23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mysore bonda
அறுசுவைசமையல் குறிப்புகள்சிற்றுண்டி வகைகள்

சுவையான மைசூர் போண்டா….

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 1/2 கப்,
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது),
மிளகு – 1 டீஸ்பூன்,
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
அரிசி மாவு – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

mysore bonda

செய்முறை :

முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் நெருப்பை மிதமாக வைத்து, எண்ணெயில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான மைசூர் போண்டா ரெடி

Related posts

சுவையான அவல் உப்புமா

nathan

சுவையான ரவா லட்டு!…

sangika

சிவப்பு அவல் புட்டு

nathan

அரட்டிப்பூவு போஸா

nathan

சுவையான வெங்காய பொடி தோசை

nathan

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

nathan

அட்டகாசமான மைசூர் பாக்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைட் டிஷ் ஆலு பாலக்

nathan