29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
5 1535791655
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா ரெண்டே வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் செலவில்லாத பானம்…

உடல் பருமன் என்பது இந்த காலத்தில் மிகப்பெரிய பிரச்னையான உருவெடுத்துவிட்டது. இந்த எடையைக் குறைக்க ஏன் எல்லோரும் படாத பாடு படுகிறார்கள் உடல் பருமன் உடலில் தோன்றும் மற்ற எல்லா வகையான வியாதிகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, உலகையே அச்சுறுத்துகின்ற, பரவலாக எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நோயான சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு உண்டாவதற்கு மிக மிக அடிப்படையாக இருப்பது இந்த உடலில் தேங்கும் கொழுப்புகள் தான்.

கொழுப்பை கரைத்தல் அவற்றை அறுவை சிகிச்சை என தேவையில்லாத விபரீத விளையாட்டுக்கள் மூலம் குறைப்பது, மற்றும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உணவுகளையும் சாப்பிடுவதைத் தடுப்பதை விட்டுவிட்டு, ஆரோக்கியமான முறையில் எளிமையாக வீட்டிலேயே உடலில் கொழுப்பு தங்ககாமல் இருக்க சில வழிமுறைகள் உண்டு. அதில் மிக முக்கியமான ஒன்று தான் கீழ்வரும் அருமையான பானம். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கொழுப்பை கரைக்கும் பானம்

தேவையான பொருள்கள் – மிளகாய் பொடி – 1 ஸ்பூன் தேன் – 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்

செய்முறை ஒரு லிட்டரில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி, 4 ஸ்பூன் தேன் மற்றும் அதனுடன் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறினைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தாகம் எடுக்கும்போதெல்லாம் நாள் முழுக்க எப்போதும் இதை குடித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் தண்ணீரும் குடிக்கலாம்.

மிளகாய்ப்பொடி மிளகாய்ப் பொடி யாராவது கலந்து குடிப்பார்களா என்று நீங்கள் கேட்கலாம். நாம் கலப்பதோ மிகக்குறைந்த அளவு தான். ஆனால் இந்த மிளகாய்ப் பொடி நம்முடைய மெட்டபாலிசத்தைத் தூண்டி, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. அதனால் இயல்பாகவே நம்முடைய கொழுப்பு தேங்காமல் கரையத் தொடங்குகிறது.

எலுமிச்சையும் தேனும் தேன் கொழுப்பை உடலில் எங்கும் தங்க விடாமல் பார்த்துக் கொள்கிறது. எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால், அது உடலுக்குள் தேங்குகின்ற கொழுப்பினை வெளியேற்றுகிறது.

என்ன செய்யும்? இந்த பானமானது நம்முடைய உடலில் நச்சுக்கள் மற்றும் அழுக்குகளைச் சேர விடாமல் வெளியேற்றும். உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுவதோடு மட்டுமில்லாமல், உடலில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பையும் இயற்கையான முறையில் எரித்து விடுகிறது.

பிற நன்மைகள் இந்த பானம் வெறுமனே கொழுப்பை மட்டும் கரைப்பதில்லை. இதன்மூலம் வேறு சில நன்மைகளும் இருக்கின்றன. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஜீரண சக்தியைத் தூண்டுகிறது. உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சக்தியைக் கொடுக்கிறது. கல்லீரலை பாதுகாக்கிறது. சுவாசப் பிரச்னைகளை சரிசெய்கிறது. உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்துகிறது. தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.

எவ்வளவு நாள் குடிக்கலாம்? இந்த பானத்தை இரண்டு வாரங்கள் குடித்து வந்தாலே நல்ல மாற்றத்தை உணர முடியும். அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மேல் இந்த பானத்தைத் தொடர்ந்து குடிக்க வேண்டாம்.

5 1535791655

Related posts

இதோ பத்தே நாட்களில் உடல் எடையில் மாற்றம் காண எளிய டிப்ஸ்!!!

nathan

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்….!!!

nathan

உடல் எடையை விரைவில் குறைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்

nathan

உடல் எடையை குறைக்கும் பெருஞ்சீரக லெமன் டீ

nathan

உங்கள் எடை குறையாததற்கு இதெல்லாம்தான் காரணம்!!

nathan

எப்படி 500 கலோரிகளை ஒரு நாளில் எரிக்க முடியும்

nathan

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

nathan

குண்டாக இருக்கிறீங்களா நீங்கள்.? இனி கவலை வேண்டாம்.!

nathan

எடையை ஒரே மாதிரி பராமரிப்பவர்களுக்கான‌ 7 நாட்கள் உணவுமுறை திட்டம்

nathan