22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
201804120910379074 1 How to care for wet hair. L styvpf
தலைமுடி சிகிச்சை

நீங்கள் கூந்தல் அழகியாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்..

கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தலைமுடியைப் பொறுத்தவரை அது கழுத்தளவோ, இடுப்பளவோ… நீளத்தைவிட அடர்த்தியாக, நுனி வெடிப்பில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது. கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

* சின்ன வயதில் நரை வராமல் இருக்க, உடம்பில் பித்தம் பேலன்ஸாடாக இருக்க வேண்டும். அதற்கு, உங்கள் உடம்பு பித்தம் அதிகம்கொண்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணெய்யில் கரிசிலாங்கண்ணி சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு, தலையில் தடவி வந்தால் பித்தம் கன்ட்ரோல் ஆகும். இளநரை தள்ளிப்போகும்.

* ஆயில்பாத்தை கடமைக்குச் செய்யாமல் அனுபவித்துச் செய்யுங்கள். நல்லெண்ணெய்யோ, தேங்காயெண்ணெய்யோ தலையில் 15 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். அதற்கு மேல் ஊறினால், சிலருக்குத் தலைவலி வந்துவிடும். 15 நிமிடங்கள் கழித்து சீயக்காய்த்தூளுடன் செம்பருத்தி இலையை அரைத்து, வடிகட்டிய சாற்றைச் சேர்த்து தலையில் தேய்த்துக் குளியுங்கள். கண்டிஷனரே தேவையில்லாமல் கூந்தல் பளபளக்கும்; ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால், சீயக்காய் தேய்த்துக் குளிக்கும்போது, நிறையத் தண்ணீர்விட்டு முடியை அலச வேண்டும். இல்லையென்றால் பொடுகு வரலாம்.

வறண்ட கூந்தல் உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை கொப்பரைத்தேங்காயைத் துருவி, மையாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். தலையில் சீயக்காயோ அல்லது ஷாம்பூவோ போட்டு அலசிய பிறகு, அரைத்த கொப்பரை விழுதை வேர்க்காலில் ஆரம்பித்து நுனி வரை தடவவும். 10 நிமிடங்கள் ஊறவிட்டு தண்ணீரில் அலசி விடுங்கள். கூந்தலில் எண்ணெய்ப்பசையும் இருக்கும்; அதேநேரம் முகத்தில் எண்ணெய் வழியாது. தலைமுடி வலுவாகவும் இருக்கும்
* தலைக்குக் குளித்தவுடன், வெகு நேரத்துக்கு தலையில் டவலை கட்டிக்கொண்டே இருக்காதீர்கள். தலையில் நீர் கோர்த்துக்கொள்வதோடு, முடியின் வேர்க்கால்களும் பலவீனமாகும்.* இரவிலேயே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, காலையில் குளிக்கிற வழக்கத்தை இன்றைக்கு நிறைய இளம்பெண்கள் செய்கிறார்கள். இது முடிக்கு நல்லது என நினைக்கிறார்கள். இது தவறு, உண்மையில் இந்தப் பழக்கம் தலைமுடியை வலுவிழக்கச் செய்து மெதுமெதுவாக கொட்டிப் போகவே செய்யும்
* ஹென்னா பேக் இன்றைக்கு எல்லாப் பெண்களுமே போடுகிறார்கள். அப்படிப் போடும்போது, நெல்லிகாய்ப்பொடி, செம்பருத்திப்பொடி, வெந்தயப்பொடி, துளசிப்பொடி, வேப்பம்பொடி, லெமன் ஆகியவற்றைச் சேர்த்து போட்டால், ஹென்னாவால் உடம்பு ரொம்பவும் குளிர்ச்சியாவதைத் தடுப்பதோடு தலைமுடிக்கும் நல்லது.201804120910379074 1 How to care for wet hair. L styvpf

Related posts

அடர்த்தியான தலைமுடிக்கு

nathan

சூப்பர் டிப்ஸ்! வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வைக்க வாரத்திற்கு 2 முறை இத தடவினாலே போதும்!

nathan

பார்லர் செல்லாமலே கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்யனுமா? நீங்கள் அறிந்திராத 5 எளிய டிப்ஸ் !!

nathan

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan

முடி உதிர்தல் பிரச்சனையா? முன் நெற்றியில் சொட்டையா? இத ட்ரை பண்ணுங்க!

nathan

வழுக்கைத் தலையில் முடி வளர பூண்டுகளை எப்படி பயன்படுத்துவது?

nathan

அடர்த்தியான கூந்தலால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

nathan

உங்க முடி பொலிவாகவும் அடர்த்தியாகவும் வளர குப்பைமேனி டோனர் தயாரிப்பது எப்படி?

nathan

செம்பருத்தி எண்ணெய் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

nathan