26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
ellu
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஒரு சிறிய விதையில் இவ்வளவு நன்மைகளா..?

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் பல வகையான மாற்றங்களை செய்து வருகின்றோம். முன்பெல்லாம் இயற்கை சார்ந்த பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்துவோம். ஆனால், இப்போது மாறுதலாக பல வகையான வேதி பொருட்களை நாம் பயன்படுத்தி வருகின்றோம். இதனால், முகத்தின் அழகு தன்மையும், இயற்கை அழகும் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.
முகத்தின் அழகை ஒரே இரவில் மாற்றிவிட ஒரு சிறிய விதையே போதும். அது வேறொன்றும் இல்லை. அதுதான், எள்ளு. எள்ளில் இருந்து தயாரிக்கும் எண்ணெய்யை நாம் தலைக்கு பயன்படுத்திருப்போம். அதே போன்று எள்ளில் இருந்து செய்யப்படும் ஒரு சில குறிப்புகளை வைத்து முக அழகை பளபளவென பெற்று விடலாம். எவ்வாறு இதனை பெற வேண்டும் என்பதை இனி அறிவோம்.
ellu
இவ்வளவு நன்மைகளா..? மற்ற விதைகளை போன்றே எள்ளிலும் எண்ணற்ற மகிமைகள் உள்ளன. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை பல விதமான நோய்களையும் இது சரி செய்ய கூடியது. உடல் ஆரோக்கியத்தை எப்படி எள்ளு பார்த்து கொள்கிறதோ, அதே போன்று முகத்தின் அழகையும் இது பொலிவுடன் வைத்து கொள்கிறது.

எள்ளின் சத்துக்கள் இந்த எள்ளில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் உள்ளன. குறிப்பாக கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து, வைட்டமின் எ போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனை உட்கொண்டாலும், முகம் அல்லது முடிக்கு தடவினாலும் பல வித நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

பருக்களை ஒழிக்க முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பருக்கள் முக்கிய இடத்தில் உள்ளன. இதனை நாம் எளிதில் போக்க இந்த குறிப்பு உதவும். தேவையானவை :- மஞ்சள் 1/2 ஸ்பூன் பன்னீர் 1 ஸ்பூன் அரைத்த எள்ளு 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறு துளிகள்

செய்முறை :-

முதலில் எள்ளை பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் பருக்கள் காணாமல் போய் விடும். அல்லது நல்லெண்ணெய் 1 ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது சேர்த்து கொண்டு முகத்தில் தடவினால் முகப்பருக்களை ஒழித்து விடலாம்.

பளபளப்பான முகத்திற்கு முகத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்து கொள்ள ஒரு எளிய வழி உள்ளது. அதற்கு இந்த குறிப்பு போதும். தேவையானவை :- நல்லெண்ணெய் 1 ஸ்பூன் அரிசி மாவு 1 ஸ்பூன்

செய்முறை :-

அரிசி மாவுடன் நல்லெண்ணையை கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகும். அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி மென்மையான சருமத்தை தரும்.

கருமையை நீக்க பலருக்கு அழுக்குகள் சேர்ந்தவுடனே முகம் மிகவும் கருமையாக மாறி விடும். இந்த கருமையை நீக்குவதற்கு இந்த குறிப்பு போதும். தேவையானவை :- நல்லெண்ணெய் 2 ஸ்பூன் யூக்கலிப்டஸ் எண்ணெய் சிறு துளி பிரவுன் சுகர் 2 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் பிரவுன் சுகருடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து யுகலிப்டஸ் எண்ணெய்யை சிறிது இதனுடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி விடும்.

Related posts

முகப்பருவிற்கு நல்ல தீர்வை வழங்கும் யுனானி மருத்துவம் !….

sangika

பளீச் அழகு பெற

nathan

நகங்களின் நலன் காக்க பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.

nathan

அழகு குறிப்புகள் | பன்னீரின் நன்மைகள்

nathan

பெரிய மூக்கை சிறியதாக மாற்ற வேண்டுமா? உங்களுக்கான இயற்கை சிகிச்சை இங்கே!

nathan

முகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை

nathan

வீட்டிலேயே பிளீச் செய்வது எப்படி?

nathan

கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் போகமாட்டீங்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆண்களின் தாடியை வளர செய்யும் 12 உணவு வகைகள்..!சூப்பர் டிப்ஸ்..

nathan