28.9 C
Chennai
Monday, Feb 17, 2025
weightloss
ஆரோக்கியம்தொப்பை குறைய

ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க

ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.

அதிலும் பலர் இந்த புத்தாண்டில் இருந்து, உடல் எடையை குறைத்து, சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு. அப்படி நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தால், தமிழ் போல்ட் ஸ்கை அட்டகாசமான டயட் டிப்ஸ்களை கொடுத்துள்ளது.

அதனைப் படித்து, அதன் படி நடந்தால், நிச்சயம் ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!! இந்த மாதிரி எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் படித்து பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம்.

ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும். என்ன நண்பர்களே! ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ரெடியா!

எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும். என்ன நண்பர்களே! ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ரெடியா!

நாள் 1

ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.

நாள் 2

இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள்.

நாள் 3

மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

நாள் 4

நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும்.

நாள் 5

இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நாள் 6

ஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

நாள் 7

இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.weightloss

Related posts

கொழுப்பை கரைக்கும் கேரட்! சருமத்தையும் பளபளப்பாக்கும்

nathan

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

nathan

இதை சாப்பிட்டு தொபையைப்க் குறைக்கலாம்!…

sangika

தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று

nathan

தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை சிறுநீரில் கல் வர காரணங்கள்,,,

nathan

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும்

nathan

வீட்டுக் குறிப்புகள் சில பயனுள்ள குறிப்புகள்……

nathan

இது சத்தான அழகு

nathan