25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 cloveoil 17 1450326698 1525338163
மருத்துவ குறிப்பு

பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள்!

வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது சந்திக்கும் ஓர் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் பல் வலி. ஒருவருக்கு பல் வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் அல்லது ஈறுகளில் தொற்றுக்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அப்பகுதியில் வீக்கம் மற்றும் ஈறுகளில் கிருமிகள் நிறைந்த திரவம் நிரம்பியிருக்கும். இந்நிலையில் கடுமையான மற்றும் கூர்மையான பல் வலியால் அவஸ்தைப்படக்கூடும்.

ஒருவரது வாய் சுகாதாரம் மோசமாக இருந்தால், அவர்கள் பல்வேறு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள். மேலும் சிலர் தங்களது வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சரிசெய்யாமல் விட்டுவிடுவதால், நிலைமை மோசமாகி, தாங்க முடியாத பல் வலியால் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் பல் வலியானது இரவு நேரத்தில் கடுமையானதாக இருக்கும். இந்நிலையில் நடு ராத்திரியில் பல் மருத்துவமனைக்கு செல்ல முடியாது.

இம்மாதிரியான சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பல் வலிக்கு நிவாரணம் காணலாம். உங்களுக்கு பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடா எப்பேற்பட்ட வீக்கத்தில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பல் வலியை உண்டாக்கும் தொற்றுக்களை சரிசெய்யும். அதற்கு நீரில் நனைத்த பஞ்சுருண்டையை பேக்கிங் சோடாவில் தொட்டு, வலியுள்ள இடத்தில் வையுங்கள். இல்லாவிட்டால், நீரில் பேக்கிங் சோடாவை கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளியுங்கள்.

கிராம்பு எண்ணெய் கிராம்பு எண்ணெயில் உள்ள இயூகினால் என்னும் உட்பொருள், பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு 1-2 துளிகள் கிராம்பு எண்ணெய் இருந்தால் போதும். அதுவும் இந்த எண்ணெயை வலியுள்ள பல்லின் மீது தடவி, சிறிது நேரம் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை பயன்படுத்துங்கள்.

இஞ்சி இஞ்சி பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இது ஈறுகளில் உள்ள வீக்கம், அழற்சி மற்றும் வலி போன்றவற்றைக் குறைக்கும் திறன் கொண்டது. இந்த இஞ்சியை மிளகுத் தூளுடன் சேர்த்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, வலியுள்ள இடத்தில் வைத்து, சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் பல்

பூண்டு பூண்டில் உள்ள மருத்துவ பண்புகள், பல் வலிக்கு நல்ல தீர்வை வழங்கும். இதில் உள்ள அல்லிசின் என்னும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், தொற்றுக்களை உண்டாக்கிய கிருமிகளை அழித்து, வலியைக் குறைக்கும். ஆகவே பல் வலி இருந்தால், ஒரு பல் பூண்டு எடுத்து, கல் உப்பு சேர்த்து தட்டி, வலியுள்ள இடத்தில் வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய உடனடி தீர்வு கிடைக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, ஹைட்ரஜன் பெராக்ஸைடு உதவும். ஆனால் இது பல் வலியில் இருந்து தற்காலிகமாக தான் நிவாரணம் அளிக்கும். பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க 30% ஹைட்ரஜன் பெராக்ஸைடைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் நீரில் கலந்து, வாயைக் கொப்பளித்து வர வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் அழிந்து, பல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, ஹைட்ரஜன் பெராக்ஸைடு உதவும். ஆனால் இது பல் வலியில் இருந்து தற்காலிகமாக தான் நிவாரணம் அளிக்கும். பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க 30% ஹைட்ரஜன் பெராக்ஸைடைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் நீரில் கலந்து, வாயைக் கொப்பளித்து வர வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் அழிந்து, பல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலில் பீனோலிக் உட்பொருட்கள் உள்ளன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்று செயல்படும். ஆகவே பல் வலி இருக்கும் போது, பஞ்சுருண்டையில் ஆலிவ் ஆயிலைத் தொட்டு, வலியுள்ள இடத்தில் வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.

வெங்காயம் வெங்காயத்திற்கும் பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறன் உள்ளது. மேலும் வெங்காயம் வாயில் உள்ள கிருமிகளை அழித்து, வலியைப் போக்கும். அதுவும் சின்ன வெங்காயத்தை பல் வலி உள்ள இடத்தில் வைத்து 2 நிமிடம் கடித்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யுங்கள். இதனால் உங்கள் பல் வலி காணாமல் போகும்.

கற்பூரவள்ளி எண்ணெய் கற்பூரவள்ளி எண்ணெயில் ஆன்டி-செப்டிக் மற்றும் மரத்துப் போகச் செய்யும் பண்புகள் உள்ளன. எனவே பல் வலிக்கும் போது இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால், அது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். அதுவும் கற்பூரவள்ளி எண்ணெயை வலியுள்ள பற்களின் மீது தடவுங்கள். இப்படி சில மணிநேரம் வைத்திருங்கள். இதனால் உங்கள் பல் வலி சரியாகிவிடும்.

விஸ்கி ஆம், விஸ்கி கூட ஒருவருக்கு இருக்கும் பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இருப்பினும் இதுவும் தற்காலிகமானது தான். அதற்கு விஸ்கி அல்லது பிராந்தியை பஞ்சுருண்டையில் நனைத்து, வலியுள்ள பற்களின் மீது சிறிது நேரம் வைத்திருங்கள். இச்செயலை மருத்துவரை நீங்கள் பார்க்கும் வரை செய்யுங்கள்.

வெதுவெதுப்பான உப்பு கலந்த நீர் வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளியுங்கள். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வீக்கம் குறைந்து, வலியும் போய்விடும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

2 cloveoil 17 1450326698 1525338163

Related posts

தெரிஞ்சிக்கங்க… சிறுநீரு நுரையா வருதா?… அப்போ உங்களுக்கு இந்த பிரச்னையா கூட இருக்கலாம்…

nathan

உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் நான்கு அறிகுறிகள்

nathan

வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த அறிகுறிகள் இருந்தா கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்

nathan

அடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள்

nathan

கணவரை நச்சத்துக்கொண்டே இருக்கும் மனைவி

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் நட்ஸ் சாப்பிடலாமா கூடாதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவ காலத்தில் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும் முறைகள்

nathan