25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
38198731
முகப் பராமரிப்பு

நீங்கள் கண்டதையும் முகத்துல தடவுறத விடுங்க… ஆப்பிளை மட்டும் இதோட கலந்து தடவுங்க… சூப்பர் டிப்ஸ்

பொதுவாக முகத்திற்கு பேஸ் பேக் பயன்படுத்தும்போது பழங்கள் கொண்ட பேஸ் பேக் பயன்படுத்துவதால் சருமத்திற்கு மிகச் சிறந்த நன்மை கிடைக்கிறது. பழங்கள் சருமத்தில் பல விந்தைகளைப் புரிகின்றன. குறிப்பாக அழகு சிகிச்சையில் தனித் தன்மைக் கொண்டது ஆப்பிள். இயற்கை அன்னை மனித இனத்திற்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு ஆப்பிள்.

ஆப்பிளை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் , நார்ச்சத்து மற்றும் முக்கிய கனிமமான பொட்டாசியம் போன்றவை கிடைக்கின்றன. மேலும் சருமத்தை பொலிவாக்கி ஒளிரவும் செய்கிறது. இருக்கவே இருக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய, சருமம் ஜொலிக்கக்கூடிய ஆப்பிள் பேஸ் பேக்

ஆரோக்கிய நன்மைகள் உடலின் எல்லா பகுதிகளையும் சுத்தம் செய்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இரத்த ஆக்சிஜன் அளவை உயர்த்த உதவுகிறது. சீரான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. தைராய்டு சுரப்பியின் முறையான செயல்பாட்டுக்கு உதவுவதன் மூலம் இது வாதத்தை தடுக்கிறது ஆப்பிள் ஜூஸ் அடிக்கடி பருகுவதால் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

அழகு நன்மைகள் நச்சுகள் மற்றும் கழிவுகளால் சருமம் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க உதவுகிறது. சருமத்தை எலாஸ்டிக் தன்மையுடன் வைக்க உதவுவதால், நீண்ட காலம் இளமையோடு வாழலாம். சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவதைத் தடுக்க உதவுகிறது. சருமத்தைப் பரமாரிக்க உதவுகிறது. அத்தியாவசிய வைட்டமின்கள் குறைபாடால் உண்டாகும் பல்வேறு சரும பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது. பருக்கள் உடைவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது. சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாற்ற உதவும் ஆப்பிள் பேஸ் பேக் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். ஆப்பிள் பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தும் முறையை கீழே காணலாம்.

ஆப்பிள் ப்யுரீ புதிதாக வாங்கிய ஆப்பிளை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை ஒரு கிண்ணத்தில் போட்டு வேக வைத்து மசித்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு முகத்தைக் கழுவவும். இந்த விழுதுடன் சிறிதளவு பால் சேர்த்தும் பயன்படுத்தலாம். பால் சருமத்தை மாயச்ச்சரைஸ் செய்ய உதவுகிறது.

ஆப்பிள் மற்றும் கோதுமை மாவு ஆப்பிள் ப்யுரி மற்றும் இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். இந்த பொருட்களை ஒன்றாகக் கலந்து விழுதாக்கிக் கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இதனால் சருமம் தளர்ந்து புத்துணர்ச்சி பெறும்.

ஆப்பிள் மற்றும் ஓட்ஸ் அரை ஆப்பிள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சோளமாவு மற்றும் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் தடவவும். இது ஒரு ஸ்க்ரப் போல் செயல்பட்டு முகத்தில் உள்ள இறந்த அணுக்களைப் போக்கி, சருமத்தை தளர்த்துகிறது. இதனால் சருமம் பளபளப்பாக மாறுகிறது.

ஆப்பிள் மற்றும் தயிர் ஆப்பிளை தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை நன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். இந்த விழுதுடன் அரை கப் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

ஆப்பிள் மற்றும் எலுமிச்சை ஆப்பிளை தோல் உரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். கூடுதலாக இந்த கலவையில் ஜாதிபத்திரி, புதினா, கொத்துமல்லி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். பிறகு முகத்தைக் கழுவவும்.

38198731

Related posts

முக அழகை இரட்டிப்பாக மாற்றும் அஞ்சறை பெட்டியின் மசாலா பொருட்கள்..!சூப்பர் டிப்ஸ்…….

nathan

வசீகரிக்கும் அழகைப் பெற வாசலினை இந்த 5 முறைகளில் பயன்படுத்தலாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிளாக் ஹெட்ஸ் இயற்கை முறையில் நீக்கலாம்…

nathan

வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.

nathan

கண் சுருக்கங்களைப் போக்கி வசீகரமாக்கும் அற்புத எண்ணெய்கள்!!

nathan

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

கன்னம் குண்டாக வேண்டுமா?

nathan

ஃபேஸ் வாஷ்

nathan

முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா? இதை முயன்று பாருங்கள்…..

nathan