25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Home remedies for preventing hair problem
தலைமுடி சிகிச்சை

கூந்தல் வெடிப்பை தடுக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

 

கூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்
சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஷாம்புக்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த முடியின் வெடிப்புக்களை ஒருசில ஹேர் மாஸ்க்குகளின் மூலம் தடுக்கலாம். இங்கு முடி வெடிப்பைத் தடுக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் முனையில் வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

1 முட்டையை நன்கு அடித்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதனால், முடி வெடிப்புக்கள் மட்டுமின்றி, முடியின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

பப்பாளியை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து அலச, முடி வெடிப்புக்கள் மட்டுமல்லாமல், முடியின் மென்மை மற்றும் வலிமை அதிகரிக்கும்.

பீர் உடலுக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் நல்லது. குறிப்பாக முடியின் வெடிப்புக்களைத் தடுக்க பீர் மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு பீரை தலைமுடியில் நன்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முடியில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அவற்றை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைமுடியை நீரில் அலசி, பின் ஈரமான தலையில் இந்த எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்த பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாகவும், வெடிப்புக்களின்றியும் இருக்கும்.Home remedies for preventing hair problem

Related posts

இளநரையை தடுக்கும் புளி – கருமையாக வைத்துக்கொள்வது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு முடிகொட்டிய இடத்தில் ஒரே வாரத்தில் முடி வளர வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும்…

sangika

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

nathan

நரைமுடி

nathan

இளமையிலேயே தலைமுடி நரைக்க முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது.

nathan

தெரிஞ்சிக்கங்க…நரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா?

nathan

கூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா?

nathan