26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 1532595351
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தலையில் குட்டி குட்டி கொப்புளங்கள் வருதா? அப்ப இத படிங்க!

அக்னே அல்லது பிம்பிள் என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டாலும், பொதுவாக நம் சருமம்/ தோலில் உள்ள மயிர்கால்களில் உண்டாகும் நோய் ஆகும். சருமம், சருமத்தின் செல்கள், சருமத்தின் மேல் உள்ள மயிர்கால்கள் இவை அனைத்தும் பாக்டீரியாவால் பாதிக்கப்படுவதை அக்னே என்றும் சருமத்தில் உள்ள நுண்துளைகள் இறந்து போன செல்களினால் அடைக்கப்பட்டுவதால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, சிவந்து போதல், சின்ன கட்டிகள் உண்டாவதை பிம்பிள் என்றும் புரிந்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையில் தலையில் ஏற்படும் அக்னே அல்லது பிம்பிள் பற்றி பார்க்கப்போகிறோம். வாசகர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள இதை தலைப்புண்கள் என்று குறிப்பிடுகிறோம்.

தலைப்புண்கள் தலைப்புண்களை கட்டுக்குள் வைத்திருப்பதால் மட்டுமே, இந்த பருக்களினால் ஏற்படும் சீரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ளமுடியும். இந்த தலை புண்கள் தலைமுடியுடனே வளர்வதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இந்த தலைப்புண் வரும் இடத்தில் தோல் சிவந்து போய் நமைச்சல் எற்படுவதால் எந்நேரமும் தலை சொரிந்து கொண்டு இருக்க தோன்றும். இதை குணப்படுத்த சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். நல்ல பலனளிக்கும் வீட்டுமுறை சிகிச்சை முறைகளும் உள்ளன. முறையாக சிகிச்சை செய்யவிட்டால் இது பல காரணங்களினால் மோசமான கொப்புளங்களாக சிரங்கு போல ஆகிவிடும்.

காரணங்கள் இதற்கு பொதுவான முக்கிய காரணம் தலையின் தோலில் அதிகப்படியான எண்ணை சுரப்பது மற்றும் அழுக்கு தலைசருமத்தின் நுண்ணிய துளைகளை அடைத்து விடுவது தான். இந்த நிலையில் தலைமுடியை வாரிக் கொள்வது கூட கடினமாகி விடும். இந்த தலைப்புண் பாதிப்பை தவிர்ப்பது சற்று கடினம் என்றாலும் சரியாக கவனிக்கவிட்டால் அதிகமாகிவிடும். சிலர் தலையில் ஏற்படும் கொப்புளங்களுக்கு எண்ணை தடவுவார்கள். இதனால் சற்றே கொஞ்சம் வலி குறையலாம். ஆனால் சமயத்தில் இது தலைப்புண் பிரச்சினையை அதிகமாக்கி விட வாய்ப்புள்ளது. இந்த தலைபுண் கொப்பளம் பிரச்சினையிலிருந்து விடுபட ஒரு சில வீட்டு முறை வைத்தியங்களை பார்ப்போம்.

தலைப்புண்கள் – பரு இது கிட்டத்தட்ட முகப்பரு ஏற்படுவது போல தான் தலையிலும் ஏற்படுகிறது. தோலின் உள்பக்கத்தில் ஒவ்வொரு முடியின் இருபக்கமும் செபகஸ் சுரப்பி உள்ளது. இது அதிகப்படியான எண்ணையை சுரந்து அது மயிர்கால்களை சென்றடைகிறது. நமது தோல் இயற்கையாக பாதுகாப்பு கவசம் போல செபும் எனப்படும் எண்ணையை சுரக்கிறது. இந்த தோலின் மயிர்கால்கள் மூலமாகவும், இறந்த செல்கள் மூலமாகவும் மற்றும் சில பொருட்களாலும் தோலின் நுண்ணிய துளைகளை சமயத்தில் அடைத்து விடுகிறது.

