29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
so hum meditation SECVPF
ஆரோக்கியம்யோக பயிற்சிகள்

ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும்

ஒரு மனிதன் தனது சிறைவடிவான ஆன்மாவை அறிய ஸோஹம் தியானத்திற்கு ஒப்பான ஒரு உபாசனையோ, ஜபமோ இல்லை என்று தியான பிந்து உபநிஷத்து கூறுகிறது. முக்தி அடைய யோகிகளுக்கு ஸோஹம் தியானம் ஒரு பொக்கிஷம் போல் உள்ளது என்று ஹம்ஸோப நிஷத்து கூறுகிறது.

சரபோக நூல்களான சிவ ஸ்வரோதயா மற்றும் ஞான சர நூலிலும் சரயோக சாற்கள் ஜீவன் முக்தி நிலையை அடைய ஸோஹம் தியானப் பயிற்சியை கூறி உள்ளது.

பெயர் விளக்கம் :- மூச்சின் இயக்கத்தில் இயற்கையாகவே இருக்கும் ஹம்ஸோ என்ற சூட்சும நாதத்தை ஸோஹம் என்று மாற்றி ஜப தியானம் செய்வதால் ஸோவும் தியானம் என்று இப்பயிற்சி அழைக்கப்படுகிறது.
so hum meditation SECVPF
செய்முறை-1 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் இரண்டு கை விரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் சாம்பவி (கண்களால் புருவ நடுவை பார்க்கவும்) அல்லது அகோசரி (கண்களால் மூக்கு நுனியை பார்க்கவும்) செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் மூச்சுக் காற்று உள்ளே செல்வதை அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.

இப்போது மூச்சுக்காற்றோடு ஸோ என்ற நாதத்தை (ஓசையை) மனதால் ஜபித்துக் கொண்டு ஆக்ஞா சக்கரத்திலிருந்து மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது மூச்சுக் காற்றோடு ஹம் என்ற நாதத்தை ஜபித்துக் கொண்டு மூலாதாரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு சங்கிலித் தொடர் போல், உள் மூச்சில் உடலின் முன் பக்கத்தில் புருவ நடுவில் உள்ள ஆக்ஞாவி லிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தி தொடர்ந்து வெளிமூச்சின் போது மூலாதாரத்திலிருந்து உடலின் பின் பக்கத்தில் முதுகின் வழியாக புருவ நடுவுக்கு நேராக உள்ள தலையின் பின் பகுதி வரை கவனம் செலுத்தவும்.

இப்பயிற்சியின் போது பிராணாயாம பயிற்சி போல மூச்சுக் காற்றை ஆழமாக உள்ளுக்கு இழுக்கவோ வெளியே விடவோ கூடாது. மூச்சின் இயக்கம் இயற்கையாக இருக்க வேண்டும்.

உங்கள் மூச்சுடன் உங்கள் உணர்வும் இணைந்து ஸோ-ஹம் என்ற நாதத்தை உண்டு பண்ண வேண்டும். அதே சமயம் சக்கரங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நினைக்க வேண்டும். வேகமில்லாமல் அமைதியாக எந்த அளவிற்கு மூச்சுடன் லோ-ஹம் என்ற ஆசையை முழு விழிப்புணர்வோடு உண்டு பண்ணுகிறீர்களோ, அந்த அளவிற்கு விரைவில் புலன் வழி செல்லும் புற உலக உணர்வு குறையும். நீண்ட நேரம் தியானம் செய்தாலும் சில நிமிடமே கழிந்தது போல இருக்கும்.

செய்முறை-2 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் கைவிரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் அல்லது அகோசரி முத்திரை செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் முச்சுக்காற்று உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.

இப்போது மூலாதார சக்கரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை உடலின் முன் பக்கதத்திலிருந்து கவனம் செலுத்திக் கொண்டு வந்து ஆக்ஞாவிலிருந்து தலையின் பின் பகுதி வழியாக முதுகெலும்பின் கீழ் உள்ள மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரை கவனம் செலுத்தும் போது மூலா என்ற ஒன்று மேல் நோக்கி செல்வதாகவும், ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தும் போது ஹம் என்ற ஓசை கீழ் நேக்கி செல்வதாக மனதால் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் போது  மூலாதாரத்தில் இருந்து ஆக்ஞா, ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை மீண்டும் மீண்டும் உங்கள் உணர்வு சக்கரங்கள் உள்ள உடல் பகுதியின் மீது மட்டுமே இருக்க வேண்டும். சுவாச இயக்கத்தின் மீது கவனம் செலுத்தக் கூடாது.

செய்முறை 1ல் மூச்சுக் காற்றோடு இலோ-ஹம் என்ற ஒலியை உண்டாக்கிச் செய்யும் லோவும் தியானமுறை கூறப்பட்டது. செய்முறை 2-ல் மூச்சுக் காற்றோடு இணைந்து லோ-ஹம் மந்திரத்தை தியானிக்காமல் சக்கரங்களை மட்டும் நினைத்து லோ-ஹம் தியானத்தை செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

பயிற்சி குறிப்பு : இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் செய்முறை பயிற்சி-1ஐ யோ அல்லது செய்முறை பயிற்சி 2ஐ யோ ஒரு நாளில் ஒருவேளை பயிற்சி செய்யலாம். இரண்டு தியான முறைகளையும் செய்ய முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு தியான முறையை கடைப்பிடிக்கலாம்.

இந்த பயிற்சியை வெறும் வயிற்றோடு இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். உணவு உட்கொண்ட பிறகு 4 மணி நேரம் கழித்து இந்த தியான பயிற்சியை செய்யலாம். காலை சூரிய உதயத்திற்கு முன்பும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்த தியான பயிற்சியை செய்வது சிறந்தது.

பலன்கள் : சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். மன அழுத்தம் நீங்குவதற்காக செய்யும் பவன முக்தாசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய முன்னேற்றம் ஒன்றன்பின் ஒன்றாக செய்ய முடியாதவர்கள் பிராணாயாமம் அல்லது தியான பயிற்சியை மட்டும் கூட செய்யலாம். பவன முக்தாசனம், பிராணாயாமம், லோ-ஹம் தியானம் ஆகிய மூன்றில் எதை பயிற்சி செய்தாலும் பயிற்சியின் முடிவில் சுவாசத்தில் ஓய்வாக 5 நிமிடம் இருக்க வேண்டும்.

Related posts

எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள்

nathan

சின்னம்மை தாக்கினால் ஏற்படுத்தும் வடுவை குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

nathan

எந்த டியோடரண்டை பயன்படுத்தி வியர்வை வாடையை போக்கலாம்…..

sangika

டலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரண மாகி விடும். காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

nathan

ஜிம்முக்குப் போகாமலே உடல் எடையை குறைக்கும் பயிற்சி

nathan

உடல் எடையை அதிகரிக்க!

nathan

காலை உணவை தவிர்ப்பவரா?

nathan

உடல் சூட்டை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan

இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி?

nathan