25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
toenail fungus c
கால்கள் பராமரிப்பு

உங்க கால் விரல் நகம் இப்படி அசிங்கமா இருக்கா?அப்போ கட்டாயம் இத படிங்க!

அழகு பராமரிப்பில் கை மற்றும் கால்களின் அழகைப் பராமரிக்க கொடுக்கப்படுவது தான் மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர். இந்த இரண்டு செயல்களை செய்வதன் மூலம் கை மற்றும் கால் விரல் நகங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் விரல் நகங்களின் அழகையும், ஆரோக்கியத்தையும் தொற்றுகள் அழிக்கும். நகத் தொற்றுகள் என்பது பூஞ்சை தொற்றுகளாகும். இது ஒன்று அல்லது இரண்டு விரல் நகங்களைப் பாதிக்கும்.

பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டால் நகங்களின் அடிப்பகுதி வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும் மற்றும் தீவிரம் ஆகும் போது முழு நகமும் நிறம் மாறிவிடும். எனவே விரல் நகங்களில் தொற்றுகள் ஏற்பட்டால், அதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்க வேண்டியது அவசியம். இந்த கட்டுரையில் கால் விரல் நகங்களின் அழகையும், ஆரோக்கியத்தையும் அழிக்கும் பூஞ்சை தொற்றுக்களை இயற்கையாகவே வீட்டிலேயே சரிசெய்யும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்க

ஆல்கஹால் தினமும் காலை மற்றும் மாலையில் 2 துளிகள் ஆல்கஹாலை பாதிக்கப்பட்ட விரல் நகங்களின் மீது தடவி வாருங்கள். இப்படி சில மாதங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், தொற்றுக்களில் இருந்து விடுபடலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் லேசாக அசிட்டிக் பண்புகள் உள்ளன. இது நகங்களைத் தாக்கிய பூஞ்சைகளைப் பரவாமல் தடுக்கும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சரிசம அளவில் எடுத்து, அதனுள் பாதிக்கப்பட்ட விரல் நகங்களை 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் நகங்களை நன்கு உலர்த்த வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், நகங்களில் ஏற்பட்ட பூஞ்சை தொற்றுக்கள் நீங்கும்.

பேக்கிங் சோடா 4 கப் நீரில், 1/2 கப் பேக்கிங் சோடா, 1/2 கப் 3% ஹைட்ரஜென் பெராக்ஸைடு மற்றும் 1/2 கப் எப்சம் உப்பு ஆகியவற்றை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் 1/4 கப் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு அந்த கலவையினுள் பாதிக்கப்பட்ட விரல் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து, சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வர வேண்டும்.

சீமைச் சாமந்தி சீமைச்சாமந்தி டீ பையை பயன்படுத்திய பின், அதனை பாதிக்கப்பட்ட விரல் நகங்களின் மீது தினமும் 2-3 முறை வைத்து வர வேண்டும். இப்படி செய்வதனால் நிச்சயம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய்க்கு குணப்படுத்தும் திறன் உள்ளது. இதில் ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய தேங்காய் எண்ணெயை பூஞ்சை தொற்று ஏற்பட்ட நகங்களின் மீது தடவி, சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், நகங்களில் ஏற்பட்ட தொற்றுக்களில் இருந்து விரைவில் விடுபடலாம்

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகளும் உள்ளன. மேலும் இதில் உள்ள சிட்ரிக் அமிலம், பூஞ்சை தொற்றுக்களை பரவாரமல் தடுக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தொற்று ஏற்பட்ட நகங்களின் மீது தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின்பு விரல் நகங்களை உலர வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் தொற்றுக்கள் மறைந்து போவதைக் காணலாம்.

லாவெண்டர் எண்ணெய் லாவெண்டர் எண்ணெயும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க நல்லது. ஏனெனில் இதில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. மேலும் இது தொற்றுக்களால் ஏற்படும் எரிச்சலில் இருந்தும் உடனடி நிவாரணத்தை அளிக்கும். அதற்கு 5 துளிகள் லாவெண்டர் எண்ணெயுடன் 5 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை பாதிக்கப்பட்ட விரல் நகங்களில் காட்டன் பயன்படுத்தி தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து, விரல் நகங்களை நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், விரல் நகங்களில் உள்ள தொற்றுக்கள் நீங்கும்.

வேப்பிலை எண்ணெய் வேப்பிலை எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் சிறப்பான எண்ணெய்களுள் ஒன்றாகும். வேப்பிலை எண்ணெயை பூஞ்சை தொற்று ஏற்பட்ட விரல் நகங்களின் மீது தினமும் தடவி மசாஜ் செய்து வருவதன் மூலம், பூஞ்சை தொற்றுக்கள் விரைவில் மறையும்.

ஆலிவ் இலைச் சாறு ஆலிவ் இலைச் சாற்றிற்கு பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை அழிக்கும் திறன் உள்ளது. எனவே விரல் நகங்களில் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், ஆலிவ் இலைச் சாற்றினை விரல் நகங்களின் மீது தடவுங்கள்.

அரிசி மாவு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, நகங்களின் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்யுங்கள். இப்படி ஒரு வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால், நகங்களில் உள்ள தொற்றுக்கள் அகலும்.

கல் உப்பு ஒரு அகலமான பாத்திரத்தில் நீரை எடுத்து, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரினுள் தினமும் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து வாருங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், தொற்றுக்களை உண்டாக்கிய பூஞ்சைகள் அழிந்து, விரல் நகங்களில் உள்ள தொற்றுக்கள் நீங்கி, விரல் நகங்கள் அழகாக காட்சியளிக்கும்.

மஞ்சள் தூள் மஞ்சள் தூளை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட விரல் நகங்களின் மீது தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் அந்த பகுதியை நீரால் கழுவி, விரல் நகங்களை காய வைக்க வேண்டும். இந்த சிகிச்சையை தினமும் செய்து வந்தால், சீக்கிரம் விரல் நகங்களில் உள்ள பூஞ்சைத் தொற்றுகள் சரியாகும்.

தயிர் தயிரில் புரோபயோடிக்குகள் அதிகமாக உள்ளது. இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், விரல் நகங்களைப் பாதித்த பூஞ்சைத் தொற்றுக்களைப் போக்கும். அதற்கு தினமும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

toenail fungus c

Related posts

பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்

nathan

குதிகால் வெடிப்பை போக்கும் சிம்பிளான பெடிக்யூர்

nathan

பித்த வெடிப்பை உடனே போக்குவதற்கான சிறந்த வழிமுறைகள்!

nathan

ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மிக சிறந்த நண்பனை கவனிக்காது விடலாமா?..

sangika

பித்த வெடிப்பு அசிங்கமா தெரியுதா? இப்படி செஞ்சு பாருங்க!!

nathan

நமது பாதங்கள் அன்றாடம் நம்மிடம் படும்பாடு சொல்லிமாளாது…..

sangika

ஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில வழிகள்!

nathan

ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

nathan

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

nathan