25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
pregent2
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கருவுற்றிருப்பது உறுதி செய்யப்படுவதற்கு முன்னரே இந்த அறிகுறிகள் தோன்றும்!

கர்ப்பம் தரித்தல் என்பது ஒவ்வொரு பெண்ணினதும் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு உன்னதமான விடயமாகும். முன்பெல்லாம் பெண் ஒருத்தி திருமணம் ஆகியவுடன் ஒரு சில மாதங்களிலேயே குழந்தை பெற்றெடுக்கத் தயாராகி விடுவாள். எனினும் தற்போதெல்லாம் குடும்ப சூழ்நிலை, தொழில் வாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களைக் கருத்திற் கொண்டு குழந்தை பெற்றெடுப்பதை தள்ளிப் போடுகின்றார்கள்.

இவ்வாறிருக்க, வேலைப்பழு காரணமாக சிலர் கர்ப்பம் தரித்த பின்னும் தான் கருவுற்றிருப்பது தொடர்பில் போதிய அறிவின்றி இருப்பார்கள். கர்ப்பம் தரித்து சில மாதங்கள் ஆகும் வரை சிலருக்கு தான் கருவுற்றிருப்பது தெரியவராது. எனினும், அவர்களின் உடல் நிலையை வைத்து அதனை அறிய முடியும் என்கிறது நவீன வைத்தியம்.

01. சுவாசிப்பதில் சிரமம்
நாளாந்த வேலைகளை மேற்கொள்ளும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். கருவுற்றிருப்பின் இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

02. மார்பகங்களில் வித்தியாசம்
ஒரு பெண் கருவுற்றவுடன் மார்பகங்களின் அளவுகளில் வித்தியாசம் ஏற்படும். அதாவது மார்பகங்கள் பெருக்க ஆரம்பிக்கும். அத்துடன், முலைக் காம்புகளின் அளவுகள் பெருக்க ஆரம்பிப்பதுடன் நிறமும் மாறும்.

03. சில உணவுப் பொருட்கள் தொடர்பில் விருப்பு அல்லது வெறுப்பு ஏற்படும்
கருவுறுவதற்கு முன்னதாக விரும்பி உட்கொண்ட சில உணவுப் பொருட்கள் மற்றும் வெறுத்த உணவுப் பொருட்கள் கருவுற்றதன் பின்னர் மாற்றம் அடைதல். ஏற்கனவே வெறுத்து ஒதுக்கிய பொருட்களை கருவுற்றதன் பின்னர் உட்கொள்ள வேண்டும் போல இருத்தல். அதே நேரம் விரும்பி உட்கொண்ட உணவுப் பொருட்கள் கருவுற்றதன் பின்னர் சுவையற்றதாக தோன்றும்.

pregent2

04. தொடர்ச்சியான சோர்வு
வழமையாகச் செய்து வந்த வேலைகளைச் செய்ய முற்படும் போது சோர்வாக இருப்பது போல் உணர்தல். சில சமயங்களில் வழமையாகச் செய்யும் வேலைகளைக் கூட செய்ய முடியாது காணப்படும். நேரம் இருந்தும் வேலைகளைச் செய்ய முடியாதிருத்தல் கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.

05. அதிகபடியான குமட்டல் ஏற்படல்
உட்கொண்ட உணவுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லாத போதிலும் அடிக்கடி குமட்டல் ஏற்படுதல் கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்று.

06. மாதவிடாய் தள்ளிப் போதல்
மாதாந்தம் ஏற்படும் மாதவிடாய் சுழற்றியானது தள்ளிப் போவதென்பது கருவுற்றிருப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

07. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
கருவுற்றவுடன் வழமையை விட எமது உடலில் அதிகளவு நீர் சேமிக்கப்படும். இதனால் வழமையை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும்.

08. தசைப் பிடிப்பு
கருவுற்ற காலங்களில் அடிக்கடி தசைப் பிடிப்பு ஏற்படும். இனப்பெருக்க உறுப்புக்கள் குழந்தை பிரசவத்திற்கு தயாராவதாலேயே இந்த தசைப்பிடிப்பு ஏற்படுகின்றது.

09. மந்தமான மனநிலை
எப்போதும் இல்லாதவாறு மந்தமான மனநிலை ஏற்படுதல். காரணமின்றி நண்பர்கள் மற்றும் கணவரிடம் கோபம் கொள்ளுதல் என்பன ஏற்படும். இது குறித்து கவலையடையத் தேவையில்லை. ஏனெனில் உடலில் உள்ள ஹோர்மோன் அளவுகளின் மாற்றத்தாலேயே இந்த மனநிலை ஏற்படுகின்றது

Related posts

கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்

nathan

இதோ எளிய நிவாரணம்! குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

nathan

எச்சரிக்கை! உங்களால் 45 நொடியில் இதனை செய்ய முடியலனா உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்…

nathan

மருத்துவர்களின் எச்சரிக்கை! சி.டி ஸ்கேன் வேண்டாம்! இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றிய 10 ஆச்சரியமான விஷயங்கள்!!

nathan

குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா கொத்தமல்லி மூலிகை எப்படி ஆண்மையை அதிகரிக்கும் ?

nathan

ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்

nathan