27.8 C
Chennai
Saturday, May 18, 2024
2 1535106947
முகப் பராமரிப்பு

அழகியை போல மின்ன வைக்கும் பாட்டியின் அந்த காலத்து அழகு குறிப்புகள்..! படிக்கத் தவறாதீர்கள்……

பலருக்கு உலக அழகி போல மாற வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அந்த இடத்திற்கே ஒரு தனி மரியாதை எப்போதும் இருக்கும். அந்த அளவிற்கு அதன் தகுதி அதீதமானது. மிகவும் அழகான மற்றும் புத்தி கூர்மையுடைய ஒரு பெண்ணைத்தான் உலக அழகியாக தேர்ந்தெடுப்பார்கள். அதற்காக அந்த உலக அழகி எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு இருப்பார். பலர் மிகவும் இயற்கை ரீதியான அழகியல் முறைகளையே பின்பற்றுவார்கள். ஏனெனில் அவைதான் என்றும் நிரந்தரமான அழகை 

வேதி பொருட்களை கொண்டு மெருகேற்றிய அழகு, மிக விரைவிலேயே வீணாகி விடும். உலக அழகியை போன்ற அழகை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆவல் இருப்பது இயல்பே. உலக அழகி போன்ற அழகை இந்த பாட்டியின் அழகு குறிப்புகள் செய்கின்றன. இந்த பதிவில் சில முக்கியமான பாட்டி காலத்து ஆயுர்வேத அழகு குறிப்பை பற்றி தெரிந்து கொள்வோம்.

சோப்பிற்கு பதில் பாட்டியின் குறிப்பு..! இன்று பல வகையான சோப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. அவற்றிற்கு ஒரு எல்லை இல்லை என்பது உண்மைதான். இருந்தும் நாம் அந்த வகையான வேதி பொருட்கள் அதிகம் கலந்த சோப்புகளையே வாங்கி அடுக்கி வைத்து கொள்கின்றோம். இதற்கு மாற்று வழியாக நம் பாட்டியின் இந்த அழகு குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையானவை :- – பால் – தயிர் – கடலை மாவு

செய்முறை… இனி சோப்பிற்கு பதில் வாரத்திற்கு ஒரு முறை இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். இது முற்றிலும் எளிமையான வழி. முதலில் தயிருடன் கடலை மாவை கலந்து உடலில் பூசி குளிக்கலாம். இது வறண்ட சருமத்திற்கு ஏற்றது. எண்ணெய் பசை சருமத்திற்கு கடலை மாவுடன் பால் கலந்து உடலில் தேய்த்து குளித்தால், சருமம் மிருதுவாகும்.

முகப்பருக்களை அடியோடு போக்க… முகத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரந்து அது முக பருக்களாக மாறி விடுகிறது. இது ஒருவரின் முக அழகை உருகுலைத்தும் விடும். இவற்றை குணப்படுத்த இந்த முறையை செய்து பாருங்கள்.

தேவையானவை :- – முல்தானி மட்டி – எலுமிச்சை சாறு – சந்தன பவ்டர் – மஞ்சள் தூள்

செய்முறை :- முதலில் 2 டீஸ்பூன் முல்தானி மட்டியை எடுத்து கொண்டு பின் அவற்றுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் சந்தன தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின், இவற்றுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் இதனை கழுவினால் முகப்பருக்கள் மறையும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யுங்கள்.

மங்கலான முகத்திற்கு… பொதுவாக முகம் பலருக்கு மங்கலாக இருக்கும். இது வெயிலின் பாதிப்பால் பெரும்பாலும் ஏற்படும். உங்கள் முகம் வெயிலின் தாக்கத்தால் மிகவும் பொலிவிழந்து காணப்படுகிறதா..? இதற்கு சிறந்த தீர்வு உள்ளது.

தேவையானவை :- – தக்காளி – தேன் – எலுமிச்சை – சர்க்கரை

செய்முறை :- இந்த குறிப்பை இரண்டு வகையாக பயன்படுத்த வேண்டும். முதலில் தக்காளி சாற்றை மட்டும் எடுத்து கொண்டு, தேனுடன் கலந்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். அடுத்து 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அதனுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து, 10 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த முறை உங்கள் முகத்தை வெண்மையாக மாற்றி அழகு தரும்.

கரும்புள்ளிகளை நீக்க.. முகத்தின் முக்கால் வாசி அழகை இந்த கரும்புள்ளிகள்தான் கெடுத்து விடுகிறது. என்னதான் வேதி பொருட்களையெல்லாம் பயன்படுத்தினாலும் இந்த கரும்புள்ளிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது கடினமே. ஆனால், நம்ம பாட்டி காலத்து வைத்தியம் உங்கள் கரும்புள்ளிகளை முற்றிலுமாக நீக்குகிறது.

தேவையனாவை :- – கொத்தமல்லி தழை – மஞ்சள் தூள்

செய்முறை :- இது மிகவும் சுலபமான முறையே. முதலில் கொத்தமல்லி தழையை எடுத்து கொண்டு, நன்கு அரைத்து கொள்ளவும். பின், அவற்றுடன் மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் கலந்து முகத்தில் பூசி, இரவு முழுவதும் அப்படியே விடவும். அடுத்த நாள் காலையில் இதனை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் கொத்தமல்லியில் உள்ள காஸ்டிக் என்பவை அழுக்குகளை நீக்கி, கரும்புள்ளிகளுக்கு விடை தரும்.

பட்டுபோன்ற முகத்திற்கு… உங்கள் முகம் மிகவும் சொரசொரப்பாக உள்ளதா..? இதனால் அடிக்கடி கீறல் போன்று விழுகிறதா..? இனி இதனை சரி செய்ய நம்ம பாட்டி வைத்தியம் இருக்கே. இந்த அழகு குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வாருங்கள். பிறகு முகம் பளபளவென மின்னும்.

தேவையானவை :- – கற்றாழை – எலுமிச்சை சாறு

செய்முறை :- கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியாக எடுத்து அரைத்து கொள்ளவும். அதனுடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சரி கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இந்த அழகு குறிப்பு முக பொலிவை தர உதவும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.2 1535106947

 

Related posts

உங்களுக்கு தெரியுமா கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா புளியை பயன்படுத்தி எப்படி அழகாவது.?

nathan

உங்க முடி பளபளன்னு அடர்த்தியா வளர… மாம்பழ ஹேர் பேக்குகளை யூஸ் பண்ணுன்னா போதுமாம்!

nathan

வறண்ட சருமம் உள்ளவங்க இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

என்ன தான் செஞ்சாலும் இந்த பரு போகாம தொல்லை பண்ணுதா? இதை முயன்று பாருங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா சேலை கட்டும்போது எப்படி மேக்கப் போட வேண்டும்?

nathan

நீங்கள் சீக்கிரம் வெள்ளையாவீங்க தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..

nathan

தழும்புகளை மறைய வைக்க ‘விட்டமின் ஈ’ உதவுமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி!…

nathan