கண்ணைச் சுற்றி வரும் கருவளையங்கள் பெரும்பாலும் கண் சோர்வடைந்திருப்பதையே காட்டுகின்றன.வைட்டமின்கள் B6 மற்றும் B12 குறைபாடே இதற்கு காரணம்.
இத்தகைய கண் கருவளையங்களைத் தவிர்க்க கீழ்கண்டவற்றைப் பரிந்துரைக்கிறார் மருத்துவர் கருணா மல்கோத்ரா.
1. முழுமையாக ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம்
2. வைட்டமின்கள் B6 மற்றும் B12 நிறைந்துள்ள ,கால்சியம் மற்றும் போலிக் அமிலங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
3. புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கங்களை கைவிடுங்கள்
4. கண்களின் நீரேற்ற அளவை சரியாகப் பராமரியுங்கள், நாள் முழுதும் அதிகமாக நீர் அருந்துங்கள்
5.கண்களை அடிக்கடித் தேய்க்காதீர்கள்.
6. வெளியேச் செல்லும் போது சன் ஸ்கீரினை பயன்படுத்துங்கள். குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரங்களில் கண்டிப்பாக பயன்படுத்தவும்.
7. எப்பொழுதும் தரமான கண் பூச்சுகளையே பயன்படுத்துங்கள்.
8. கண் கருவளையங்களுக்கென்ற பல மருத்துவ வழிமுறைகள் உள்ளன அவற்றின் மூலமாகவும் எளிமையாக கருவளையங்களை அகற்றலாம்.