25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
053.800.668.160.90
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் வழுக்கை தலையில் முடி வளர தயிரை எப்படி பயன்படுத்த வேண்டும்?

தலைப்பகுதிகளில் காணப்படும் ஃபோலிகிள் எனப்படும் சிறு துவாரங்கள் தான் முடிகளுக்கு உறுதியை அளிக்கின்றன. மேலும் தலையில் வழுக்கை விழுவதற்கு இந்தத் துவாரங்கள் மிகவும் சிறிய அளவில் குறுகுவதே காரணமாக உள்ளது.

மேலும் வழுக்கை பிரச்சனையால் பல ஆண்கள் இன்று மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இத்தகைய முடி கொட்டும் பிரச்சினைக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைக்க தயிரை கொண்டு எப்படி சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.

அடர்த்தியான முடிக்கு
  • தலையில் அதிகமாக முடி கொட்டும் பிரச்சினைக்கு கறிவேப்பில்லையுடன் தயிர் சேர்த்து இதனை தொடர்ந்து முடியில் தேய்துவந்தாலே முடி கொட்டுவது குறைந்து விடும்.
  • அதற்கு கறிவேப்பில்லை மற்றும் மருதாணியை ஒன்றாக அரைத்து பிறகு இதில் 3 ஸ்பூன் எடுத்து கொண்டு, தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தேய்த்து 45 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு உங்களின் முடி கொட்டும் பிரச்சினைக்கு விரைவிலே முற்றுப்புள்ளி வைக்கும்.

625.0.560.320.160.700.053.800.668.160.90

முடியின் வளர்ச்சிக்கு
  • சிலருக்கு முடி கொட்டி விட்டு மிகவும் மெலிசான முடியே இருக்கும். செம்பருத்தி இலை தலையில் முடி உதிர்ந்த பின்பு அங்கு முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றது.
  • மேலும் செம்பருத்தி இலையை தயிருடன் சேர்த்து அரைத்து பிறகு இந்த பேஸ்டை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 5 முதல் 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்ட பின்பு கொஞ்ச நேரம் ஆறவிட்டு பிறகு இதனை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளிக்கவும்.
மென்மையான முடிக்கு
  • சிலருக்கு முடி எப்பொழுதும் வறட்சியாகவும் சொர சொரப்பாகவும் இருக்கும். மேலும் முடி எப்பொழுதும் மென்மையாக வைத்து கொள்ள எலுமிச்சை சாறு மிகவும் உதவும்.
  • தயிருடன் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து பிறகு தேனையும் இவற்றுடன் சேர்த்து தலையில் தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் முடி மிகவும் மென்மையாகவும், உறுதியாகவும் இருக்கும்.

 

பொடுகை போக்க
  • முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் தலையில் உள்ள பொடுகு தான். இதனை முதலில் ஒழித்து விட்டால் பிறகு முடி உதிரும் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
  • தயிருடன் வெங்காய சாறு வெந்தய பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்கவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே பொடுகு தொல்லை ஒழிந்து முடி உதிராமல் இருக்கும்.

 

Related posts

பொடுகு முதல் நரைமுடி வரை முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய

nathan

முடி உதிர்கின்றதா ? வருத்தம் வேண்டாம்! உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகள் !

nathan

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க

nathan

கூந்தல் நீளமாக இல்லைன்னு வருத்தமா? உங்களுக்கு உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களது கருமையான கேசம் பழுப்பு நிறமாக மாறுகிறதா?

nathan

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சீன மருத்துவம்!!

nathan

மிளகின் மருத்துவ குணங்கள்…

sangika

தலைமுடி நன்கு வளர வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan