fgtuj
முகப் பராமரிப்பு

உங்களுக்கு இயற்கை முறையில் அதிசய முக அழகை பெற வேண்டுமா ???

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் எற்படும் கருமை நிறம் மாறும்.
பூசணிக்காய் சிறு துண்டுகளாக்கி அதை கண்களைச் சுற்றி வைப்பதால், கண்ணை சுற்றி ஏற்படும் கருமை நிறம் மாறும்
பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர, முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி மிதமான சுடுநீரில் கழுவ, முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
வெள்ளரிச்சாறு, சந்தனபொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.fgtuj

Related posts

கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

முகப்பொலிவைத் தரும் இலைகள்

nathan

முகத்தில் ஏற்படும் பக்றீரியா பாதிப்பும்… அதனை தடுக்கும் வழிகளும்!

sangika

பவுடர் போட போறீங்களா

nathan

உங்களுக்கு பரு உடைந்து புண்ணாகாமல் அப்படியே அமுங்கணும்மா?

nathan

ஹெர்பல் ஃபேஷியல் facial tips in tamil

nathan

வாழ்நாள் முழுவதும் அழகாக இருக்க விரும்புகிறீர்களா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்

nathan

நீங்க ஒரே ராத்திரியில இப்படி சிகப்பாக இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்…

nathan