23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

நெற்றியில் சொர சொரப்பை போக்கும் எளிய சிகிச்சை

Huntington-Beach-Forehead-and-Brow-Liftசிலருக்கு நெற்றியில் பொரிப்பொரியாக வரும். அதற்கு காரணம் தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும்.

இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு. ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து உரசி. அதே அளவு சந்தனம் சேர்த்துக் இரண்டையும் கலந்து பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால், பொரிகள் மறையத் தொடங்கும்.

இதோடு, கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள்.

கசகசா – 2 டீஸ்பூனுடன், 10 கருந்துளசி இலைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள். மெல்லிய ஆர்கண்டி துணியை ‘ஜில்’ தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை ‘பத்து’ போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள்.

இப்படி, வாரம் ஒரு முறை செய்யுங்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே, துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இந்த சிகிச்சையின்போது முகத்துக்கு ‘க்ரீம்’ போடுவதைத் தவிர்ப்பது நல்லது.

Related posts

பொன்னிற மேனியின் அழகிற்கு சந்தனத்தை எப்படி பயன்படுத்துவது…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருப்பான ‘அந்த’ இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

nathan

வெளிவந்த தகவல் ! ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீது பணமோசடி வழக்கு

nathan

அவரவர் முக அமைப்பிற்கேற்ற டிப்ஸ்!…

sangika

இரண்டாம் கல்யாணம்.. பிரபல நடிகருடன் ரகசிய காதலில் நடிகை சமந்தா..

nathan

காது அழகு குறிப்புகள்.

nathan

வெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்

nathan

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்க குளிக்கும் நீரில் சிறிது பால் கலந்து குளிப்பதால் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்ன தெரியுமா?

nathan