பெரும்பாலும் நமது உடல் உறுப்புகள் ஓடிக் கொண்டே இருக்கிறது. இது சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் பாதிப்பு நமக்கே.
வேலையில் அதிக கவனம் செலுத்தும் நம்மில் பெரும்பாலானோர் உடலில் கவனம் செலுத்த தவறி விடுகிறோம். நமது உடல்நலம் என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
உலகில் போதுமான உடற்பயிற்சி செய்ய தவறியவர்கள் 100 கோடி மக்களை பல்வேறு நோய்கள் தாக்கியுள்ள அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது.
அதில், வளர்ச்சி மிக்க நாடுகளில் வசதியாக வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவற்றையால் பாதிப்படைகிறார்கள். அதேபோல் நான்கில் ஒரு பங்கு ஆண்களும் இதுபோன்ற நோய் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். உடற்பயிற்சி இல்லாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் தான் அதிகம் இதய நோய், மன நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது.
வேலையில் கவனம் செலுத்து முக்கியம்தான் என்றாலும் அதில் ஒரு பங்காவது நம் உடல்நலத்திற்கும் செலுத்த வேண்டும்.