28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
3 1537177019
முகப் பராமரிப்பு

நீங்கள் நைட் தூங்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு விஷயத்த மட்டும் பண்ணுங்க… அப்புறம் என்ன நடக்குமென்று பாருங்கள்…

இரவில் படுப்பதற்கு முன் முகத்தை கழுவி விட்டு படுப்பதால் என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியுமா? இதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். நம்முடைய அவசர காலத்தில் நமது சருமத்தை பேணிக் காப்பதையே மறந்து விடுகிறோம்.

இதனால் நமது சருமம் ஆரோக்கியமற்றதாக மாறி விடுகிறது. உங்களுக்கு பொலிவான ஒரு ஆரோக்கியமான சருமம் கிடைக்க வேண்டும் என்றால் அதை தினமும் பேணிப் பராமரிப்பது மிகவும் முக்கியம்.

சரும ஆரோக்கியம் இதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினமும் படுப்பதற்கு முன் வெறும் 15 நிமிடங்களை ஒதுக்கினாலே போதும் என்றென்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற இயலும். இந்த கட்டுரையில் இரவில் படுப்பதற்கு முன் உங்கள் முகத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி கூறி உள்ளோம். அந்த முறையைப் பின்பற்றுங்கள்.

முகம் கழுவ வேண்டுமா? ஏன் இரவில் படுப்பதற்கு முன் முகத்தை கழுவ வேண்டும்? முகத்தை சுத்தம் செய்வதால் சரும துளைகள் திறந்து சருமம் நல்லா சுவாசிக்கிறது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்குகிறது. முகத்தை கழுவதோடு லேசாக மசாஜ் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தை பொலிவாக்குகிறது. முகத்தை கழுவதால் பருக்கள், கரும்புள்ளிகள் வராமல் தடுக்கப்படுகிறது. முகம் களைப்படையாமல் புத்துணர்வோடு இருக்க உதவுகிறது.

நேரம் ஒதுக்குங்கள் உங்கள் முகத்தை சுத்தம் செய்வதற்கென்று சற்று நேரம் ஒதுக்குங்கள். படுப்பதற்கு முன் ஒரு 15 நிமிடங்கள் ஒதுக்குவதால் முகத்தில் உள்ள அழுக்கை எளிதாக நீக்கிடலாம். எனவே அதற்காக சரியான நேரத்தை தினமும் ஒதுக்குங்கள்.

சோப்பை பயன்படுத்தாதீர்கள் கெமிக்கல் நிறைந்த சோப்பை அடிக்கடி முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமம் பாதிப்படைகிறது. மேலும் இது சருமத்தை வறண்டு போகச் செய்கிறது. எனவே சோப்பிற்கு பதிலாக கடலை மாவு போன்ற இயற்கை பொருட்களை கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். சோப்பு பயன்படுத்த விரும்பினால் சரும மருத்துவரிடம் ஆலோசித்து கெமிக்கல்கள் இல்லாத சோப்பை பெறலாம்.

வெதுவெதுப்பான நீர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை கழுவுங்கள். வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை கழுவுங்கள். ஏனெனில் வெதுவெதுப்பான நீர் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் நாள் முழுவதும் மிகவும் புத்துணர்வோடு இருக்க இயலும். அப்படியே முகத்தை லேசாக மசாஜ் செய்து கூட விடலாம்.

துடைத்தல் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிய பிறகு நன்றாக துண்டை கொண்டு ஈரத்தைத் துடைத்து விடுங்கள். சிலர் முகம் கழுவிய பின் முகத்தைத் துடைக்காமல் அந்ததண்ணீரோடே இருப்பார்கள். அது மிகவும் தவறான பழக்கம். துடைக்கும் போது தயவு செய்து மென்மையான துண்டை கொண்டு துடைத்தெடுங்கள். அழுத்தமாக துடைக்காமல் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மென்மையாக துடையுங்கள்.

மாய்ஸ்சரைசர் கடைசியாக சருமத்தை சுத்தம் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். உங்களுக்கு பொருத்தமான மாய்ஸ்சரைசரை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் மாய்ஸ்சரைசர் தேர்ந்தெடுக்கும் போது எண்ணெய் இல்லாததை தேர்ந்தெடுங்கள்.

இந்த தினசரி முக பராமரிப்பு உங்கள் சருமத்தை இளமையாக ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

3 1537177019

Related posts

முகத்தின் அழகை தக்க வைக்க நாம் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது அவற்றை பார்ப்போம்.

nathan

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

முகம் பொளிவு பெற

nathan

நீங்கள் நொடிப் பொழுதில் மென்மையான பஞ்சு போன்ற‌ தோலைப் பெற சில எளிய குறிப்புகள்:

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் விரும்பும் 5 விதமான பிங்க் ஷேடட் லிப்ஸ்டிக்குகள்!!!

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்! உங்கள் முக அழகிற்கு குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

nathan

உங்க முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா? அதை மறைக்க சில டிப்ஸ்…

nathan

முகத்தில் வழியும் எண்ணெய்யை போக்க சில வழிகள்

nathan