30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சரும சுருக்கத்தை போக்கும் மஞ்சள்

ld549மஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சன் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து, சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று மஞ்சளானது சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும்.

• முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் மறையும்

•  மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வந்தால் சரும சுருக்கங்களை சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• கடலை மாவில், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, குளிக்கும் போது ஈரமான சருமத்தில் தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுடன், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

Related posts

உங்கள் அழகினை மெருகூட்ட பெட்ரோலியம் ஜெல்லியை எப்படி பயன்படுத்துவது?

nathan

நெய்யை நம்முடைய சருமத்தின் அழகை மெருகூட்ட எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்!…

sangika

பாத பராமரிப்புக்கு உப்பு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?

sangika

எப்டி தெரியுமா மாதுளையை பயன்படுத்தி கவர்ச்சியான உதடுகளை பெறுவது?

nathan

சர்க்கரை அளவை உடனே குறைக்க இதைச் சாப்பிட்டால் போதும் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கிளியோபாட்ரா பற்றி பலரும் அறியாத ஐந்து இரகசியங்கள்!

nathan

உங்களுக்காகவே முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை நீக்க பல இயற்கை டிப்ஸ்கள் இதோ..!

nathan

கழுத்தில் பெண்களுக்கு கருமை ஏன் உண்டாகிறது? அதனை போக்கும் ஈசியான குறிப்புகள்!!

nathan

பிரபல நடிகை பளீச்! மதுவுக்கு அடிமையானேன்.. அது இல்லனா தூக்கமே வராது

nathan