1tipstoreduceweightintendays
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா பெண்களின் உடல் எடையைக் குறைக்கும் காலை உணவுகள்!

 

சில நேரங்களில் உணவுக் கட்டுப்பாடும் கூட உங்களைக் கைவிட்டு விடலாம். ஏனெனில், சாப்பிடாமல் இருப்பது உணவுக் கட்டுப்பாடு அல்ல, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது தான் உணவுக் கட்டுப்பாடு!

உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!! உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பலரும் சாப்பிட வேண்டிய உணவாக இருப்பவை நார்ச்சத்துகள் நிரம்பிய உணவுகள் தான். அதிக அளவில் நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுவதால், புற்றுநோய், இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளையும் தவிர்த்திட முடியும்.

ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்… அதன் நன்மைகளும்… நம்மில் சிலருக்கு உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது எதை சாப்பிட வேண்டும் என்று தெரியாத காரணத்தால், சாப்பிடுவதை தவிர்த்து வந்திருப்போம்.

இந்த கட்டுரையின் மூலம் சரியான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உணவுக் கட்டுப்பாடு, சாப்பிட வேண்டிய உணவு மற்றும் சரியான காலை உணவு போன்றவற்றைக் கொடுத்துள்ளோம்.

முட்டையின் மகிமை சிறிதளவு வெங்காயம் மற்றும் பூண்டுடன் உடைத்த முட்டையை சேர்த்தால் 1 கிராம் நார்ச்சத்து அளவை அதிகரிக்க முடியும். உங்களுடைய இந்த ஆம்லெட் உணவுடன் ப்ராக்கோலியை சேர்ப்பதன் மூலம் மேலும் 2 கிராம் நார்ச்சத்துகளை அதிகரிக்க முடியும்.

ஆரஞ்சு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஆரஞ்சு சாற்றை குடிப்பதற்கு பதிலாக, ஆரஞ்சுப் பழத்தை நேரடியாக பிழிந்து, அந்த சாற்றைக் குடிப்பதன் மூலம் 3 கிராம் அதிகளவு நார்ச்சத்தினைப் பெற முடியும்.

நெக்டர் ஜூஸ் ஆப்ரிகாட், பீச் மற்றும் பப்பாளி சாறு ஆகியவற்றை நெக்டர் ஜூஸ் எனலாம். இவற்றில் சாதாரண பழங்களை விட மிகவும் ஆரோக்கியமான மற்றும் நார்ச்சத்து நிரம்பிய தாதுக்கள் உள்ளதால், எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கும்.

ஓட்ஸ் தவிடு (Oats Bran) உடல் எடையைக் குறைப்பதற்காக ஓட்ஸ் உணவைச் சாப்பிட்டு வரும் பெண்கள், ஓட்ஸ் தவிடை இணை உணவாகச் சேர்த்துக் கொள்வதால், காலை நேரத்தில் அதிகளவு நார்ச்சத்துக்களைப் பெற முடியும்.

பாதாம் வெண்ணெய் ஆம், உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது வெண்ணெய் சாப்பிடக் கூடாது என்ற ஒரு விதி இருந்தாலும், நீங்கள் சாப்பிடும் உணவில் சிறிதளவு பாதாம் வெண்ணெயை தடவிக் கொள்வதன் மூலம் 2 கிராம் அதிகமான நார்ச்சத்துக்களைப் பெற முடியும்.

சாக்லெட் மிக்ஸ் தினந்தோறும் பணி புரியும் பெண்களின் நாட்கள் காலை நேர காபியுடன் தொடங்கும். ஆனால், காபிக்கு பதிலாக கோகோவை குடித்து வந்தால் 3 கிராம் அதிகளவு நார்ச்சத்தினைப் பெற முடியும்.

பச்சைப் பட்டாணி மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாலட் ஒரு கோப்பை அளவு பச்சைப் பட்டாணி மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை எடுத்துக் கொண்டு, ஆலிவ் எண்ணெய் மற்றும் சுண்டலுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இதுதான் தினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான டயட் ஆகும். பச்சைப் பட்டாணியில் 4 கிராமும், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் 5 கிராமும் நார்ச்சத்துகள் உள்ளன.

1tipstoreduceweightintendays

Related posts

18 மாதத்தில் 108 கிலோ எடையை ஆனந்த் அம்பானி எப்படி குறைத்தார் என்று தெரியுமா?

nathan

தேனை எப்படியெல்லாம் எடுத்து வந்தால் உடல் எடை குறையும்?

nathan

உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் இதுதான்!

sangika

தொப்பையா? கவலையே வேண்டாம் தினமும் இதை செய்யுங்க…..

sangika

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க…

nathan

ஆடாமல், அசையாமல் உடல் எடையை குறைக்க உதவும் 7 எளிய வழிகள்!!!

nathan

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்!!!

nathan

உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய ஆயுர்வேதத்த வழிமுறைகள்!

nathan

வெயிட் லாஸ் ரொம்ப ஈஸி

nathan