24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
525479
மருத்துவ குறிப்பு

படிக்கத் தவறாதீர்கள்! புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கும் 12 ஆயுர்வேத மூலிகைகள்..!

புற்றுநோய் என்றதுமே நம் உடலில் ஒரு சிலிர்ப்பு வர தொடங்கி இருக்கும். இது பல்வேறு வகையில் உருவாக கூடிய ஒரு கொடிய நோயாக கருதப்படுகிறது. இன்று உலகில் பல மக்கள் இந்த நோயிற்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணமாக நிறைய சொல்லலாம். மனிதனின் பழக்க வழக்கங்கள் மாற மாற நோய்களின் தாக்கமும் அதிகமாகி கொண்டே வருகிறது. ஒருவரின் உடலில் இந்த புற்றுநோய் வராமல் இருக்க சில தடுப்பு வைத்தியங்களை நாம் மேற்கொள்ளலாம்.

அந்த வகையில் ஆயுர்வேதத்தில் சில முக்கிய மூலிகைகளை பயன்படுத்துவார்களாம். இவை நமக்கு எளிமையாகவே கிடைக்க கூடிய பொருட்கள் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். இந்த பதிவில் புற்றுநோயை தடுக்க கூடிய ஆயுர்வேத மூலிகைகளை பற்றி அறிந்து நலம் பெறுவோம்.

இஞ்சி ஆயிரம் மருத்துவ புதையல்களை தனக்குளே வைத்திருக்கும் ஒரு மருத்துவ பெட்டகம் இந்த இஞ்சி. பல ஆயிரம் வருடங்களாக இதனை மருத்துவ பயனுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் உடலில் புற்றுநோய் செல்களை உருவாகாமல் தடுக்கும். மேலும், வயிற்றில் ஏற்பட்டுள்ள வீக்கங்களையும் இது குணப்படுத்தும்.

கோதுமை புல் கோதுமை புல்லில் வைட்டமின் எ, பி, சி, இ போன்றவை அதிக அளவில் இருக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், அமினோ அசீட்ஸ், ஐயோடின் ஆகிய மூல பொருட்கள் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவும். எனவே, இது புற்றுநோயை எளிதில் தடுத்து விடும்.

பூண்டு அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் இதில் இருப்பதால் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது. உடலில் நோய் தொற்றுகளை ஏற்படாமல் பூண்டு காக்கிறது. இதில் anti-carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. மேலும், கிட்னியில் சேரும் அழுக்குகளை முற்றிலுமாக சுத்தம் செய்யவும் பூண்டு உதவும்.

மஞ்சள் மருத்துவ பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தும் இந்த மஞ்சள் மிகுந்த நன்மை கொண்டது. இந்த மஞ்சள் உடல் சம்பந்தமான பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் திறன் பெற்றது. இதில் உள்ள curcumin என்ற முக்கிய மூல பொருள் உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டி, புற்றுநோய் வரமால் காக்கும்.

வோக்கோசு (Parsley) உடலின் செயல்திறனை சுறுசுறுப்பாக வைக்க இந்த வோக்கோசு உதவுகிறது. தினமும் 1 டீஸ்பூன் வோக்கோசுவை நசுக்கி அதனை சுடு தண்ணீரில் கொதிக்கவிட்டு டீ போன்று சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கலாம்.

கருஞ்சீரகம் ஜீரண சக்திக்கு அதிகம் உதவும் இந்த கருஞ்சீரகம் பல்வேறு நலன்களை கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் தைமோகுயினோன் புற்றுநோய் உற்பத்தியை தரும் செல்களை முற்றிலுமாக தடுக்கும். குறிப்பாக ப்ரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் ரத்த புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

ஆரிகனோ (oregano) Carvacrol என்ற முக்கிய பொருள் இந்த ஆரோகோணோவில் உள்ளது. இவற்றை நாம் உணவால் சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்பட கூடிய எல்லா வித சாத்திய கூறுகளையும் இவை தடுத்து விடும். மேலும், உடலில் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி சீராக வைக்கும்.

இலவங்க பட்டை உணவின் மணத்தையும் ருசியையும் அதிகரிக்க இந்த இலவங்க பட்டை பெரிதும் உதவும். இது உடலில் ஏற்பட கூடிய கிருமிகளை அழித்து நன்மை தரும். இரைப்பை புற்றுநோயை உருவாக்க கூடிய H. pylori என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியை இது முற்றிலுமாக தடுத்து விடும்.

பசில் (Basil) உடல் ஆரோக்கியத்தை காப்பதில் இந்த பசில் இலைகளுக்கு அதிக ஆற்றல் உள்ளது. இந்த இலையின் சாறுகளை குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கலாம். மேலும், சீறுநீர் பாதையை சீராக வைக்க இந்த இலைகள் உதவுகிறது.

சிவப்பு மிளகாய் பொதுவாக காரமான உணவு சாப்பிடுவோருக்கு நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் சிவப்பு மிளகாயில் பலவித முக்கிய நலன்கள் இருக்கிறது. இதில் உள்ள Capsaicin, ஆண்களுக்கு பிரத்தியேகமாக வர கூடிய ப்ரோஸ்டேட் புற்றுநோயை தடுக்குமாம். அத்துடன் புற்றுநோய் கட்டிகள் ஏற்படாமல் இருக்க இது வழி செய்யும்.

மிளகு சமையலில் காரத்தையும் உடலில் ஆரோக்கியத்தையும் கூட்ட இந்த மிளகு உதவும். இவற்றில் piperine என்ற முக்கிய பொருள் இருப்பதால் புற்றுநோய் செல்கள் உற்பத்தியை தடுத்து நிறுத்தி விடும். குறிப்பாக மார்பக புற்றுநோயை எதிர்த்து போராடும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

கொத்தமல்லி பெருங்குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்க கூடிய ஆற்றல் இந்த கொத்தமல்லிக்கு இருக்கிறதாம். இவை கொலெஸ்ட்ரோலின் அளவை குறைத்து பெருங்குடலில் உள்ள நச்சு தன்மையை போக்குகிறது. மேலும், இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.525479

 

Related posts

பெண்களின் மன அழுத்தம் இனி மறைந்து போகும்

nathan

பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா தமிழர்களின் ஆயுர்வேதத்தின் படி பழங்களை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதாம்…

nathan

தனிமை விரும்பியா நீங்கள்?

nathan

பல் கூச்சத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இந்த அறிகுறிகள் வந்த பின்தான் ஹார்ட் அட்டாக் வருமாம்… ஜாக்கிரதையா இருங்க…!

nathan

பெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறு

nathan

சர்க்கரை மற்றும் கொழுப்புசத்தை குறைக்கவல்ல பொன்னாங்கண்ணி கீரை

nathan