29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
39064680
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா சீரக நீரை காலையில் குடித்து வந்தால் 20 நாட்களில் உடல் எடையை குறைத்து விடலாம்…!

உடல் எடையை குறைக்க பல்வேறு வழி முறைகளை நாம் கையாண்டிருப்போம். மிக கடினமான செய்முறைகளை கூட நாம் முயற்சித்து சோர்ந்திருப்போம். ஆனால், இவற்றில் கிடைக்காத பலன்கள் வெறும் தண்ணீரை கொண்டு நம்மால் அடைய முடியும் என்றால் அது எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். ஆமாங்க…வெறும் சீராக நீரை குடித்து வந்தால் பலவித அற்புதங்கள் உடலில் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதில் ஏரளமான அளவில் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும். பெரும்பாலும் இந்த முறையை ஆயுர்வேத முறையாகவும் கருத்துவர்களாம். இந்த நீரின் முக்கியத்துவத்தையும், இதனால் எவ்வாறு 20 நாட்களிலே உடல் எடையை குறைக்க முடியும் என்பதையும், மேலும் மலட்டு தன்மையை எப்படி குணப்படுத்தும் என்பதையும் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

விபரீத முடிவுகள்..!
உடல் எடை கூடி விட்டால் நம்மில் பலர் உலகமே அழிந்து விட்டது போல கவலைப்படுவார்கள். எடை உயர்வு பலவித வகையில் நம்மை பாதிக்க செய்கிறது. உடல் எடை கூடி கொண்டே செல்வதால் ஆரோக்கியத்தையும், உளவியல் நலனையும் நாம் கெடுத்து கொள்கிறோம். பலர் உடல் எடையை உடனே குறைக்க வேண்டும் என்பதற்காக விபரீத முறையில் முயற்சி செய்து உயிருக்கே உலையாக வந்த கதைகள் கூட இருக்கிறது.

மாயாஜாலங்கள் செய்யும் ஜலம்..! மருத்துவர்கள் உடல் எடையை குறைக்க ஒரு எளிய வழியை சொல்கின்றனர். அதுதான், இந்த சீராக நீர். இதில் எண்ணற்ற மகத்துவங்கள் உள்ளன. குறிப்பாக உடல் எடையை 20 நாட்களில் குறைக்க இந்த மாயாஜால நீர் உதவும். அத்துடன் அடி வயிற்றில் சேர கூடிய கொழுப்பையும், அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள தொப்பையையும் இது 20 நாட்களில் குறைத்து விடும்.

மிக குறைந்த கலோரிகள் 1 ஸ்பூன் சீரகத்தில் வெறும் 7 கலோரிகளே உள்ளன. ஆதலால் இதனை குடிப்பதால் உடல் குறையுமே தவிர, ஒரு போதும் கூடாது. முக்கியமாக கொழுப்புக்களை கரைக்க இந்த சீரக நீர் பெரிதும் பயன்படும். தொடர்ந்து 20 நாட்கள் இந்த சீரக நீர் குடித்து வந்தால் உடல் பருமன் சட்டென குறையும்.

விஞ்ஞானிகளில் கருத்து என்ன…? சீரகத்தில் அதிகமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதாம். அதாவது, இதில் உள்ள வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் எ முக்கியமான தாதுக்களாகும். அத்துடன் இதில் மக்னீஸ் மற்றும் காப்பர் அதிக அளவில் உள்ளது. எனவே, உடல் பருமன் கூடாமல் இந்த ஊட்டசத்துக்கள் நமது உடலை காத்து கொள்ளும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

கெட்ட கொலெஸ்ட்ரோலை அழிக்க…! உடலில் சேர கூடிய கெட்ட கொலஸ்டரோலை அழிக்க ஒரு அற்புத வழிதான் இந்த சீரகநீர். ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிக படியான கெட்ட கொலஸ்டரோலை 20 நாட்களிலே இந்த சீரக நீர் கரைத்து விடுமாம். மேலும், நல்ல கொலஸ்டரோலை சீரான அளவில் உடலில் வைத்து கொள்ளும்.

