30 வயதிற்கு மேற் பட்ட ஆடவர்களுக்கு திருமணம் நடக்கிறதோ இல்லையோ, ஒன்று மட்டும் தவறாமல் நடக்கிறது. அது என்ன? தலை முடி கொட்டுவது. பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும், ஒரு சில ஆண்களுக்கு முன் பக்கக் தலைமுடி அதிகமாக கொட்டுவதால் வழுக்கை ஏற்படும் வாய்ப்புகள் தோன்றுகிறது. ஆண்களின் பொதுவான வழுக்கை பிரச்சனையுடன் தொடர்புடைய ஒரு வகை முடி இழப்பாகத்தான் முன் பக்க வழுக்கையும் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த முன் பக்க வழுக்கையை ஃபிரண்டல் ஃபைபரோசிங் அலோப்ஸி (frontal fibrosing alopecia (FFA)) என்றும் கூறுகின்றனர். வழுக்கை தொடர்பான பிரச்சனைகள் ஒருவரின் முக தோற்றத்தை பாதிப்பதால் ஆண்கள் ஒரு வித தர்மசங்கடங்களை அடைகின்றனர் . இதனால் அவர்களின் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுகிறது. தலையின் முன் பக்க வழுக்கை என்பது முடி கொட்டுதலின் முதல் நிலை ஆகும். உங்கள் முடி மெலிதாக மாறுவதற்கான முதல் அறிகுறி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
நெற்றிக்கு அருகில் இருக்கும் தலைபகுதியில் ஏற்படும் முடி இழப்பு, சில நேரங்களில், புருவங்களின் முடி இழப்பு மற்றும் அக்குள் பகுதியின் முடி இழப்பு போன்றவை ஃபிரண்டல் ஃபைபரோசிங் அலோப்ஸி (FFA), என்று வகை படுத்தப்படுகிறது. இந்த பிரச்சனை பொதுவாக உடலில் உருவாக்கப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் அல்லது நோயெதிர்ப்பு எதிர்வினை போன்றவை காரணமாக அறியப்படுகிறது. இந்த விரும்பத்தகாத பிரச்சனை, மருத்துவ முறையின் பல்வேறு சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் குறைக்கப்படலாம் அல்லது முற்றிலும் தீர்க்கப்படலாம். இத்தகைய முடி இழப்பு பிரச்சனைகளை , ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலமாக வெற்றி கொள்ளலாம்.
காரணங்கள் : பொதுவாக முடி இழப்பிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை, உடலியல் மற்றும் உளவியல் மன அழுத்தம், தவறான முடி பராமரிப்பு , ஹார்மோன் மாற்றம், உச்சந்தலையில் தொற்று, நோய் மற்றும் மருந்துகள் முதலியன முடி இழப்பை ஏற்படுத்தும். இருந்தாலும் உடல் மற்றும் உச்சந்தலையில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபணு காரணிகள், ஆண்களின் வழுக்கைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
ஹார்மோன் டிஹைட்ரோடெஸ்டொஸ்டிரோன் அல்லது டிஹெச்டி (DHT ) என்று அழைக்கப்படும் ஆண் ஹார்மோன் என்பது அன்றோஜென் ஆகும், இதுவே முன் பக்க வழுக்கைக்கு முக்கிய பொறுப்பை ஏற்கிறது. ஆண்களின் பல்வேறு பண்புகளின் வளர்ச்சிக்கு இந்த DHT காரணமாக இருக்கிறது. DHT ன் மிகக் குறைந்த விகிதம் பெண்களிலும் காணப்படுகிறது. பெண்களுக்கு இந்த ஹார்மோன் அளவு அதிகரித்தாலும், முகத்தில் முடிகள் தோன்றுவது, திடீர் முடி இழப்பு போன்ற ஆண் இரண்டாம் நிலை பாலின பண்புகள் தோன்றுகின்றன.
முடியின் வேர்கால்களில் இருக்கும் மயிர்புடைப்புகளில் அன்றோஜென் வாங்கிகள் இணைந்து சரியான முடி வளர்ச்சியைத் தடுக்கிறது. முடியின் வேர்க்கால்கள், சரியான அளவு வளர்ச்சி ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதை தடுப்பது இந்த அன்றோஜென்கள் ஆகும். இதனால் தலைமுடிக்கு கிடைக்கும் புத்துணர்ச்சி தடைபட்டு, அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. உச்ச்சந்தலையில் உள்ள அதிகரித்த அளவு DHT ஹார்மோன் ,முடியின் வேர்க்கால்களை சுருங்கச் செய்வது மரபணு ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் புதிய வேர்க்கால்கள் உற்பத்தி தடுக்கப்படுகிறது, இதனால் முடி வளர்ச்சி குறைகிறது., வேர்க்கால்கள் தரம் குறைவதால், முடி மெலிதாகி கொட்டத் தொடங்குகிறது. இதனால் உடலில் டிஹெச்டி அளவுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மயிர்ப்புடைப்பு மூலம் ஆண்ட்ரோஜென் வரவேற்பை கட்டுப்படுத்துவது போன்றவை முன் தலை முடி வழுக்கை சிக்கலை தீர்ப்பதில் அவசியமாகும்.
