24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
aaa 2
மருத்துவ குறிப்பு

உங்க ஈறுகளில் இரத்தம் வடிகிறதா?அப்போ கட்டாயம் இத படிங்க!

ஈறுகளில் இரத்தம் வடிதல் வாய்ப்பகுதியை பாதிக்கிறது. ஈறுகளில் நோய் உண்டாக போகிறது என்பதற்கான அறிகுறியே ஈறுகளில் இருந்து குருதி வடிதல் ஆகும். இதனை சரியாக கவனிக்காவிட்டால் இந்த நோய் பெரிதாகிவிடும். இதனை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால், பற்கள் தானாகவே கழன்று விழத்தொடங்கும். இதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

இனிப்பு உணவுகள் : பலருக்கு மேற்கத்திய உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை மிகுதியாக உண்ணும் போது, கிருமிகள் தாக்கி அவ்வப்போது இரத்தம் வடியும். இந்த நோய் தாக்காமல் இருக்க பற்களை சுத்தமாக துலக்க வேண்டியது அவசியம். இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்க வேண்டும்.

மருத்துவரிடம் ஆலோசனை : இனிப்பு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை அருந்திய பின்னர் வாயை சுத்தம் செய்வதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். இரத்தம் வடிதல் தொடர்ந்தால், மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

கர்ப்ப காலம் : பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஈறுகளில் இரத்தம் வடிதல் பிரச்சனை இருக்கும். இவர்கள் பல் மருத்துவரிடம் செல்ல வேண்டியது கட்டாயம். விட்டமின் இ குறைபாடு காரணமாகவும், வெண்புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் ஈறுகளில் இருந்து இரத்தம் வடியும்.

விட்டமின் குறைபாடு : விட்டமின் குறைபாடு காரணமாக பற்களில் இரத்த கசிவு ஏற்பட்டால், பல் மருத்துவரிடன் சென்று ஆலோசனை பெற வேண்டியது அவசியம். விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

புகைப்பிடித்தல் : சிட்ரஸ் குளிர்பானங்கள், பொரித்த உணவுகள், காரமான உணவுகள், மது அருந்துவது மற்றும் புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டியது அவசியம்.

டூத் பிரஸ் : மென்மையான டூத் பிரஸ் கொண்டு பற்களை சுத்தம் செய்யுங்கள். பற்களை சுத்தம் செய்யும் போது கடாவாய், ஈறுகள், நாக்கு போன்றவற்றையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள்.

aaa 2

Related posts

சூப்பர் டிப்ஸ்! பாத மசாஜ் மூலம் கிடைக்கும் பலன்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இவைகள் தான் மார்பக காம்புகளில் அரிப்பை உண்டாக்குகின்றன என்பது தெரியுமா?

nathan

உணவு கட்டுப்பாடே சர்க்கரைக்கு மருந்து!

nathan

தெரிஞ்சிக்கங்க…இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தை கூட இருக்கலாம் என தெரியுமா?

nathan

புகைப்பழக்கத்திற்கு அடிமையா….?

nathan

ஆறாத புண்ணை குணப்படுத்தும் செவ்வரளி

nathan

அதிகாலையில் முகம் வீங்குகிறதா? இதோ தீர்வு

nathan

செரிமான கோளாறுகளை சரிசெய்யும் அன்னாசிப் பூ

nathan

இப்போது இளம் பெண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்!

nathan