24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
00.668.160.90 1
இளமையாக இருக்க

உங்களுக்கு தெரியுமா வயதாவதை தள்ளி போட உதவும் சில ஆரோக்கியமான உணவுகள்

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள். இதற்காக பல்வேறு விதமான க்ரீம்கள், மாதம் ஒருமுறை அழகு நிலையம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.

அவ்வாறு நீங்கள் சென்றாலும், செல்கள் தேய்மானம் அடைந்து தோல்கள் விரைவில் சுருங்கிவிடும் எனவே நீங்கள் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொண்டாலே என்றென்றும் இளமை தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

மாம்பழம்

இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டாகரோட்டீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

கீரை

கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் இருக்கலாம்.

ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ப்ராக்கோலி

பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

முட்டை

முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.

குடைமிளகாய்

குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டாகரோட்டீன் அதிகம் உள்ளன.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பால்

பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது.

இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன் இளமையோடு இருக்கலாம்.

தக்காளி

தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கு மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும்.

ஆகவே இவற்றை சாப்பிட்டால் இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள்

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும்.

அதிலும் குறிப்பாக வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டிஆ க்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

உடற்பயிற்சி

உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு உடற்பயிற்சி.மேலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும்.

Related posts

இளமையை தக்கவைக்கும் இந்தியாவின் பாரம்பரிய அழகு சாதனப் பொருட்கள்!

nathan

நாற்பதைத் தொடுகிறீர்களா?

nathan

ஒரே வாரத்தில் உங்கள் இளமையை திரும்ப பெற வேண்டுமா? இதைப் படிங்க.

nathan

இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்

nathan

இளமை தோற்றம் தரும் எண்ணெய் மஜாஜ்

nathan

தினமும் மதியம் குட்டித் தூக்கம் போட்டா… உங்க அழகை அதிகரிக்கலாம்!

nathan

பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்கூடாதவை!…

sangika

இளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய சில ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்

nathan