22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
71492645 1536743543
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்ட சில எடை இழப்பு குறிப்புகள்!

இன்று உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. தற்போதைய எடை இழப்பு துறையானது முற்றிலும் கட்டுக்கதைகள் நிறைந்ததாகவே உள்ளது. உடல் பருமனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் குறிப்பிட்ட சில விஷயங்கள், எடையைக் குறைக்கும் என்ற எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே பின்பற்றி வருகின்றனர்.

பல வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் எடையைக் குறைக்கப்பதற்கு என்று பயனுள்ள பல உத்திகளைக் கண்டறிந்துள்ளனர். அந்த உத்திகளுள் முக்கியமான சில எடை இழப்பு குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எடை இழப்பு குறிப்புகள் அனைத்துமே ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டவை என்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் இந்த குறிப்புகளைப் பின்பற்றினால், சந்தேகமின்றி நிச்சயம் எடையைக் குறைக்கலாம்.

உணவுக்கு முன் நீர் அருந்தவும் எடையைக் குறைக்க நினைத்தால், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. நீரைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசமானது 1-1.5 மணிநேரத்திற்குள் 24-30% ஊக்குவிக்கப்பட்டு, உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கும். முக்கியமாக உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1/2 லிட்டர் நீரைக் குடித்தால், இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம்.

காலை உணவாக முட்டை முட்டை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதில் ஒன்று இது எடையைக் குறைக்க உதவும். ஆய்வுகளில் காலை உணவாக தானிய வகை உணவுகளுடன் முட்டையையும் சேர்த்து சாப்பிட்டால், அடுத்த 36 மணிநேரத்திற்கு குறைவான அளவில் கலோரிகளை எடுக்க உதவி, அதிக எடை மற்றும் உடல் கொழுப்பைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுக்கு முட்டை பிடிக்காவிட்டால், பரவாயில்லை. முட்டைக்கு பதிலாக இதர புரோட்டீன் உணவுகளை சாப்பிடலாம்.

ப்ளாக் காபி குடிக்கவும் நல்ல தரமான காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக நிரம்பியிருப்பதோடு, ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். காபியில் உள்ள காப்ஃபைன் உடலின் மெட்டபாலிசத்தை 3-11% மேம்படுத்துவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்முறை 10-29% அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக காபி குடிக்கும் போது, அந்த காபியில் சர்க்கரையோ அல்லது இதர உயர்-கலோரி பொருட்களையோ சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். அதுவும் ப்ளாக்-காபி குடிப்பதே மிகவும் நல்லது.

க்ரீன் டீ குடிக்கவும் காபியைப் போன்றே க்ரீன் டீயிலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். க்ரீன் டீயில் சிறிய அளவில் காப்ஃபைன் உள்ளது. மேலும் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான கேட்டசின்கள், அதாவது கொழுப்பை வேகமாக கரைக்கும் பணியை மேம்படுத்தும் பொருள் உள்ளது. பல ஆய்வுகளிலும் க்ரீன் டீ உடல் எடையை குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

க்ளுக்கோமானன் சப்ளிமெண்டுகள் க்ளுக்கோமானன் என்னும் நார்ச்சத்து, உடல் எடையைக் குறைப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகை நார்ச்சத்து நீரை உறிஞ்சி, நீண்ட நேரம் குடலில் தங்கச் செய்து, பல மணிநேரம் பசி எடுக்காதவாறு தடுப்பதோடு, குறைவான அளவில் கலோரிகளை எடுக்க உதவும். எடையைக் குறைக்க நினைப்போர் க்ளுக்கோமானன் சப்ளிமெண்ட்டுகளை எடுத்ததில், இந்த சப்ளிமெண்ட் எடுக்காதவர்களை விட அதிகமாக உடல் எடை குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும் மார்டன் டயட்டிலேயே மிகவும் மோசமான பொருள் உணவுகளில் சர்க்கரையை சேர்ப்பது. பெரும்பாலானோர் இந்த சர்க்கரையை தங்களது டயட்டில் அதிகம் சேர்க்கிறார்கள். ஆய்வுகளில் சர்க்கரையை அதிகம் உட்கொண்டால், அது உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் இதய நோயின் அபாயத்தையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸைக் குறைக்கவும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளான சர்க்கரை, தானியங்கள் போன்றவை இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்து, பசியுணர்வை அதிகம் தூண்டி, அடிக்கடி எதையேனும் சாப்பிடத் தூண்டச் செய்வதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