பாக்டீரியா தொற்று இந்த நிலையில் பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டால் பாக்டீரியாக்கள் அப்படியே வளர ஆரம்பித்து விடுகிறது. இது மைக்ரோமேடோன் என்ற புண்களின் ஆரம்ப நிலையை குறிக்கும். ஒரு நிலையில் இந்த மைக்ரோமேடோன் பெரிதாக ஆகிவிடுவதால் நம் கண்ணில் தென்பட ஆரம்பிக்கும். இது கருப்பாகவோ அல்லது வெள்ளையாகவோ காணப்படும். அடுத்த நிலையாக சிவப்பாக மாறி சீழ்கட்டியாகி விடும். இதை ஜிட் என்கிறார்கள். இந்த தலை புண்களுக்கு முக்கிய காரணமாகிறது. இதை நீக்க நம் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களும் தோலின் நுண்ணிய துளைகளை அடைத்து விடுவதால் செபும் அப்படியே பரவ வாய்ப்புள்ளது.

கட்டுப்படுமா? தலைபுண் தொல்லையினால் அவதி படுபவர்களுக்கு உணவு கட்டுபாடு செபும் உற்பத்தியை சீரக்க உதவுவதால் ஒரளவு பயன்படும். அதிகமாக எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களுக்கு செபும் அதிகமாக சுரக்கிறது. அதேபோல இந்த பிட்சா போன்றவையும் செபும் அதிகமாக சுரக்க செய்வதுடன் பாக்டீரியா வளர்ச்சியையும் வேகப்படுத்துகிறது. உடனே எண்ணையில் பொறித்த உணவு மட்டும் தான் வில்லன் என்று நினைத்து விடாதீர்கள்.

பால் பொருள்கள் பால் பொருட்களும் அதற்கு குறைவில்லை. வெண்ணை, சீஸ் போன்றவையும் வில்லன்கள் தான். பால் அதிகம் சுரப்பதற்காக ஹார்மோன்கள் தூண்டப்பட்ட பசுக்கள் சுரக்கும் பாலிலும் அதே கதி தான். பால் மற்றும் பால் பொருட்கள் இல்லாத வாழ்க்கை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது அல்லவா? அதனால் நாட்டு பசு மாடுகள் பாலில் இருந்து இயற்கையாக தயாரிக்கப்பட்ட பால் பொருட்களே சிறந்தவை.

வெந்தய விதைகள் மற்றும் இலைகள் வெந்தயத்தின் விதைகள் மற்றும் இலைகள் இந்த பிரச்சினைக்கு ஒரு தனித்துவமான மருந்தாக இருக்கும். வெந்தய இலைகளை நீருடன் சேர்த்து அரைத்து, தலையில் தலைப்புண் உள்ள இடங்களில் முழுமையாக படும்படியாக பற்று போட்டு 15 நிமிடங்கள் ஊறி பின் கழுவிவிட வேண்டும். இதே போல் வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையில் தடவி 30முதல் 40 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவி விடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை – புதினா சோற்றுக் கற்றாழை மற்றும் புதினா இலை இரண்டும் தலைப்புண்களுக்கு சிறந்த மருந்தாகின்றது. பொதினா இலைகளை 15 நிமிட தண்ணீரில் அதாவது தண்ணீர் பாதியாக சுண்டும் படி கொதிக்க வைத்து அதில் சோற்றுகற்றாழை மஞ்சையை சேர்த்து அப்படியே தலைப்புண் பாதிக்கப்படுள்ள இடங்களில் தடவவும். தினமும் இப்படி செய்து வர ஒரிரு வாரங்களில் குணமாகும்.

இஞ்சி சாறு தலைப்புண்ணுக்கு இஞ்சி சாறும் ஒரு நல்ல மருந்து. இது பாக்டீரியாக்களை கொள்கிறது. இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அறைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர நிவாரணம் கிடைக்கும்

பேக்கிங் சோடா பேக்கிங் சோடா தலைப்புண்களை குறைக்க உதவுகிறது. தலையில் மயிர்கால்கள் அடைப்பட்டிருக்கும் போது பேக்கிங் சோடா தடவி மசாஜ் செய்து கழுவி விட சிக்கிரம் குணமாகும்.

தேன் மற்றும் புளித்த தயிர் தேன் மற்றும் புளித்த தயிரும் நல்ல குணமாளிக்கும். உங்கள் தலைப்புண் பிரச்சினைக்கு காரணம் சுகாதார கேடு மற்றும் ஹார்மோன்கள் இல்லையென்றால் தேன் மற்றும் புளித்த தயிர் கலந்த கலவையை பயன்படுத்தலாம். தேன் தலையில் ஈரப்பதத்தை அதிகரித்து கொடுக்கும். இந்த கலவை போட்ட பின் நல்ல ஷாம்பு போட்டு தலையை கழுவவும்.

