25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
lt 1 3
முகப் பராமரிப்பு

உங்களுக்கு முகப்பருக்களை முற்றிலும் போக்க வேண்டுமா?எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

முகத்தில் தோன்றும் முகப்பருவைப் போக்க கிராம்பு எப்படி உதவி செய்கிறது என்பதை பற்றியும் மற்றும் ஒருசில இயற்கைப் பொருட்களை வைத்து முகத்தில் வரும் பருக்களை எவ்வாறு குறைக்க முடியும் என்பதை பார்ப்போம்.

கிராம்பு

முதலில் தேவையான அளவு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு பின்னர் குளிர வைத்து விடவேண்டும்.

பிறகு அதனை எடுத்து அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி சில நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் தவறாமல் செய்து வந்தால் விரைவில் முகத்தில் உள்ள பருக்கள் மறையும், சருமத்திற்கும் மேலும் அழகு சேர்க்கும்.

 

வாழைப்பழ தோல்

வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவினால், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

 

தக்காளி

தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

தேன் மற்றும் பால்

தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்த பின்னர் பால் கொண்டு முதலில் கழுவி, அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

 

ஆவி பிடித்தல்

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். ஆவிப்பிடித்தால், முகத்துவாரங்கள் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தளர்ந்துவிடும்.

தினமும் இவ்வாறு செய்வதன் மூலம் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறிவிடும்.

சந்தன பொடி

சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி கழுவினால், பருக்கள் நீங்குவதோடு முகமும் பொலிவு பெறும்.lt 1 3

Related posts

சிகப்பழகு பெற சூப்பர் டிப்ஸ்… ஒரு பேரிச்சம்பழம் போதும்..

nathan

முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் அரிசி கழுவிய தண்ணீர்

nathan

பளிச்சென முகத்தை பராமரிக்க டிப்ஸ்கள் இதோ!….

nathan

எண்ணெய் பசை சருமத்தினால் நீங்கள் பெறும் 5 பயன்கள்!!! தொடர்ந்து படிக்கவும்…

nathan

ஃபேஷியல்

nathan

நீங்கள் அழகில் அதிகம் கவனம் செலுத்தும் நபரா ? அப்ப உடனே இத படிங்க…

nathan

முகப்பருவை போக்கும் வில்வம்

nathan

beauty tips? முக அழகிற்கு ஆரஞ்சு தோல் எவ்வாறு பயன்படுகிறது தெரியுமா…?

nathan

மேக்கப் மூலம் ஆளுமையை எப்படி வெளிப்படுத்துவது

nathan