனப்படுகிறது. இந்த கொன்டாக்ட் லென்ஸ் ஒரு குறிப்பிட்ட வகை `பாலிமர்களை’ பயன்படுத்தி தயாரிக்க ப்படுகிறது. இதை எளிதாக கண்ணில் பொரு த்தவும், அகற்றவும் இயலும்.

கண்ணாடிக்கும்- கொன்டாக்ட் லென்ஸ்க்கும் என்ன வித்தியாசம்?

கண்ணாடி அணிந்திருக்கும் ஒருவர், பார்வை குறைபாட்டிற்காக அதை அணிந்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். கண் ணாடி அணிவதால் சிலரது வெளித் தோற்றத்திலு ம், அழகிலும் மாற்றம் ஏற்படும். கண்ணாடி அணிவ தை சிலர் அசவுகரியமாகவும் கருதுவார்கள். கண் ணாடியை மிக கவனமாக பாதுகாக்கவும் வேண்டு ம். இதனை அணிவதால் மூக்கின் மேல்பகுதியிலு ம், முகத்திலும் தழும்பும் உருவாகலாம்.

சிலர் முக்கியமான வேலைக்கு செல்லும்போது கண்ணாடியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டு சென்று, அவஸ்தைபடுவதும் உண்டு. கான்டாக்ட் லென்ஸ் அணிந்து இருப்பதை மற்றவர்களால் எளிதாக கண்டறியமுடியாது. கான்டாக்ட் லென் ஸ் அணிபவர்கள், கண்ணாடி அணியவேண்டிய தில்லை. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூல ம் மிக துல்லியமான பக்கவாட்டு பார்வையை பெறலாம்.

ஒருவர், மிக அதிகமான `பவர்’ கொண்ட கண்ணாடி அணியும்போது கண் ணாடி மிக தடினமாகவும், பார்வை தெளிவு இல்லாமலும் இருக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தால், பார்வை துல்லியமாகும்.

கான்டாக்ட் லென்சில் எத்தனை வகைகள் உள்ளன?

கான்டாக்ட் லென்சை பல்வேறு காரணங்களுக்காக நாம் உபயோகப்ப டுத்தலாம். பார்வைக்காக பயன்படுத்தப்படும் லென்ஸ்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை Rigid, semi soft, soft  எனப்படும். ஒவ் வொரு வகை கான்டாக்ட் லென்சும், வெவ்வே று வகை பாலிமரில் தயாரிக்கப்படு கிறது.

காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் என்பது என்ன?

கண்களின் அழகை மேம்படுத்த காஸ்மெட்டிக் `கொன்டாக்ட் லென்ஸ்’ பயன்படுகிறது. கண்களின் தோற்றத்தை சீரமைக்க பிராஸ்தெட்டிக் (prosthetic) கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்த லாம். காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்கு த குந்த நிறத்துக்கு ஏற்றபடி அவைகளை தேர்வு செய்யலாம்.

கான்டாக்ட் லென்சை எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக கண்களில் வைத்திருக்கலாம்?

பொதுவாக கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணில் பொருத்திய சில மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும். மீண்டும் மறுநாள் பொருத்திக் கொள்ள லாம். பொதுவாக இவைகளை 8 முதல் 10 மணிநேரம் வரை கண்களில் வைத்திருக்க லாம்.

தற்போதைய புதிய வரவான `Extended wear’ என்ற கொன்டாக்ட் லென் சை 14 முத ல் 16 மணிநேரம் வரை கண்களில் பொருத் திக்கொள்ளலாம். தற்போது தினமும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய `Daily disposable’ லென்ஸ்களும், ஒரு வாரம் மட்டும் பயன்படுத்துவ தற்கான வைகளும், ஒரு மாதம் மட் டும் பயன்படுத்தக்கூடியவைகளும் உள்ளன.

கான்டாக்ட் லென்ஸ்களை பாதுகாப்பது எப்படி?

கான்டாக்ட் லென்ஸ்களை தினமும் பிரத்யேகமான திரவத்தில் கழுவிய பிறகே கண்ணில் பொருத்த வேண் டும். சுத்தமாக பயன்படுத்த வேண்டும். அணிந்துகொ ண்டு கண்களை கசக்கக்கூடாது. பயன்பாடு முடிந்ததும் கழற்றி பாதுகாக்கவேண்டும். இதனை அணிந்து கொண் டே தூங்கக் கூடாது. இவைகளை பாதுகாப்பதும், பரா மரிப்பதும் எளிது.

கான்டாக்ட் லென்ஸ்களால் பக்கவிளைவுகள்?

அவற்றை நாம் பார்வை மற்றும் அழகுக்காக பொருத்திக்கொள்கிறோம். அதனால் எந்த பாதிப்போ, பக்கவிளைவுகளோ இல்லை.

கொன்டாக்ட் லென்ஸ் எந்த வயதில் இருந்து அணியலாம்?

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியலாம். ஆனால் லேசர் சிகிச்சை 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்.

லேசர் சிகிச்சையால் என்ன பலன்?

18 வயதுக்கு மேற்பட்டவருக்கு கண்ணில் பவர் (கண்ணாடியின் அளவுகோல்) மா றுவதில்லை. எனவே 18 வயதுக்கு மேல் `லேசிக்’ செய்து கொ ண்டால் கண்களில் உள்ள பார்வைக் குறைவை முழுமையா க சரி செய்ய இயலும்.

லேசிக் செய்த பின்பு கண்ணாடி மற்றும் கொன்டாக்ட் லென்ஸ் அணிய தேவையில்லை. `லேசிக்’ பார்வைக் குறைபாட்டை நிரத்தரமாக சரிசெய் யும். தற்போது லேசிக் சிகிச்சை முறையில் மேலும் ஒரு வளர்ச்சியாக இன்ட்ரா லேசிக் (intra lasik) முறை உள்ளது.

இதில் அனைத்து சிகிச்சைகளையும் மிக நுண்ணிய லேசர் கதிர்கள்மூலமாக செய்யப்படுகிறது. அமெரிக் காவில் இந்த சிகிச்சைக்கு உள்படுகிறவர்கள் ராணு வம் மற்றும் விமானபோக்குவரத்திலும் பணிபுரிய லாம். இந்தியாவிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள் ளது.

Related posts

மேக்கப் போடும்போது கூட தாய்ப்பால் ​கொடுத்த பிரபல நடிகை

nathan

சளி, இருமல் உங்கள பாடாய் படுத்துதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

கடலை மாவை எதனுடன் கலந்து பயன்படுத்தனும் பிங்க் நிற சருமத்தை பெற?

nathan

குளிர்ச்சி குளியல்

nathan

இந்த அழகு குறிப்புகளை படுக்கச் செல்லும் முன்பாக பயன்படுத்தி பாருங்க….!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பெரியதாக இருக்கும் மார்பகங்களை இயற்கை வழிகளில் குறைப்பது எப்படி?

nathan

இன்ஸ்டாகிராம் காதலால் ஏற்பட்ட துயரம்! காதலியின் ஆடையில்லா புகைப்படத்தை மணமகனுக்கு அனுப்பிய காதலன்

nathan

என்ன ​கொடுமை இது? கண்ணாடி முன் படு கிளாமர் உடையில் கஸ்தூரி எடுத்த செல்பி.

nathan