25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
dry hair
கூந்தல் பராமரிப்புதலைமுடி அலங்காரம்

உங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வேண்டுமா?..

உங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வேண்டுமா? ஆம் என்றால் உங்கள் உச்சந்தலை முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உச்சந்தலையில் நீர்ச்சத்து இல்லாமல், ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது தலை வறண்டு, செதில் செதிலாக தோன்றும். இதுவே ஆரோக்கியமற்ற தலைக்கு உதாரணம் ஆகும்.இதனால் தலைமுடியின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் குறைந்து, வலிமையிழந்து காட்சியளிக்கும். ஆகவே உங்கள் உச்சந்தலையை ஊட்டச்சத்துடன் மற்றும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள எண்ணெய்கள் உதவுகின்றன.
dry hair
வறண்ட முடி உங்கள் வறண்ட தலைக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி பொலிவை உண்டாக்க முடியும் என்று இந்த பதிவின் மூலம் உங்களுக்கு உணர்த்துகின்றோம். அன்டி ஆக்சிடென்ட்களின் ஆதாரமாக விளங்கும் ஆலிவ் எண்ணெய் மூலம் உங்கள் வறண்ட தலையை பொலிவாக்க முடியும். மேலும், ஆலிவ் எண்ணெயில் வைடமின் ஏ மற்றும் ஈ சத்து இருப்பதால் நீங்கள் பயன்படுத்தும் கூந்தல் பராமரிப்பு பொருட்களால் உண்டான சேதங்களை அகற்றி உச்சந்தலைக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கிறது.

சிகிச்சை உச்சந்தலையில் உண்டாகும் அழற்சி, பொடுகு, பேன் போன்றவற்றை போக்க, ஆலிவ் எண்ணெயில் உள்ள கிருமி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை உதவுகின்றன. வறண்டு இருக்கும் உச்சதலையில் ஆலிவ் எண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது காணலாம்.

ஆலிவ் எண்ணெய் மசாஜ் தலை வறண்டு போவதைத் தடுக்க மிகவும் எளிய வழி இது. தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய் செய்முறை மிகக் குறைந்த அளவு நெருப்பில் ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கிக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை உங்கள் உச்சதலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு ஒரு ஷவர் கேப் கொண்டு உங்கள் தலையை மூடிக் கொண்டு 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். இருபது நிமிடம் கழித்து சல்பேட் இல்லாத ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் இந்த ஸ்க்ரப் பயன்படுத்துவதால், உங்கள் உச்சந்தலை சுத்தம் செய்யப்பட்டு, சரும அணுக்கள் வெளியேறுவதை தடுக்கிறது. தேவையான பொருட்கள் 4-5 ஸ்பூன் சர்க்கரை 1/4 கப் ஆலிவ் எண்ணெய் செய்முறை ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு ஸ்க்ரப் செய்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவவும். உங்கள் தலையை சுழல் வடிவத்தில் மென்மையாக மசாஜ் செய்யத் தொடங்கவும். சில நிமிடங்கள் மசாஜ் செய்தவுடன், 10 நிமிடம் அப்படியே விடவும். பிறகு மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி உங்கள் தலையை அலசவும்.

ஆலிவ் எண்ணெய், அவகாடோ மற்றும் தேன் இந்த தயாரிப்பை பயன்படுத்துவதால் உங்கள் உச்சந்தலையின் வறட்சி குறைந்து கூந்தல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. தேவையான பொருட்கள் 1 அவகாடோ 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் தேன் செய்முறை பழுத்த அவகாடோவை எடுத்து மசித்துக் கொள்ளவும். இதனுடன், சிறிது ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். எல்லா பொருட்களையும் நன்றாகக் கலந்தவுடன், இந்த கலவையை தலையில் தடவி, இரண்டு அல்லது மூன்று நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு ஒரு ஷவர் கேப் அணிந்து அரை மணி நேரம் அப்படியே விடவும். பிறகு ஒரு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் உச்சந்தலையில் அழற்சி உள்ளவர்கள், இந்த தீர்வை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் 1/2 கப் ஆலிவ் எண்ணெய் 1/2 கப் ஆப்பிள் சிடர் வினிகர் செய்முறை ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கிக் கொள்ளவும். இதனை உங்கள் தலையில் தடவி சுழல் வடிவத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். உச்சந்தலை முதல் நுனி முடி வரை இந்த எண்ணெய்யை தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலையை அலசவும்.

Related posts

தலைமுடி உதிராமல் இருக்க

nathan

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலையே சேர்த்து சாப்பிட்டு வந்தாலே இந்த நரைமுடி பிரச்சனை வரவே வராது,

nathan

எங்கேயும் முடி..எதிலும் முடி..!

sangika

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா?

nathan

அடர்த்தியான தலை முடியை பெற

nathan

முடி அடர்த்தியாக வளர…

nathan

வெள்ளை முடிகளை நிரந்தரமாக கருமையாக்க ஒரு எளிய வழி !…

sangika

எண்ணெய்ப் பசையான கூந்தல்

nathan

இளநரையை தடுக்கும் வீட்டு தயாரிப்பு ஷாம்பு

nathan