26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ht4213
ஆரோக்கியம்

தூங்கும் பழக்கம் எப்படி இருந்தாலும் தூங்குகிற முறை ஆறுதான். …

நோய்கள், மருந்துகள், சிகிச்சைகள் என தீவிர மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நடுவில் ரிலாக்ஸ் சர்வே இது. இங்கிலாந்தை சேர்ந்த தூக்கவியல் சிறப்பு மருத்துவரான க்ரிஸ் இட்ஸிகோவ்ஸ்கி, ‘ஒருவர் தூங்கும் முறையை வைத்தே அவரது தனிப்பட்ட சுபாவத்தைச் சொல்லிவிட முடியும்’ என்பதைத் தன்னுடைய ஆய்வின் முடிவாகக் கூறியிருக்கிறார்!

”ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான தூங்கும் பழக்கம் உண்டு. சில வினோதமான பழக்கம் கொண்டவர்களும் உண்டு” என்கிற க்ரிஸ், சில பிரபலங்களை வைத்தே இதற்கு உதாரணமும் சொல்கிறார். ஓவியர் லியனார்டோ டாவின்சி 4 மணி நேரத்துக்கு ஒரு முறை 20 நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடும் பழக்கம் உடையவராம். தன்னுடைய அறிவுத்திறனை சார்ஜ் செய்துகொள்ள இந்த 20 நிமிடத் தூக்கம் உதவுவதாகக் கூறியிருக்கிறார். பிரபல ஆங்கில எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ், தெற்கு திசையில் தலை வைத்து உறங்குவதையே விரும்புவார்.

ht4213

அதைவிட சுவாரஸ்யமான விஷயம், தான் உறங்குகிற கம்பளிதான் தன்னுடைய படைப்பாற்றலுக்குக் காரணம் என்று நம்பியிருக்கிறார். அமெரிக்க பாடகியான மரியா கரே, 15 ஏர்கூலர்களுக்கு நடுவில் படுத்துக்கொண்டு மதியம் தூங்கும் பழக்கம் கொண்டவராம். க்ரிஸ் சொல்லும் பட்டியலைப் போலவே நம் ஊரிலும், சீக்கிரம் தூங்கி சீக்கிரமே எழும் பழக்கம் இருந்த மகாத்மா காந்தியிலிருந்து, எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும் அதிகாலையில் எழுகிற பழக்கம் உள்ள இன்றைய பிரதமர் மோடி வரை பலவிதமான தூங்கும் பழக்கங்களைக் கேள்விப்பட்டிருப்போம்.

தூங்கும் பழக்கம் எப்படி இருந்தாலும் தூங்குகிற முறை ஆறுதான். அதை வைத்தே ஒருவர் தனிப்பட்ட முறையில் எப்படிப்பட்டவர் என்று ஜோதிடம் சொல்லிவிட முடியும் என்பதுதான் க்ரிஸ்ஸின் ஆய்வில் இருக்கும் ட்விஸ்ட். காரணம், தூங்கும் நிலை என்பது முழுக்க முழுக்க ஒருவருடைய ஆழ்மனதில் இருந்து உருவாவது என்பதுதான் என்கிறார் க்ரிஸ் இட்ஸிகோவ்ஸ்கி.
அது என்ன ஆறு நிலை?

1. Log position

இடது அல்லது வலது என ஏதாவது ஒரு பக்கமாக சாய்ந்து, கால்களை நீட்டி தூங்குவதை லாக் பொசிஷன் என்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாகவும் சமூகத்துடன் இணைந்து வாழ விரும்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களை நம்புவார்கள். இதன் காரணமாகவே பலரிடம் ஏமாற்றம் அடைவதும் உண்டு.

2. Yearner position

இது கிட்டத்தட்ட லாக் பொசிஷன் தூக்கத்தைப் போன்றதுதான். ஒருபக்கமாக சாய்ந்து தூங்கும் முறை. ஆனால், குழந்தையை அரவணைத்துக் கொண்டு தூங்கும் ஒரு தாய்போல கைகளையும், கால்களையும் சற்று முன்பக்கமாக வைத்திருப்பார்கள். புதிய
மனிதர்களை சந்திப்பதில் தயக்கங்கள் இல்லாதவர்கள் இவர்கள். சந்தேக குணமும், குறை கண்டுபிடிக்கிற பழக்கமும் இவர்களிடம் மைனஸ் சமாசாரங்கள். எளிதாக ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்காத பிடிவாதக்காரர்கள்.

