29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
cara terbaik menghindari nyeri haid
மருத்துவ குறிப்பு

அவசியம் படிக்க..இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்…

கருப்பை கட்டிகள்

ஆனால் 20% பெண்களுக்கு உண்டாகும் இத்தகைய நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.

மாதவிடாய்

“மாதவிடாய் வருவதும் போவதும் இயல்பு என்பது போல் இந்த கட்டியும் அதனால் உண்டாகும் வலியும் மறைய வேண்டும் இல்லையா? என்று கேட்கிறார் டாக்டர். ஷிரசியான். ஒருவேளை இந்த வலி மறையாமல் இருந்தால் குறைந்த பட்சம் அல்ட்ரா சவுண்ட் செய்து பார்ப்பது நல்லது” என்று அவர் கூறுகிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தீராத இடுப்பு வலி

இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த இடத்தில் தான் கருப்பை உள்ளது என்று டாக்டர்.ஷிராசியான் கூறுகிறார். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.

கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள் என்று டாக்டர். ஷிராசியான கூறுகிறார். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது.

இந்த நிலை ஏற்படும்போது அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்வது மிகவும் நல்லது.

வயிறு வீக்கம்

வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்பு படுத்தலாம்.

பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் சில கட்டிகள் ஒரு தர்பூசணி அளவிற்கு பெரிதாக வளரும் தன்மை கொண்டவை இதனைக் கூறுவது டாக்டர். எலோஸ் சாப்மன் டேவிஸ், வெய்ல் கார்னெல் மெடிசின் மற்றும் நியூயார்க்-பிரஸ்பிபையரின் ஒரு மகளிர் புற்றுநோயியல் நிபுணர்.

பல பெண்கள் இதனை எடை அதிகரிப்பு என்று கூறுவார்கள். ஆனால் அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.

எப்போதும் வயிறு நிரம்பிய உணர்வு

கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். “ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும்” என்று டாக்டர்.ஷிராசியான் கூறுகிறார். இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும்.

சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது என்று டாக்டர்.சாப்மன் டேவிஸ் கூறுகிறார்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு

தொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது என்று டாக்டர்.சாப்மன் டேவிஸ் கூறுகிறார். உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும் என்று அவர் கூறுகிறார். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

உறவில் வலி

கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

முதுகு மற்றும் கால் வலி

உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம் என்று டாக்டர்.சாப்மன் விவரிக்கிறார். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.cara terbaik menghindari nyeri haid

Related posts

கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெரியுமா?

nathan

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்..!!

nathan

ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை!!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!!!

nathan

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத நெகடிவ் வார்த்தைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன் என்று தெரியுமா?

nathan

பெண்களே மாமியாரை இப்படி சமாளியுங்க.!

nathan

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

nathan