34.5 C
Chennai
Sunday, Jul 13, 2025
3312
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கண்களின் அழகை பராமரிப்பதில் இவ்வளவு நன்மைகளா..!

கண்களை நாம் பாதுகாப்பதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். இந்த பதிவில் கண்களை எவ்வாறு பராமரிப்பது, கண் இமைகளை எவ்வாறு காப்பது, அதனால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

கண்ணே கலை மானே..! உடலின் எல்லா உறுப்புகளை காட்டிலும் கண் மிகவும் இன்றியமையாதது. கண் இல்லை என்றால், நம் உலகம் நிச்சயம் இருண்டு போய்விடும். அதனால்தான், தானத்தில் சிறந்த தானம் “கண் தானம்” என்று பல இடங்களிலும் வாசகங்கள் ஒட்ட பட்டு இருக்கிறது. எனவே இத்தகைய கண்ணை நாம் அவசியம் கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும்.

வெள்ளை கருவும் கண்ணும்..! முட்டையில் பல வித மருத்துவ குணங்களும், அழகு குறிப்புகளும் அடங்கி உள்ளது. முட்டையின் வெள்ளை கருவை மட்டும் நன்கு அடித்து கொண்டு அதனை கண்ணின் வெளி பகுதிகளில் தடவி மசாஜ் செய்யுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கண்ணை கழுவி விடுங்கள். இது கண்ணின் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும்.

சீமை சாமந்தி கண்ணிற்கு..! சீமை சாமந்தியை நன்கு காய வைத்து, அதனை டீ பேக்கில் அடைத்து டீ போட்ட பிறகு, அந்த பேக்கை மட்டும் குளிர வைக்கவும். பிறகு அதனை கண்ணிற்கு 20 நிமிடம் ஒத்தடம் கொடுக்கவும். இதனால், கண்ணின் எரிச்சல் குறைந்து கண்ணின் இமைகள் ஆரோக்கியம் பெரும்

ஆலிவ் எண்ணெய் கண் இமையிற்கு…! கண்களின் இமை அழகாவும், அடர்த்தியாகவும் இருந்தால் அது ஒருவரின் முக அழகையும் அதிகரிக்கும். கண் இமைகளை அழகு செய்ய, தூங்குவதற்கு முன் ஆலிவ் எண்ணெயை கண்ணின் இமைகளில் தடவி கொண்டு உறங்குங்கள். இது கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு அடர்த்தியான கண் முடிகளையும் தரும்.

கண்ணிற்கு கற்றாழை..! கண்ணின் இமை சார்ந்த பிரச்சினைக்கு இந்த கற்றாழை நன்கு உதவும். கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து கொண்டு, அவற்றை இமைகளில் தடவி வந்தால் கண் இமைகள் அழகாக வளரும். அத்துடன் கண்ணின் அழகிற்கு பெரிதும் இது பயன்படுகிறது. மேலும், கண்ணில் ஏற்படும் தொற்றுகளையும் இது தடுக்கும்.

கண்ணை பராமரிக்க வெள்ளரிக்காய்..! பல காலமாக நாம் கண்ணை பாதுகாக்க இந்த வெள்ளரிக்காயைத்தான் பயன்படுத்தி வருகின்றோம். வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி கண்ணில் வைத்து 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கண்ணை கழுவினால் கண் மிருதுவாகும். மேலும் இதில் உள்ள காபிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் கண் வீக்கம், கண் எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும்.

கிரீன் டீ போதுமே..! டீ போட்ட பிறகு கிரீன் டீ பேக்கை குளிர வைத்து, அதனை கண்களில் ஒத்தடம் கொடுத்தால், பல வகையான நன்மைகளை பெறலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஃப்ளேவனாய்ட்ஸ் கண்ணின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அத்துடன் இமைகளையும் நன்கு வளர செய்யும்.

கண்ட வேதி பொருட்கள் வேண்டாமே…! கண் பார்க்க கவர்ச்சியாக இருக்க வேண்டும் என பல வகையான அழகு சாதனங்களையும் நாம் இன்று வரிசை கட்டி பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், இவை அத்தனையும் எத்தகைய பாதிப்பை கண்ணிற்கு ஏற்படுத்தும் என்பதை முதலில் நன்கு உணர வேண்டும். இதற்கு பதிலாக இயற்கை முறையிலான மைகளை கண்களுக்கு பயன்படுத்தலாம். அதிக வேதி தன்மை கொண்ட மஸ்காரா, காஜல் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

நல்ல உறக்கமே நன்று..! எந்த வயதினராக இருந்தாலும் சீரான தூக்கம் அவசியம் வேண்டும். இல்லையென்றால் இது அவர்களின் கண்களை பெரிதும் பாதிக்கும். 7 மணி நேர தூக்கம் இருந்தாலே கண் சார்ந்த பல கோளாறுகளை வர விடாமல் தடுக்கலாம். அதிகாலையில் விரைவாக எழுந்து, இரவில் விரைவாக உறக்கினாலே கண் மிக அழகாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள்.3312

 

Related posts

விவாகரத்து செய்பவர்களில் காதலித்து திருமணம் செய்தவர்களே அதிகம்

nathan

மூலிகை பொடிகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்..!!

nathan

கொத்தமல்லியின் நற்பலன்கள்!

nathan

தெரிந்துகொள்வோமா? எருக்கஞ் செடியின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….!!

nathan

பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!

nathan

உதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள்! தீர்வை காணலாம்

nathan

உங்களுக்கு தெரியுமா நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி இரண்டுமே வித்தியாசமானது என்பது ? அதைத் தடுப்பது எப்படி?

nathan

ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புச் சிதைவு நோய்!

nathan

உங்கள் கவனத்துக்கு கர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா?

nathan