25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
007
மருத்துவ குறிப்பு

இதோ எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட கடுக்காய்…!

கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.

துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம்.

கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

திரிபலா நன்மைகள்: திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது.

நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலா சூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். இதிலிருந்து கடுக்காயின் மருத்துவ முக்கியத்துவத்தை உணரலாம்.007

Related posts

ஆயுர்வேத விதிப்படி உங்க குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் அற்புதமான ஒரு இலை எது தெரியுமா?சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு 30 நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

கணவரின் இந்த செயல்கள் மனைவியின் மனநிலையை பாதிக்கும்

nathan

கண்ணை மூடுனதுமே தூங்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்க ஒற்றைத் தலைவலிக்கு என்னதான் தீர்வு? படியுங்க…

nathan

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!

nathan

தூக்கமின்மையை விரட்டும் குத்தூசி!

nathan