தேவையான பொருட்கள்
கெட்டி அவல் – 200 கிராம்,
உருளைக்கிழங்கு – 2,
கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை,
வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு,
எண்ணெய் – 150 கிராம்,
மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.
எப்படிச் செய்வது?
கெட்டி அவலை சிறிது நேரம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள் சேர்க்கவும். ஊறிய அவல், பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்கு புரட்டவும். உப்பு, எலுமிச்சைச் சாறு, வறுத்த வேர்க்கடலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.