24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
300.053.800.668.160.90
மருத்துவ குறிப்பு

பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய 10 மருத்துவ பரிசோதனைகள்!

இன்றைய பெண்கள் சரியான நேரத்தில் தேவையான சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதின் மூலம் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு ஏற்பட கூடிய நோயை கண்டறிந்து அதற்குத் தகுந்த சிகிச்சையை வழங்கலாம்.

அப்படி பெண்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கீழ்யுள்ள இந்த 10 மருத்துவ பரிசோதனைகளை கட்டயாம் செய்துகொள்ள வேண்டும்.

உடல் எடை சரிபார்ப்பு

ஒருவரின் உயரம், எடை ஆகிய இரண்டையும் வைத்து அவரது பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் உடலின் பிஎம்ஐ கணக்கிடப்பட்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

உடல் கொழுப்பு பரிசோதனை

25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அவர்களது உடல் கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இந்த பரிசோதனையை குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.

ரத்த சோகை பரிசோதனை

உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது ரத்தத்தில் பிராணவாயுவின் சுழற்சியை உறுதி செய்யும் ஹீமோகுளோபின் அளவும் குறைந்து ரத்த சோகையை ஏற்படுத்துகின்றன.

625.0.560.350.160.300.053.800.668.160.90

ரத்த அழுத்தம் பரிசோதனை

பெண்கள் 18 வயதைக் கடந்த பிறகு குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.

வைட்டமின் பற்றாக்குறை சரிபார்ப்பு

கற்பமாக இருக்கும் பெண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடிருப்பது பிரசவத்தின் போது சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே பெண்கள் கட்டாயம் வைட்டமின் பற்றாக்குறை பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

ரத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரிபார்ப்பு

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 45 வயதைக் கடந்த பெண்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நீரிழிவு நோய் இருப்பதை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய வழி செய்யும்.

புற்றுநோய் பரிசோதனை

அதிகமாக உடலுறவில் ஈடுபடும் பெண்கள் இந்தப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். 30 வயதைக் கடந்த பெண்கள் கட்டாயம் மார்பக புற்றுநோய் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

எலும்பின் வலிமை சரிபார்ப்பு

எலும்பின் அடர்த்தி குறைவதால் 65 வயதிற்குப் பிறகு பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.இதைப் பரிசோதிக்க டெக்கா ஸ்கேன் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை

50 வயதைக் கடந்த பெண்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 5 முதல் 10 வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை சிக்மயோடோஸ்கொபி வழியில் செய்துகொள்ள வேண்டும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

தோல் புற்றுநோய் பரிசோதனை

பெண்கல் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களால் இளம் வயது பெண்களே தோல் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் தோலின் நிலையைப் பற்றி பரிசோதித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Related posts

தவறான உணவுக் கட்டுபாடு உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும்!!!

nathan

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தடுக்கும் சில விஷயங்கள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

தீராத ஒற்றை தலைவலியால் அவதிப்படறீங்களா?… அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பல் சொத்தை வராமல் தடுக்க இதோ எளிய நிவாரணம்!

nathan

10 நாட்களில் குடலில் உள்ள நச்சை முழுமையாக வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan

இருமலை கட்டுப்படுத்தும் மாதுளம் பழம்

nathan

இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்களுக்கு டிப்ஸ்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! கருப்பு பூஞ்சையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்

nathan