25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
5421711s1280h960
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா

பீட்சா…

மைதா – 2 கப்,
உப்பு, ஈஸ்ட், சர்க்கரை – தலா 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
வெது வெதுப்பான தண்ணீர் – 1/4 கப்.

டாப்பிங் செய்ய…

சீஸ் துருவல் – 1 கப்,
தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
சிவப்பு, பச்சை குடைமிளகாய் – தலா 1/4 கப்,
ஸ்வீட்கார்ன் – 1/4 கப்,
சில்லி ஃபிளேக்ஸ் – சிறிது,
வட்டமாக நறுக்கிய கருப்பு ஆலிவ் விதை – தேவைக்கு.

5421711s1280h960

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, ஈஸ்ட், சுடு தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு கலந்து ஈஸ்ட் தண்ணீரை ஊற்றி நன்றாக பிசைந்து மேலே எண்ணெய் தடவி ஈரத்துணி கொண்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை 4 உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் வைத்து, பீட்சா பேஸ் போல வட்டமாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் போட்டு வேகவைத்து எடுக்கவும். ஓவன் என்றால் 10-15 நிமிடம் 150 டிகிரி செல்சியஸ் வேகவைத்து எடுத்தால் பீட்சா பேஸ் ரெடி.

டாப்பிங் செய்ய…

பீட்சா பேஸ் மேல் தக்காளி சாஸ் ஊற்றி பரவலாக தடவி, அதன் மேல் சீஸ் துருவல், வெங்காயம், குடைமிளகாய், ஆலிவ் விதை, ஸ்வீட்கார்ன் போட்டு, அதன் மீது சில்லிஃபிளேக்ஸ் தூவி சூடான தோசைக்கல்லில் வைத்து 5 நிமிடம் சீஸ் உருகும் வரை மூடி வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

Related posts

மிளகு ரசம்

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடை

nathan

சீஸ் ரோல்

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எள் நூடுல்ஸ் எப்படி ஆரோக்கியமாக தயாரிக்கலாம் என தெரியுமா உங்களுக்கு?

nathan

கான்ட்வி

nathan

ஆப்பிள் பஜ்ஜி

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

பனீர் பாலக் பரோட்டா

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan