மாரடைப்பு என்பது பயங்கரமானதொன்றாகும். எனினும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னதாக எமது உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து மாரடைப்பு ஏற்படப் போகின்றது என்பதனை அறியலாம்.
அவை மாரடைப்பு ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவோ, சில நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது சில நிமிடங்களுக்கு முன்னதாகவோ ஏற்படலாம்.
அதனை கருத்திற் கொண்டு நாம் வைத்தியரை தக்க நேரத்தில் நாட வேண்டும். அதுசரி, அந்த அறிகுறிகள் என்னவென்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.
01. மாரடைப்பு ஏற்படப் போகின்றது என்பதற்கு அறிகுறி காட்டும் வகையில் அதிகபடியான பதட்டம் ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.
02. அடி வயிறு, கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படின் அவதானமாக இருத்தல் வேண்டும். இதைத் தொடர்ந்து குறித்த நபருக்கு பசி ஏற்படுவதும் குறைவடையும். இது மாரடைப்பிற்கான அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
03. சிலருக்கு அதிகபடியான இருமல் ஏற்பட்டு இரத்தம் வெளியேறும். சிலருக்கு மூச்சிரைப்பு மற்றும் தொடர்ச்சியான இருமல் என்பன ஏற்படும். இது போன்ற தருணங்களில் அலட்சியமாக இருக்கக்கூடாது.
04. சிலருக்கு தாடை, முதுகுப்புறம், தோல்கள், கைகள் மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படும். இது சாதாரணமாகத் தோன்றினாலும் பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இருப்பினும், பின்வரும் அறிகுறிகளை மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறிகளாகக் கருத முடியும்.
01. குளிருதல் போன்ற உணர்வு
02. குமட்டல்
03. தலைசுற்று
04. மார்பு பகுதியில் வலி
05. சுவாசிப்பதில் சிரமம்.