3. Soldier position

மல்லாந்து படுத்தவாறு கை, கால்களை ஓர் ஒழுங்கான முறையில் வைத்துக் கொண்டு உறங்கும் முறை இது. இவர்கள் சமூகத்தில் பெயர் கெட்டுவிடக் கூடாது என்று கவுரவத்துக்காக வாழ்கிறவர்கள். தங்களது செயல்களில் உறுதியானவர்களாக இருப்பார்கள். அமைதியையும் தனிமையையும் விரும்புகிறவர்கள். அதனாலேயே கூட்டம் என்றால் இவர்களுக்கு அலர்ஜி. வாழ்க்கையை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் வாழ்கிறவர்கள். தங்களைச் சுற்றி இருக்கிறவர்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இவர்களிடம் இருக்கும் பிரச்னை. அதைவிட இவர்களிடம் இருக்கும் இன்னொரு பிரச்னை குறட்டை.

4 . Free faller

அரசியல்வாதிகளின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுவது போல கவிழ்ந்து படுத்துத் தூங்கும் பழக்கம் கொண்டவர்களை Free faller என்கிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் சட்ட திட்டங்களுக்கு அடங்காதவர்களாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்கிற முரண்பாடான குணம் இருக்கும். மனதுக்குள் கோபம் இருக்கும். ஆனால், வெளிக்காட்ட மாட்டார்கள். ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்கள் என்பதோடு சிறந்த விமர்சகர்களாகவும் இருப்பார்கள்.

5. Star fish

சோல்ஜர் பொசிஷனைப் பற்றிப் பார்த்தோம். அதே நிலையில் கால்களைக் கொஞ்சம் தளர்வாக வைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தலையணையின் இரண்டுபுறமும் வைத்துத் தூங்கும் முறை இது. டாப் ஆங்கிளில் பார்த்தால் தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று ஐந்து முகம் கொண்ட நட்சத்திர மீன் போல தெரியும் என்பதால் ஸ்டார் ஃபிஷ் என்று இந்தத் தூங்கும் முறைக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் நவீன வாழ்க்கைக்கு ஏற்ப மாறுகிறவர்கள். நட்புக்கு முக்கியத்துவம் தருகிறவர்கள். மற்றவர்களின் பிரச்னையைக் காது கொடுத்துப் பொறுமையாகக் கேட்கிறவர்கள். அதைவிட முக்கியமான விஷயம், தங்களால் ஆன உதவியையும் செய்யும் நல்ல மனசுக்காரர்கள். கொஞ்சம் கவனித்தால் இந்த ஸ்டார் ஃபிஷ் பொசிஷன் மற்றவர்களை அரவணைக்கத் தயாராக இருப்பது போலவே தோன்றும். இவர்களின் உண்மையான சுபாவமும் இதுதான்.

6. Fetal position

ஒரு பக்கமாக கைகள், கால்களைக் குறுக்கிக் கொண்டு சாய்ந்து படுத்துத் தூங்கும் முறை இது. கிட்டத்தட்ட கருவில் குழந்தை இதே அமைப்பில்தான் இருக்கும் என்பதால் Fetal position என்கிறார்கள். தன்னுடைய ஆய்வின்படி கிட்டத்தட்ட 41 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த முறையில் தூங்குவதாக க்ரிஸ் கூறியிருக்கிறார். இவர்கள் பார்ப்பதற்கு முரட்டுத்தனம் கொண்டவர்களாகத் தெரிந்தாலும் நிஜத்தில் கூச்ச சுபாவம் உள்ளவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். அதிகமாக யோசிக்கிறவர்கள் என்பதால், அதன் காரணமாகவே அதிகம் கவலைப்படுகிற குணமும் இருக்கும். இப்போது உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்… ஆறு வகையில் நீங்கள் எந்த வகை?

Related posts

அதிகரித்துவரும் இந்த உடல்பருமன் சாதாரண விஷயம் கிடையாது. இந்த சமூகம் இதை உணர்ந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில்

nathan

தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!

sangika

பர்வதாசனம்

nathan

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் ‘கிரேப்ஸ்’!

nathan

இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.

nathan

கருவுற்ற பெண்ணுக்கு ஸ்கேனிங்

nathan

ஆண்களும் தெரிஞ்சிக்கலாமே,, இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்…

nathan

தாய்ப்பாலைத் தவிர, வேறு பால் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்கள்

nathan