25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 1538041247
சரும பராமரிப்பு

உங்களுக்கு தொங்கின சருமத்தையும் இப்படி சிக்குனு மாத்தணுமா? அப்ப இத படிங்க!

சருமம் இறுக்கம் இழந்து தொங்க ஆரம்பிப்பது வயது முதிர்வின் அடையாளமாகும். ஆனால் ஆரம்பக் கட்டத்திலேயே இதனைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும்போது வயது முதிர்விற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்தலாம்

இந்த பதிவில் நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சருமத்தை இறுக்கமாக மாற்றுவதைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். இதன்மூலம் உங்கள் வயது முதிச்சி அறிகுறி தடுக்கப்படுகிறது, சருமமும் இறுக்கமாகிறது..

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சருமத்தை நீர்ச்சத்தோடு வைத்து ஈரப்பதம் தருவதால் சருமத்தில் உண்டாகும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள வைடமின் ஏ சத்து கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை சுருக்கங்கள் அற்றதாக மாற்றுகிறது. மேலும், தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் புதிய அணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டதாகும். தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை ,முகத்திற்கு பயன்படுத்துவதால் உங்கள் முகம் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுகிறது. சருமத்தை இறுக்கமாக மாற்ற தேங்காய் எண்ணெய் எப்படி பயன்படுகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் தேன் சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது. தேனில் இருக்கும் சுருக்க எதிர்ப்பு பண்பு , சருமத்தை இறுக்கமாக மாற்றுவதில் சிறந்த பலன் தருகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி மென்மையாக மேல் நோக்கி மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் இதனைச் செய்தவுடன் அடுத்த 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் மஞ்சளில் காணப்படும் அன்டி ஆக்சிடென்ட் முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுத்து சருமத்தை இறுக்கமாக மாற்றுகிறது. மேலும் கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை திடமாக வைக்க உதவுகிறது. ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். இதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்த பொருட்களை ஒன்றாகக் கலந்து ஒரு விழுது போல் செய்து கொள்ளவும். இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஷியா வெண்ணெய் ஷியா வெண்ணெய்யில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது சருமத்தை திடமாக மாற்ற உதவுகிறது. மேலும் கூடுதலாக இதில் ஈரப்பதம் உண்டாக்குவது, சருமத்தை பாதுகாப்பது, குணப்படுத்துவது போன்ற தன்மைகள் உள்ளன. ஒரு கடாயில் சிறிதளவு ஷியா வெண்ணெய் சேர்த்து உருக்கிக் கொள்ளவும். அந்த உருக்கிய வெண்ணெய்யில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும். இந்த கலவை முற்றிலும் ஆறியவுடன் உங்கள் முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலை முகத்தைக் கழுவவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை தேங்காய் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. கற்றாழையில் உள்ள மாலிக் அமிலம் களங்கமற்ற சருமம் பெற உதவுகிறது. கற்றாழை இலையை நறுக்கி அதன் முனைகளை வெட்டி, தோலை உரித்துக் கொள்ளவும். அதில் இருந்து வெளிவரும் வெள்ளை நிற ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். இந்த ஜெல் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும், சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் வைட்டமின் ஈ சத்து உதவுகிறது. தேங்காய் எண்ணெய் இயற்கையான முறையில் சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது. வைட்டமின் ஈ எண்ணெய்யை நேரடியாகவும் பயன்படுத்தலாம். அல்லது வைட்டமின் ஈ மாத்திரையை வாங்கி அதில் உள்ள எண்ணெய்யை பயன்படுத்தலாம். இந்த வைடமின் ஈ எண்ணெய்யுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்து உங்கள் முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

cover 1538041247

 

Related posts

வெள்ள நீரினால் சரும நோய்கள் வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க…

nathan

நீங்கள் குப்பையில் எறியும் தேயிலை, ஆரஞ்ச் தோலில் இத்தனை நன்மைகளா? அப்ப இத படிங்க!

nathan

மாய்ச்சரைசர்கள் அவசியமா?

nathan

சோடா உப்பினைக் கொண்டு அழகுக் குறிப்புகள் சில!

nathan

நீங்க போட்டிருக்கும் பெர்ஃப்யூம் நீண்ட நேரம் இருக்கமாட்டீங்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அசத்தலான அழகுக்கு!

nathan

வட இந்தியரின் பள பள சருமத்திற்கு காரணமான கடுகு எண்ணெய் குறிப்புகள் இங்கே

nathan

அழகுக்கு ஆப்பிள் பழம்

nathan

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் சத்தான உணவுகள்

nathan