தினமும் இரு வேளைகள் பல் துலக்குதல், வாய்கொப்பளித்தல், வருடத்திற்கு இரு தடவைகள் பல் மருத்துவரை நாடுதல் போன்றவற்றை செய்தாலும் நமக்கே தெரியாமல் பற்கள் சிதைவடைவதை தடுக்க முடிவதில்லை.
மிகவும் சூடான் அல்லது குளிரான பாண வகைகள், உணவுகள் சாப்பிடுவதனால் மற்றும் அடிக்கடி அரைத்தல், மெல்லுதல், விழுங்குதல் போன்ற செயற்பாடுகளினால் பற்களின் ஆரோக்கியத்தில் பங்கம் ஏற்படத் தான் செய்கிறது. சிலர் அவர்களின் பற்களால் சோடா போத்தல் போன்றவற்றை திறப்பதனால் அதன் வலிமைக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தும்.
ஏன் பற்கள் சிதைவடைய ஆரம்பிக்கின்றன?
1.ஜஸ்கட்டி சாப்பிடுதல்.
ஜஸ்கட்டிகளைச் சாப்பிடுவதனால் மென்மையான திசுக்கள் பாதிப்படைவதுடன் பற்கள் உடையவும் ஆரம்பித்து விடுகின்றன.
2.காபி.
காபி அய்ஜிகம் உட்கொல்வதனால் அதிகமான கறைகள் பற்களில் படிவதுடன், பக்ட்டீரியா வளர்ச்சி ஏற்படுவதுடன் வாய்துர்நாற்றம் அடைவதைத் தடுக்க முடியாது.
3.நகம் கடித்தல்.
நகங்கடிக்கும் கெட்ட பழக்கம் பலருக்கு இருப்பதனால் பற் சிதைவுகள் ஏற்படுவதுடன் தாடைகளின் தொழிற்பாட்டிலும் பிரச்சினை ஏற்படுகிறது.
4.நாக்குகளில் அணிகலன் அணிதல்.
நாக்குகளில் மெட்டல் அணிகலன்கள் அணிவதனால் அவை முரசுகளில் தேய்த்துப் பாதிப்படையச் செய்வதுடன். பக்டீரியாத் தொற்றுக்களும் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
5.எலுமிச்சைப் பானத்தை அருந்துதல்.
எலுமிச்சை, தோடை, திராட்சை அதிகளவில் அமிலத் தன்மை உள்ள பழங்கள். இதனை உட்கொள்வதனால் பற்களின் எனாமல்கள் சிதைகின்றன.
6.பற்களை கடித்தல்.
சிலருக்கு பற்களை இறுக்கிக் கடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பற்களில் வலிகல் ஏற்படுவதுடன் சிதைவடையவும் செய்கிறது.
7.இனிப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிடுதல்.
இனிப்பு பண்டங்கள் அதிகளவில் உட்கொள்வதனால் அவை பற்களிற்குள் சேர்ந்து அமிலத் தன்மையை ஏற்படுத்தும். இதனால் பற்கலின் எனாமல்கள் அரிப்படைவதை தடுக்க முடியாது.
8.சோடா.
சோடாவில் உள்ள இனிப்பு பற்களில் காயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள
பொஸ்பறிக் அமிலமும் சிட்டிக் அமிலமும் பற்களை பாத்திக்கச் செய்வதைத் தடுக்க முடியாது.
9.சாப்பிட்ட உடன் பல் துலக்குதல்.
சாப்பிட்ட உடன் பல் துலக்குவதனால் சாப்பாட்டு அமிலங்கள் பல் எனாமல்களை பாதிக்கச் செய்கிறது. சாப்பிட்டு 30 நிமிடங்கள்இன் பின் பல் துலக்குவதே வரவேற்கத் தக்கது.
10.பற்தூரிகைகளை மாற்றாமை.
பற்தூரிகைகளை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவது அவசியமானது. அத்துடன் 3 அல்லது 4 மாத இடைவெளிகளில் பற்தீரிகைகளை மாற்ற வேண்டியது அவசியமானது