coffee powder face pack
முகப் பராமரிப்பு

உங்களுக்கான தீர்வு! இளமையான முகத்திற்கு காபி பவுடர் பேஸ் பேக்

முகத்தில் இளமையான, உடனடி பொலிவு வேண்டுமா? அழகு குறிப்புகளுக்கு காபியின் பயன்பாடுகள் என்ன அதை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ளலாம்.

இளமையான முகத்திற்கு காபி பவுடர் பேஸ் பேக்
முகத்தில் இளமையான, உடனடி பொலிவு வேண்டுமா? காபியை இப்படி யூஸ் பண்ணுங்க! காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் சருமத்தில் உள்ள கொலோஜன் என்று கூறப்படும் சருமத்தை இருக்கி பிடிக்கும் தசையை மேன்படுத்த உதவும். இதனால் தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும், சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உறித்து நீக்கும்.

* இரண்டு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் தோன்றும்.

* பளிச்சென்று முகம் தோன்ற, கடலை மாவுடன் காபி பவுடரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்கி, முகத்தில் அப்லை செய்து காய்ந்தவுடன் கழுவி விடவும்.

* காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல்ஸ் நீங்கி முகம் இன்ஸ்டன்ட் பொலிவுபெறும்.

* காபி பவுடரை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலும்மிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.

* கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி பவுடர் சேர்த்து ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.

coffee powder face pack

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!

nathan

மஞ்சள் ஃபேஷ் பேக் போடும் போது தவிர்க்க வேண்டியவை

nathan

உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாப்பது எப்படி?

nathan

கோடை காலத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசை சருமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது

nathan

முகத்தில் கரும்புள்ளியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கு எந்த குறையும் இல்லாத சருமம் வேண்டுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

குளிர்கால வறட்சி இல்லாத மென்மையான சருமம் கிடைக்க ஒரு ஈஸி டிப்ஸ் :

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கண்ணிமை அடர்த்தி பெற வீட்டிலேயே சுலபமாக மஸ்காரா தயாரிப்பது எப்படி?

nathan