27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
4 beetroot honey
முகப் பராமரிப்பு

உங்க உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, பிங்க் நிறத்தில் மாற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

பெரும்பாலானோர் மார்கெட்டில் இருந்து கெமிக்கல் அதிகம் நிறைந்த மற்றும் விலை அதிகமான அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். உதடுகள் நன்கு பிங்க் நிறத்தில் இருப்பதற்காக கடைகளில் விற்கப்படும் லிப் பாம், லிப் ஸ்கரப் போன்றவற்றைக் கொண்டு உதடுகளை அழகாக காட்டுவோம். ஆனால் நாம் கடைகளில் வாங்கும் உதடு பராமரிப்பு பொருட்களில் எவ்வளவு கெமிக்கல்கள் நிறைந்துள்ளன என்று தெரியுமா? அதை அந்த பொருட்களின் பின்புறத்திலேயே ஒரு நீளமான பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்கு கெமிக்கல் அல்லாத மற்றும் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்ற வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையில் உதடுகளைப் பிங்க் நிறத்தில் மாற்றும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் உதடுகளை இயற்கை வழியில் பிங்க் நிறத்தில் மாற்றுவதற்கு பீட்ரூட் உதவியாக இருக்கும். பொதுவாக பீட்ரூட் ஏதேனும் உடைகளில் பட்டுவிட்டால், அது கறையை உண்டாக்கிவிடும். அத்தகைய பீட்ரூட் உங்கள் உதட்டின் நிறத்தை மட்டும் மாற்றாதா என்ன?

பீட்ரூட் ஒருவரது உதட்டின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றுவதோடு, உதடுகளில் உள்ள கருமையையும் போக்கும். இது இயற்கையான மற்றும் கெமிக்கல் அல்லாத பொருள். மேலும் இது விலைக் குறைவானதும் கூட. உங்களுக்கு பீட்ரூட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், உதட்டின் நிறத்தை பிங்க்காக மாற்றலாம் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பீட்ரூட் லிப் பாம் தேவையான பொருட்கள்: இயற்கையான பீட்ரூட் லிப் பாம் தயாரிக்கத் தேவையான பொருட்களாவன: * பீட்ரூட் * மிக்ஸி * தேங்காய் எண்ணெய் * வடிகட்டி * சிறிய லிப் பாம் கண்டெய்னர்

செய்முறை: * பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். * பின் அந்த சாற்றினை சுத்தமான சிறிய லிப் பாம் கண்டெய்னரில் ஊற்றிக் கொள்ள வேண்டும். * பின்பு அதில் குறைந்தது 1 டீஸ்பூன் அளவில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் 1 டீஸ்பூனுக்கும் குறைவான அளவில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால், உதடு அதிகமாக வறட்சி அடையும். * வேண்டுமானால், இதில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, தேன் அல்லது தேன்மெழுகு சேர்த்துக் கொள்ளலாம். * பிறகு இந்த கலவையை சுத்தமான ஸ்பூன் அல்லது டூத் பிக் கொண்டு கலந்து, ஃப்ரிட்ஜில் கெட்டியாகும் வரை வைத்து எடுக்க வேண்டும். * இப்போது நேச்சுரல் பீட்ரூட் லிப் பாம் தயார்! இந்த லிப் பாம்மை ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதட்டின் கருமையைப் போக்கி, உதட்டை பிங்க் நிறத்தில் மாற்ற பீட்ரூட்டை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இப்போது காண்போம்.

பீட்ரூட் மற்றும் தேன் 1 டீஸ்பூன் துருவிய பீட்ரூட் மற்றும் 1/2 டீஸ்பூன் தேனை ஒன்றாக மசித்து, உதட்டின் மீது தடவ வேண்டும். பின் இந்த கலவையை உதட்டில் சிறிது நேரம் தேய்த்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், உதடு பிங்க் நிறத்தில் மாறுவதை நன்கு காணலாம்.

புதினா, பீட்ரூட் ஜூஸ் மற்றும் பாதாம் எண்ணெய் இந்த முறையினால் உதடுகளில் உள்ள எப்பேற்பட்ட பிரச்சனைகளும் நீங்கி, உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். இந்த செயலுக்கு பீட்ரூட் ஜூஸ் மற்றும் புதினா சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு காட்டன் பயன்படுத்தி, இந்த கலவையை உதட்டின் மீது தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை என தினமும் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காண முடியும்.

பீட்ரூட், ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு இல்லாத வெண்ணெய் ஒரு டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டீஸ்பூன் உப்பு இல்லாத வெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை ஈரமான உதட்டின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் உதடுகளை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் என ஒன்று முதல் இரண்டு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், உதடுகள் பிங்க் நிறத்தில் மாறி இருப்பதைக் காணலாம். மேலும் இந்த செயலை செய்வதால், எப்போதும் உதடுகள் மென்மையாகவும், வறட்சியடையாமலும் அழகாக இருக்கும்.

பீட்ரூட் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் சர்க்கரை ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், ஒரு டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ஒரு பௌலில் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை உதட்டின் மீது தடவி, 2 நிமிடம் கழித்து, மீண்டும் 10 நிமிடம் ஊற வையுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் உதடுகளைக் கழுவுங்கள். இந்த முறையால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடுகள் பிங்க் நிறத்தில் ஜொலிக்கும்.

4 beetroot honey

Related posts

வறண்ட சருமம் பளபளன்னு மின்னனுமா?

nathan

எண்ணெய் சருமம் முகப்பருவை ஏற்படுத்துமா?

nathan

முக அழகை அதிகரிக்க தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க…நன்மைகள் ஏராளம்

nathan

10 நிமிடத்தில் ப்ளீச்சிங் செய்த மாதிரியான முகம் வேண்டுமா? அப்ப இந்த ஒரு ஃபேஸ் மாஸ்க் போடுங்க…

nathan

உங்க 30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய சில டிப்ஸ்!

nathan

சருமத்தில் உள்ள முகப்பருவினால் உண்டான குழிகளை நிமிடத்தில் சரி செய்யலாம்!

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

உங்க முகம் தங்கம் போல ஜொலிக்க மேக்கப் வேணாம்… இதை செய்யுங்கோ..!!

nathan

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ கவலை வேண்டாம்..சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன…

sangika