பூக்கள் என்றாலே மிகவும் அழகான ஒரு உயிரினமாக எல்லோராலையும் ரசிக்க படுகிறது. மனித இனத்தின் மொத்த கூட்டத்தை சேர்த்தாலும், பூக்களின் இனத்திற்கு ஈடாகாது. நமக்கு தெரிந்த பூக்களின் வகைகள் மிகவும் குறைவே. இந்த பூமியி
ல் கோடி கணக்கில் பூக்கள் இருக்கின்றது. அவை அத்தனையும் பல குணங்களை கொண்டது. சில பூக்கள் மருத்துவ தன்மை உடையதாகவும், சில விஷ தன்மை உடையதாகவும், சில அழகு குணம் நிறைந்ததாகவும்… இப்படி ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு தன்மை உள்ளன.
அந்த வகையில் பல பூக்கள் நம் அழகை பராமரிப்பதிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெரிதும் உதவும். குறிப்பாக இந்த தாமரை மலரில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இந்த பதிவில் எவ்வாறு தாமரை மலர் இளமையை பாதுகாக்கிறது என்றும், அவற்றின் அழகு பராமரிப்பு நன்மைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாமரை என்னும் தீர்க்கதரிசி..!
நமது தேசிய மலராக கருதப்படும் இந்த தாமரை மலர் பல அற்புத தன்மைகளை தனக்குள்ளே வைத்துள்ளது. இதில் பல ஊட்டசத்துகளும் இருக்கிறது.
தாமரையின் இதழ்கள், வேர்கள், விதைகள் இப்படி அனைத்துமே மருத்துவ குணங்களும், அழகு குறிப்புகளும் கொண்டது. தாமரை சருமத்தின் அழகை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
பருக்களுக்கு டாட்..!
முகம் முழுக்க முகப்பருக்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள்… நம்ம தாமரை மலர் இருக்க பயமேன். இதில் உள்ள மூல பொருள் இந்த தாமரை மலருக்கு அற்புத பலனை தருகிறது. இது ஒருவரின் முக அழகை மேம்படுத்துவதோடு பருக்களை நீக்குகிறது. எண்ணெய் பசை சருமத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்…
தாமரையில் உள்ள அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இளமையை பாதுகாக்கும். உடலில் செல்களை மறு உற்பத்தி செய்து என்றும் இளமையாக மாற்றும். தாமரை மலரின் இந்த பலனை அடைய…
தேவையானவை :-
தாமரை மலர் 1
ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன்
பால் 2 டீஸ்பூன்
செய்முறை :-
முதலில் தாமரை இதழ்களை தனியாக நறுக்கி கொள்ளவும். பின் அவற்றுடன் பால், ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து இதனை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கும்.
வறண்ட சருமத்தை குணமாக்க…
பலரின் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து மிகவும் வறண்டு காணப்படும். இதனால், முகத்தில் சொரசொரப்பு, கீறல்கள், அலர்ஜி போன்றவை எளிதில் வர கூடும். இதனை தடுக்க தாமரை இதழ்கள் பயன்படுகிறது. மேலும் தாமரை பூக்களை உணவில் சமைத்து சாப்பிட்டால் நாள்பட்ட முக பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும்.
இளநரையை போக்கும் தாமரை..!
பத்தில் 4 பேருக்கு இந்த இளநரை பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. இது ஊட்டசத்து குறைபாடு, உடல் ரீதியான சில பிரச்சினைகளினால் ஏற்படுகிறது. இவற்றை குணப்படுத்த அருமையான வழி இதுதான்.
தேவையானவை :-
தாமரை மலர் 1
தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
பாதம் எண்ணெய் 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன்
பால் 2 டீஸ்பூன்
செய்முறை :-
முதலில் நன்றாக தாமரை இதழ்கள், அதன் விதைகள் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் தேங்காய் எண்ணெய், பாதம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பால் சேர்த்து மய்ய அரைத்து கொண்டு தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் இளநரைகளை தடுக்கலாம்.
முடி உதிர்வை தடுக்க…
உங்களுக்கு அதிகமாக முடி கொட்டுகிறதா..? இதனால் மனம் நொந்து வருடுகிறீர்களா..? இனி கவலை வேண்டாங்க..! உங்கள் பிரச்சினையை தீர்க்க தாமரை மலர்கள் உள்ளது. இவற்றை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து, தலைக்கு குளித்து வந்தால் முடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.
ஆயுர்வேதத்தில் தாமரை..!
பல மலர்களை போன்றே இந்த தாமரையும் ஆயர்வேதத்தில் நன்கு பயன்படுகிறது. எண்ணற்ற நோய்களுக்கும், உடல் நலனுக்கும் இது உதவுகிறது. தாமரையில் உள்ள மூல பொருட்கள் உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சரும பாதுகாப்பு, முடியின் போஷாக்கு என நுனி முதல் பாதம் வரை எல்லாவற்றிற்கும் இது உதவுகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.