சிகிச்சைகள் யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் சரியான வாழ்க்கை முறையை பராமரிப்பது, ஆரோக்கியமான உணவுகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்றவை இயற்கையாகவே பொது முடி இழப்பு பிரச்சினை மற்றும் FFA பிரச்சனைக்கு உதவும். நோயெதிர்ப்பு மண்டலத்தை உயர்த்துவது மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு துணை புரியும். .சூடான முடி சிகிச்சைகள், ஸ்டைலிங் கருவிகள், இரசாயனங்கள் மற்றும் மன அழுத்தம் மற்றும் இறுக்கமான ஹேர் ஸ்டைலிங் ஆகியவற்றை தவிர்க்கவும். இவை இயற்கையாகவே முன் பக்க தலைமுடியை உதிரச் செய்யும்
பொடுகு பொடுகு மற்றும் இதர உச்சந்தலை தொற்று பாதிப்புகளுடன் கூடிய தலை முடி வறட்சி , சீபம் உற்பத்தியை அதிகரித்து, முடியின் வேர்கால்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் முடிக்கு போதிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், முடியின் வேர் கால்கள் பலமிழந்து முடி உதிர்தலை உண்டாக்குகின்றன. இதனால் பொடுகைப் போக்கும் ஷாம்பூவை பயன்படுத்தி தலையை சுத்தமாக வைத்து தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடலின் ஹார்மோன் அளவு சீராகவும் கட்டுப்பாடுடனும் பராமரிக்கப்பட வேண்டும். மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக முன் பக்க தலை முடி இழப்பை கட்டுப்படுத்தலாம். அவை,
உச்சந்தலையில் அறுவை சிகிச்சை முடி மாற்று அறுவை சிகிச்சை, FUE சிகிச்சை, முடி வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு போன்ற நுட்பங்கள் முடி உதிர்தல் பிரச்சினையை சமாளிக்க பயன்படுகிறது. இது ஒரு விலையுயர்ந்த சிகிச்சையாகும் மற்றும் நாள்பட்ட FFA வழக்கில் ஒரு டாக்டரின் பரிந்துரையை மட்டுமே எடுக்க வேண்டும்
மைனாக்சிடில் ஒவ்வொரு முறையும் உச்சந்தலையில் உள்ள பாதிப்புள்ள பகுதியில் இந்த லோஷன் அல்லது நுரை தேய்க்கப்பட வேண்டும். இதனை தொடர்ந்து தேய்த்து வருவதால், முடி இழப்பு தடுக்கப்பட்டு, மேலும் தலை வழுக்கை ஆகாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும், முடியின் மறு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த சிகிச்சையைத் தொடங்கி 4 மாதத்தில் உங்களால் நல்ல முடி வளர்ச்சியைக் காண முடியும். இந்த சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாகும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இந்த சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
பிநஸ்டேரைட்: டெஸ்டோஸ்டிரோன் , டிஹைட்ரோ டெஸ்டொஸ்டிரோன்( DHT ) போல் மாற்றம் பெறுவதை இந்த மருந்து தடுக்கிறது. டி.ஹெச்.டி அளவின் குறைவு, உச்சந்தலையில் வேர்கால்களின் துளைகளை விரிவாக மாற்றி அதன் பழைய இயல்பான அளவிற்கு மாற்றம் பெற உதவுகிறது. இதனால் முடி வலிமை பெற்று முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. பிநஸ்டேரைட் மாத்திரை, ஒரு நாளைக்கு ஒன்று எடுத்துக் கொள்வதால் முடி இழப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது. , மேலும் புதிய முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது. இந்த மாத்திரையை எடுத்துக் கொண்ட நான்கு மாதத்தில் நல்ல விளைவுகள் ஏற்படுகிறது.. மேலும் இரண்டு ஆண்டுகளில் முழு முடி வளர்ச்சி ஏற்படுகிறது. இந்த பதிவின் மூலம், முன் பக்க தலை முடி இழப்பு என்றால் என்ன என்பது பற்றியும், அதற்கான பல்வேறு சிகிச்சை முறைகளைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கும் முன் பக்க தலை முடி இழப்பு உள்ளதா? மேலே கூறிய சிகிச்சை முறைகளைப் பின்பற்றி எளிதில் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு சீரான முடி வளர்ச்சி பெற எங்கள் வாழ்த்துக்கள் .