29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
74066
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இரவில் ஒருதுளி பெருங்காயத்தை தொப்புளில் வைத்து தூங்கினால் உண்டாகும் மாயங்கள்

ஒரு மிகப் பெரிய விருந்து சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு கனமாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். அடுத்த சில மணி நேரங்களில் வாய்வு தொல்லையால் அவதிப்பட்டிருக்கிறோம்.

இதற்கு என்ன காரணம்? செரிமான பாதையில் காற்று அடைத்துக் கொள்வதை தான் வாய்வு என்று நாம் கூறுகிறோம். இதனால் நாம் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகிறோம்.

வாய்வுத்தொல்லை சாப்பிடும் போது உள்ளே செல்லும் காற்று, செரிமான பாதையில் நுழைகிறது, அல்லது உங்கள் பெருங்குடலில் செரிமானம் ஆகாத உணவுகளில் கிருமிகள் உண்டாவதால் கூட இந்த வாய்வு உண்டாகலாம். சில நேரம் நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகள் கூட வாய்விற்கு காரணமாக இருக்கலாம். இந்திய உணவுகளில் வாய்வு தொடர்பான பிரச்சனைகள் எப்போதும் உண்டு. நாம் எண்ணெய் உணவுகள் மற்றும் கனமான உணவு வகைகளை நமது சமையலில் சேர்த்துக் கொள்வதால் இந்த பாதிப்பு உண்டாகிறது.

சிகிச்சை ஆனால் அதே நேரத்தில் இந்த பாதிப்புகளைப் போக்கவும் நமது சமையலில் சில பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பொருட்களில் முக்கிய மற்றும் முதல் இடத்தைப் பிடிப்பது பெருங்காயம். உணவின் சுவையை அதிகரிக்க பல காலங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் பெருங்காயம் இந்த வாய்விற்கு தகுந்த சிகிச்சையை அளிக்கிறது. மிகப் பெரிய வயிறு உபாதைகளுக்கும் உடனடி நிவாரணத்தை வழங்கும் தன்மை பெருங்காயத்திற்கு உண்டு.

செரிமானம் செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளில் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ள மருத்தவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெருங்காயத்தை உணவில் எப்படி சேர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் வயிற்று வலியைப் போக்குவதில் பெருங்காயம் எப்படி சிறந்த தீர்வைத் தருகிறது என்பது பற்றியும் இப்போது நாம் காணலாம்

பெருங்காயம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானை தாயகமாகக் கொண்டது பெருங்காயம். இதனை “உணவுகளின் கடவுள்” என்றும் கூறுவர். பச்சை பெருங்காயம் கசப்பு சுவை உடையதாகவும், கடுமையான வாசனை உடையதாகவும் இருக்கும். இதனை சுவையூட்டியாக உணவில் சேர்ப்பார்கள். பெருங்காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்வதால் ஒரு தனி வாசனை உணவிற்கு கிடைக்கும்.

பெருங்காய வாசனை பலரும் இந்த வாசனையை விரும்புவார்கள். பெருங்காயத்தில் இருக்கும் பாகு பொருட்கள், கிருமி எதிர்ப்பு, வலி குறைப்பு, வாய்வு எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மற்றும் நோய்க்கிருமி எதிர்ப்பு போன்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால், எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி, வாய்வு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவுகிறது. பயறு, பருப்பு போன்ற உணவுகளை சமைக்கும்போது பலரும் பெருங்காயத்தை சேர்ப்பது செரிமான தொடர்பான பிரச்சனைகளைக் களைவதற்கு மட்டுமே. வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் களைய பெருங்காயத்தை எப்படி பயன்படுத்தலாம்?

தினசரி சமையலில் அடிக்கடி உங்களுக்கு வாய்வு தொல்லை ஏற்பட்டால், உங்கள் தினசரி சமையலில் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வாய்வு உண்டாக்கும் சில உணவுகளை தவிர்த்திடுங்கள். அல்லது அவற்றை தயாரிக்கும்போது ஒரு துளி பெருங்கயாத்தை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக பால் மற்றும் பால் பொருட்கள், மாவுச்சத்து அதிகமான பாஸ்தா, உருளைக்கிழங்கு , பயறு வகைகளான காராமணி, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ் போன்றவை, பருப்பு வகைகள் போன்றவற்றில் வாய்வு அதிகமாக இருக்கும். பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் வாய்வில் இருந்து நிவாரணம் கிடைப்பது மட்டும் இல்லாமல், செறிமான பாதையும் செரிமான மண்டலமும் வலிமையடையும்.

பெருங்காய நீர் பருகுங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து பருகுவதும் பெருங்காயத்தை எடுத்துக் கொள்ளும் மற்றொரு வழியாகும். உங்கள் வயிற்றில் அசௌகரியத்தை நீங்கள் உணரும்போது இந்த நீரை பருகலாம். கருப்பு உப்பு கூட வயிறு தொடர்பான பிரச்சைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.

இஞ்சி டீயில் பெருங்காயம் வாய்வு தொல்லைக்கு மற்றொரு தீர்வு, இஞ்சி. இதனுடன் பெருங்காயத்தை சேர்க்கும்போது நல்ல பலன் கிடக்கும். இஞ்சி தூள், கல் உப்பு மற்றும் பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து பருகவும். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்லது இஞ்சி சேர்த்து தயாரிக்கும் தேநீரில் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

தொப்புளில் பெருங்காயம் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை எடுத்து அதில் சில துளி கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் தொப்புளில் தடவி சில நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். இது உடனடி நிவாரணத்தை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெருங்காய்த்தின் சுவை பிடிக்காமல் அதனை உட்கொள்ள விரும்பாதவர்களுக்கு இது சிறந்த தீர்வாகும்.

ஆரோக்கியமான மற்றும் ஆனந்தமான முறையில் வயிறு தொடர்பான தொல்லைகளைப் போக்க பெருங்காயம் சாப்பிடுங்கள்.74066

 

Related posts

வெயில் காலத்தில் குழந்தைகளில் பாதுகாப்பு

nathan

கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் .

nathan

நீங்கள் குறைபிரசவத்தில் பிறந்தவரா? அப்ப இத படிங்க…

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?

nathan

உங்கள் நாக்கு இந்த நிறத்தில் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

முதுகு வலியை சரி செய்ய எளிய சிகிச்சைகள்

nathan

கோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராமரிப்புகள்

nathan

பற்களுக்கு அடியில் வெங்காயத்தை இப்படி வையுங்கள்!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

மிகக்கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அற்புத பழம்!

nathan