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க தினமும் சீரக நீரை குடித்து வந்தால் உடல் பருமன் குறைவதோடு வேறு சில நன்மைகளும் நடக்குமாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவும். இந்த நீர் இன்சுலின் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சீரக நீர் மிக சிறந்த மருந்தாகும்.

மலட்டு தன்மையை போக்கும்… மலட்டு தன்மை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீரக நீர் மிக பெரிய வரப்பிரசாதம். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து பிறப்புறுப்பில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இவை பார்த்து கொள்ளும். மேலும், அதிக ஆற்றலையும் இந்த சீரகநீர் தருமாம்.

செரிமான கோளாறுகள் அடிக்கடி செரிமான கோளாறால் பாதிக்கப்படுவோர்க்கு சீரக நீர் உதவும். செரிமானத்தை நல்ல முறையில் பார்த்து கொள்ள சீரக நீர் போதும். மேலும், எதை சாப்பிட்டாலும் நெஞ்சிலே இருந்தால் அவர்களும் இந்த நீரை குடித்து வந்தால் அஜீராண பிரச்சினை குணமாகும்.

அழுக்குகளை நீக்கும் அற்புத நீர்…! உடலில் சேர்ந்துள்ள ஏராளமான அழுக்குகளை நம்மால் மாத்திரைகளை கொண்டோ அல்லது வேறு எதனையும் கொண்டே வெளியேற்ற முடியாது. சீரக நீரை குடித்து வந்தால் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை உடனே நீக்கி விடும். மேலும் மலசிக்கல், குடல் வீக்கம் போன்றவற்றையும் இது குணப்படுத்தும்.

தயாரிக்கும் முறை எப்படி..? முதல் நாள் இரவே சீரகத்தை நீரில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு அடுத்த நாள் காலையில் இதே நீரை மிதமான சூட்டில் கொதிக்க விட்டு குடித்து வரலாம். இல்லையென்றால் அப்படியே இந்த நீரை குடித்தும் வரலாம். இவ்வாறு 20 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை எளிமையாக குறையும்.

சீரகமும் எலுமிச்சையும்… இரவு முழுக்க சீரகம் ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதனுடன் பாதி எலுமிச்சையை பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். இந்த முறையும் கொழுப்புக்களை நீக்க உதவும் எளிய வழியாகும். மேலும், இது எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்.

சீரகமும் இலவங்கமும்… இந்த சீரக நீர் தயாரிக்கும் முறையும் அருமையான தீர்வை நமக்கு தரும். இரவில் சீரகம் ஊற வாய்த்த நீரை மட்டும் தனியாக வடிகட்டி கொள்ள வேண்டும். அடுத்து, இந்த நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு, சிறிது இலவங்க பொடியை சேர்க்கவும். பிறகு நான்கும் கலக்கி கொண்டு இதனை குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் மன அழுத்தம் குறைந்து, இன்சுலின் அளவு சீராக அதிகரிக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்… இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும், சீரான அளவில் உடல் எடையை வைத்து கொள்ளவும் இந்த நீர் பயன்படும். முதலில் இரவு முழுக்க சீரகம் ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதனை வடிகட்டி கொண்டு 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கொண்டி குடித்தால் நல்ல பலனை பெறலாம்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

39064680

Related posts

ஊளைச்சதைக் கோளாறு

nathan

உடல்பருமன் குறைக்கும் உணவுகள்!

nathan

நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்

nathan

பேரிச்சம் பழம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?

nathan

8 வகையான கொழுப்பை எரிக்கும் உணவுகள் உங்கள் எடையை இழக்க உதவுகிறது

nathan

எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்!

nathan

ஸ்லிம்மாக வேண்டுமா? இஞ்சி கற்றாழை ஜூஸ் குடிங்க

nathan

விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்

nathan