29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
BACRI BASTS 1612 Pros Cons Oily Skin
முகப் பராமரிப்பு

எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க.

*தக்காளிப்பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டு விடும். தக்காளியுடன் வெள்ளரிப்  பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்  பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கி விடும்.BACRI BASTS 1612 Pros Cons Oily Skin

*எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை  குறையும்.

*சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த்  தன்மை நீங்கும்.

*வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச் சாறுடன் பால்  பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக் காணப்படும்.

*எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்குப் பதிலாக கடலை மாவைப்  பயன்படுத்துங்கள். எண்ணெய்த் தன்மை குறைவதோடு முகமும் பளபளக்கும்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும்.

*வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து  கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை நன்கு குறைவடையும்.

Related posts

முகத்துக்கு ஆவி பிடிக்கலாமா?

nathan

முகம் அழகாக அழகுக்கு அழகு சேர்க்கும் டிப்ஸ்

nathan

மூக்கைச் சுற்றியுள்ள கரும் புள்ளிகளை எவ்வாறு அகற்றுவது?

nathan

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! சருமத்தைப் பொலிவாக்க இது ஒன்று போதுமே..!

nathan

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

nathan