26.4 C
Chennai
Tuesday, Dec 31, 2024
Why cant pregnant ladies sleep on their back SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

உங்களுக்கு தெரியுமா விட்டத்தை பார்த்தபடி கர்ப்பிணிகள் உறங்கினால் என்னவாகும்..?

கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது விட்டத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது. பக்கவாட்டில் தான் தூங்கவேண்டும் என்பது தான் அது. இது ஏன்? வெறும் கூற்றா? கட்டுகதையா?

இது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது

-முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் 4 ஆம் மாதத்தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.

-விட்டத்தை பார்த்து படுத்தால், கருப்பையில் இருக்கும் நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் இந்த தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

-4 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் எடை கூடும் நிலையில் விட்டத்தை பார்த்தபடி படுத்தால் தாயின் குடல் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.

-அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பிலும் அழுத்தம் ஏற்படும்.

-இதனால் தாயின் உடலில் ரத்த ஓட்டமும் பாதிக்கும்.

-தாய் பக்கவாட்டில் படுத்திருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போது, அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும். நின்றுக்கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும். (தண்ணீர் பலூனின் இயல்பை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்).

அதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேயுக்கும் மிகவும் நல்லது.Why cant pregnant ladies sleep on their back SECVPF

Related posts

தாய்ப்பாலூட்டல் தொடர்பான சில மூட நம்பிக்கைகள்

nathan

தாய்பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

பிரசவ வலி குறைய உதவும் குங்குமப்பூ!

nathan

கருவறையில் இருக்கும் சிசுவைப் பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்!!!

nathan

சிசேரியன் செய்த பெண்கள் கவனத்திற்கு

nathan

குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி?

nathan

கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது ரொம்ப நல்லது!

nathan

கருவுற்ற பெண்ணிற்கு ஏற்படும் பாதிப்பு குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்

nathan

கர்ப்பிணி பெண்களுக்கு செல்போனால் ஆபத்து

nathan