23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1519825466 f
எடை குறையஆரோக்கியம்

இவ்வளவு எளிதாக எடையைக் குறைக்க முடியும்…..

கொலஸ்ட்ரால்

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். ரத்த அழுத்தம், கொலட்ஸ்ரால் ஆகியவை உங்களை எட்டிப் பார்க்காது. அதனால் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். என்றும் இளமையாக இருக்கலாம். என்ன உளறுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆம். இரண்டு மிக சுவையான உணவு காமினேஷன்களை சாப்பிட வேண்டும். அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு தேவையில்லாத கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கும் என்று இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. அப்படி சுவையான அதேசமயம் வெயிட் குறைக்கிற 4 உணவு காமினேஷன்கள் பற்றி தான் இப்போது பார்க்கவிருக்கிறோம்.

1519825466 f

எடை குறைப்பு

உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். ஏனென்றால் இதுவரை நமக்கிருந்த தினசரி பழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை என அத்தனையையும் மாற்ற வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான முதன்மையான விஷயம் என்பது உணவு தான். இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் உண்மையாகவே அதிர்ஷ்டசாலிதான். ஏனென்றால் இவ்வளவு எளிதாக எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியப் போகிறதே…

கீழ்கண்ட நான்கு விதமான உணவு இணைகளை சாப்பிட்டு வந்தால் மிக வேகமாக எடை குறையும். அதுபற்றி இங்கே காணலாம்.

சிக்கனும் மிளகாயும்

மிகக் குறைந்த சிக்கன் சாப்பிட்டாலே உங்களுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வு உண்டாகும். தசைகளும் வலுவடையும். எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்குளுக்கு சிக்கன் ஒரு நல்ல சாய்ஸ் அல்ல. அதை தவிர்ப்பதே நல்லது. அதேசமயம் எடை குறைக்க வேண்டும் என்பவர்கள் சிக்கனின் மார்புப்பகுதியை தேர்வு செய்யுங்கள். அதுதான் முழுக்க முழுக்க சதைப்பகுதியாக இருக்கும். அந்த சிக்கனோடு மிளகாயை மிக அதிகமாகச் சேர்த்து சாப்பிட்டீர்கள் என்றால் கிடுகிடுவென வேகமாக எடை குறையும்.

மிளகாயில் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். அதிலுள்ள ஆண்டி ஆக்சிடணட்டுகள் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்பை எரிக்கிறது. அதனால் சிக்கன் பிரஸ்ட்டில் நல்ல மிளகாயை அரைத்த மசாலாவும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்து ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். மிகவும் சுவையான, எடையைக் குறைக்கும் ஒரு உத்தி தான் இது.

அவகேடாவும் கோதுமை பிரட்டும்

பொதுவாக பிரட் ஆரோக்கியமான உணவு என்ற சொல்கிறோம். ஆனால் அதிலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஒயிட் பிரட்டை விடவும் ஹோல் வீட் (முழு தானியம்-கோதுமை) பிரட் தான் ஆரோக்கியமானது. அதில்தான் கோதுமையின் முழுமையான நார்ச்சத்தும் கிடைக்கும். அந்த குாதுமை பிரட்டை வைத்து மிகவும் சிம்பிளான அதேசமயம் சுவையான ஒரு பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி ஒன்று இருக்கிறது. பொதுவாகவு அவகேடா பழம் (பட்டர்ஃபுரூட்) கொழுப்பைக் கரைக்கும். எடையைக் குறைக்கும் என்பது தெரியும். அதனுடன் அதிக நார்ச்சத்தான வீட் பிரட்டும் சேரும் போதும் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

இந்த அவகேடா பழத்தை தோல் நீக்கிவிட்டு, நன்கு மசித்து அதில் சிறிதளவு மிளகாயும் உப்பும் எலுமிச்சையும் சுவைக்காக சேர்த்துக் கொண்டு, அதை பிரட்டில் டோஸ்ட்டாக தடவி சாப்பிடுங்கள். இது உங்களை சிக்கென்று மாற்றிவிடும்.

ஆப்பிள் – பீநட் பட்டர் – பட்டை

பழங்களிலேயே ஆப்பிள் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்குமே தெரியும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே போகத் தேவையில்லை என்று சொல்வார்கள்.

வேர்க்கடலை பட்டர் மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். பலபேர் இதை கொழுப்புச் சத்து நிறைந்தது என்று ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு தான். சிறிதளவு எடுத்துக் கொண்டாலே வயிறு நிறைந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். இது உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும்.

ஆப்பிளில் உள்ள வைட்டமின்களும் மினரல்களும் ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் இந்த பீநட் பட்டருடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். அதேசமயம் மிகக் குறைந்த கலோரியில் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

கிரீன் டீயும் புதினா

பொதுவாக உடல் எடையைக் குறைப்பவர்களின் முதல் சாய்ஸாக கிரீன் டீ இருக்கும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சையும் சில புதினா இலைகளும் சேர்த்துக் குடிக்க வேண்டும். கிரீன் டீயுடன் எலுமிச்சையும் புதினாவும் சேர்க்கும் போது, பாலிபினைல் மற்றும் பெக்டின் அளவைக் கட்டுக்குள் வைத்து உடல் எடையை மிக வேகமாகக் குறைக்கச் செய்கிறது.

Related posts

* எடை கூட காரணங்கள்: *

nathan

தொப்பை குறைய எளிய பயிற்சி

nathan

வல்லாரையின் அற்புத நன்மைகள்

nathan

உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும்!…

sangika

தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தி பாருங்க 15 நாளிலேயே ஒல்லியாக மாறிடுவீங்கள்!….

nathan

கட்டாயம் இதை படியுங்கள்,, பெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் பாதிப்பு வருமா?

nathan

திருமண வாழ்க்கையை பெண் சுதந்திரம் பாதிக்கிறதா?…

nathan

தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!

sangika

தெரிஞ்சிக்கங்க… B- என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா ?

nathan