சிறிய அளவிலான தட்டு உணவை உண்ணும் போது, அந்த தட்டு சிறிய அளவில் இருந்தால், குறைவான அளவிலேயே சாப்பிடத் தோன்றும். தட்டின் அளவு அனைவரது உணவின் அளவையும் குறைக்கும் என்று கூற முடியாது. இருப்பினும் சிறிய அளவிலான தட்டில் உணவை உட்கொண்டால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது தானாகவே கட்டுப்படும்

பசியின் போது ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், எப்போதும் தங்களைச் சுற்றி ஆரோக்கியமான உணவுகளை வைத்திருங்கள். ஆரோக்கியமான உணவுகளின் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பசியும் கட்டுப்படும். அதுவே ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டால், பசியுணர்வு மேலும் அதிகரிக்கும். எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் நற்பதமான பழங்கள், நட்ஸ், பேபி கேரட், தயிர், வேக வைத்த முட்டை என்று சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

ப்ரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகள் ப்ரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகளில் லாக்டோபேசில்லஸ் என்னும் நல்ல பாக்டீரியா அடங்கியுள்ளது. இந்த பாக்டீரியா உடலில் உள்ள கொழுப்புக்களின் அடர்த்தியைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே ப்ரோபயோடிக்ஸ் சப்ளிமெண்ட்டுகளை மட்டுமின்றி, அது நிறைந்த உணவுகளையும் சாப்பிடலாம்.

காரமான உணவுகளை உண்ணவும் மிளகு அல்லது மிளகாயில் கேப்சைசின் என்னும் காரப் பொருள் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, பசி உணர்வைக் குறைக்கும். இருப்பினும் அனைவராலும் கேப்சைசின் தாக்கத்தை குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே அளவுக்கு அதிகமாக கார உணவை எடுக்காமல், மிதமான அளவில் உட்கொண்டு நன்மையைப் பெறுங்கள்.

ஏரோபிக் உடற்பயிற்சி கார்டியோ பயிற்சிகளுள் ஒன்றான ஏரோபிக் உடற்பயிற்சி கலோரிகளை எரிப்பதிலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சிறந்த ஒன்று. முக்கியமாக இந்த ஏரோபிக் பயிற்சி வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தொப்பையைக் குறைக்க செய்வதோடு, இதர பகுதிகளில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களையும் கரைக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்துமே ஆய்வாளர்களால் நிரூபணம் செய்யப்பட்ட முக்கியமான சில எடையை இழக்கச் செய்யும் வழிகள். இந்த வழிகளை ஒருவர் மனதில் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையில் மாற்றத்தை விரைவில் காணலாம்.71492645 1536743543

Related posts

18 மாதத்தில் 108 கிலோ எடையை ஆனந்த் அம்பானி எப்படி குறைத்தார் என்று தெரியுமா?

nathan

கவலைய விடுங்க…? உடல் பருமனை குறைப்பது எப்படினு கவலபடுரீங்கள…?

nathan

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க…

nathan

எடையை குறைக்கும் அற்புத பானம்! எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?

nathan

உங்கள் எடை குறையாததற்கு இதெல்லாம்தான் காரணம்!!

nathan

உடல் எடையை குறைக்கும் சீரகம்

nathan

வெயிட் லாஸ்,எடையைக் குறைக்கலாம்.

nathan

பேரிச்சம் பழம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?

nathan

உடல் எடை குறைய உதவும் உணவுப் பழக்கம்

nathan