“கோகோ கேக்” வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்
கோகோ கேக் செய்ய தேவையானவை:
- கோவா (இனிப்பு இல்லாதது) – 2 கப்,
- மைதா – ஒரு கப்,
- கோகோ பவுடர் – 5 டீஸ்பூன்,
- சர்க்கரை – 4 கப்,
- நெய் – சிறிதளவு.
செய்முறை:
முதலில் சுத்தமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அடிகனமான அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகியவை சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி விடவும்.
அடுத்ததாக, இன்னொரு அடிகனமான பாத்திரத்தில் மீதமிருக்கும் கோவா மற்றும் சர்க்கரை, கோகோ பவுடர் ஆகியவை சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, ஏற்கெனவே தட்டில் கொட்டிய கலவை மீது கொட்டி பரப்பவும். ஆறிய பின் துண்டுகள் போடவும். சிறிது நேரம் கழித்து பரிமாறுங்கள்.