இன்று பலரும் சருமம் மற்றும் முடியின் அழகிற்காக மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பல பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். மேக்கப் போட்டது அதை அகற்றுவதில் சோம்பல் இருப்பதனால் அப்படியே தூங்குதல், சூரியக் கதிர்கள் பற்றிய அக்கறையை அதிகம் செலுத்தாமை போன்ற தவறுகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
இதில் நீங்களும் ஒருவராக இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தெரிந்து கொண்டு உடனடியான தீர்வை மேற்கொள்வது அவசியமானது. நீங்கள் செய்யும் தவறு என்ன என்பது தெரியாமல் அதனை தொடர்ச்சியாக செய்வதனால் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே அதில் அதிகம் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது.
அழகிற்காக செய்யும் தவறுகளும் அதற்கான தீர்வுகளும்.
1. மேக்கப்பை அகற்றாமல் தூங்குதல்.
இரவு நேரத்தில் சோம்பலால் அல்லது களைப்பினால் மேக்கப்பை அகற்றாமல் துங்குவதனால் சருமம் சுருக்கம் அடைதல், சிவந்து போதல், கடி ஏற்படுதல் போன்/ர பல சருமப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
தீர்வு:
தூங்குவதற்கு முன் ஒலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மேக்கப்பை அகற்றி அதன் பின் நீரினால் கழுவி, மொய்ஸ்டரைசர் பயன்படுத்துவது சிறந்தது.
2. சூடான நீரில் குளித்தல்.
சூடான் நீரில் குளிப்பதனால் இயற்கையாக உடலில் உள்ள எண்ணெய்த் தன்மை நீங்கி சருமம் உலர்வடைந்து விடுகிறது. அத்துடன் சருமத் துளைகள் திறப்பதனால் பல சருமப் பிரச்சினைகள் வரும். கடி, சருமம் சிவந்து போதல் பொதுவாக ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தீர்வு:
குளிப்பதற்கு சாதரன நீரைப் பயன்படுத்துவது தான் சிறந்தது. இதனால் முடி பாதிப்படைவதையும் தடுக்க முடியும்.
3. பருக்களை கைகளால் கிள்ளுதல்.
பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் ஏற்பட்டு விட்டால் அதனை கண்ணாடியில் பார்த்து கைகளால் கிள்ளுவது உங்களில் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. அதனால் சருமத்தில் இலகுவாக தளும்புகள் ஏற்படுகின்றன.
தீர்வு:
முதலாவது நீங்கள் நீண்ட நேரம் கண்ணாடியைப் பார்ப்பதை தவிர்த்தல் வேண்டும். அத்துடன் ஸ்கிரப் வாரத்திற்கு இரண்டு தடவைகள் பயன்படுத்துவதனால் பருக்களும் கரும்புள்ளிகளும் நீங்கும்.
4. அதிகமான சூரிய ஒளி படுதல்.
அதிகமான் சூரிய ஒளி படுவதனால் சருமம் சுருக்கம் அடைதல், சிவந்து போதல், கடி ஏற்படுதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
தீர்வு:
வீட்டில் இருந்து வேளியேறுவதற்கு முன் சன் கிறீம் பயன்படுத்துவது அவசியமானது. அத்துடன் சன்கிளாஸ், ஸ்கார்வ் அணிந்து செல்வதனால் சருமத்தைப் பாதுகாக்க முடியும்.
5. நகங்களைக் கடித்தல்.
உங்களில் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கம் நகங்களை கடிப்பது. பொது இடங்களில் இதனை செய்வதனால் மற்றவர்கள் தவறாக நினைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
தீர்வு:
மன அழுத்ததாலும், படபடப்பாலும் இந்தப் பழக்கங்கள் ஏர்படுகிறது. இதற்கு மனதை கட்டுப்படுத்துவதும் யோகா செய்வதும் சிறந்த தீர்வைத் தருகிறது. அத்துடன் நகப்பூச்சுக்கள் பயன்படுத்துவதும் சிறந்தது.