மஞ்சள் மஞ்சளின் ஆன்டி-ஆக்சிடெண்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபளமேட்ரி குணங்கள் நாள்பட்ட தலைப்புண் பிரச்சினைக்கு கூட மருந்தாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் தலைமுடியின் ph மதிப்பை நடுனிலையாக பராமரிக்கும். இது மயிர்கால்களையும் வலுவாக்கி நல்லஆரோக்கியமான தலைமுடியை தரும். இதற்கு மஞ்சளை நல்ல தேங்காய் எண்ணையில் ஊர வைத்து அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். இதில் உள்ள மருத்துவ குணங்களை அப்படியே தலை இழுத்துக் கொள்ளும். சிக்கிரம் குணம் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி செப்டிக் பண்பும் மயிர்கால்களில் ஏற்படும் தொற்றை குணமாக்க வல்லது. இது தலைமுடியின் அடிவரை சென்று பாக்டீரியாக்களை அழிப்பதுடன், அதிகப்படியான எண்ணை சுரப்பையும் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், ph மதிப்பை நடுனிலையாக பராமரிக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை மிதமான சுடுநீரில் கலந்து அப்படியே தலைமுடியில் தடவவும். குறிப்பாக தலையை ஷாம்பு போட்டு கழுவி விட்டு அதன் பிறகு தலையில் தடவ, இது பாக்டீரியாவை அழிப்பதுடன் வளர்வதையும் தடுகிறது. இதை வாரம் இருமுறை செய்ய தலைப்புண் பிரச்சினையிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சோற்று கற்றாழை கற்றாழை சோறு-ஐ விட ஒரு சிறந்த மருந்து இல்லை என்றே சொல்லலாம். சோற்று கற்றாழை மிக எளிதில் எல்லா சூழ்நிலைகளிலும் வளரக்கூடியது. இந்த சோற்று கற்றாழையில் எல்லாவிதமான மருத்துவ குணங்களும் உள்ளது. உதாரணமாக இது மிகச்சிறந்த ஆன்டி-பாக்டீரியா மற்றும் ஆன்டி- செப்டிக், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-ஆக்சிடெண்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபள்மெட்ரி யாக இருக்கிறது. இது தலைக்கு மட்டுமல்லாது சருமத்துக்கும் பயன்படுகிறது. சோற்று கற்றாழை சோற்றுப்பகுதியை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்படியே தடவவும். கொஞ்ச நேரம் ஊறிய பிறகு மிதமான சுடுதண்ணிரில் கழுவவும். அல்லது இதற்கு மாறாக சோற்று கற்றாழை சோறுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவி விடவும்.

இந்தியன் லைலாக் இந்தியன் லைலாக் — இது என்ன புதுசா இருக்கே என்று நினைக்காதீர்கள் – வேப்ப இலைகளை தான் அது குறிக்கிறது. நம் அனைவரும் அறிந்தது போல் வேப்ப இலைகள் தோல் மற்றும் சரும ரோகங்களுக்கு சிறந்த நிவாரணி ஆகிறது. இது தோல் வியாதிகளான எஸிமா, சோரியாசிஸ், புழுக்கள் மற்றும் வார்ட்ஸ் போன்றவற்றிக்கு நல்ல மருந்தாகும். அதே போல் தலைப்புண்களுக்கும் நல்ல தீர்வாகிறது. இதன் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாயடிக் குணங்கள் தலைபுண்களை விரைவாக ஆற்றிவிடும்.

வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அரைத்து விழுது போல் ஆக்கி கொண்டு அதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும். 15 நிமிட கழித்து கழுவி விடவும். அதே போல் நீருக்கு பதில் நல்ல தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்க மயிர்க்கால்களின் அடிவரை சென்று செயல்புரியும். மறு நாள் காலை ஷாம்பு போட்டு கழுவி விட நல்ல பலன் கிடைக்கும்.

தேனும் இலவங்கப்பட்டையும் உங்கள் தலைப்புண் பிரச்சினைக்கு தேனும் இலவங்கப்பட்டையும் சேர்ந்த கலவை கூட நல்ல மருந்து. இதற்கு இலவங்க போடியை போல் இருமடங்கு தேனுடன் சேர்த்து இவை இரண்டையும் நன்றாக குழைத்து தலைப்புண்கள் மேல் போட, அதன் ஆன்டிபயாடிக் தன்மை புண்களை சீக்கிரம் ஆற்றுவதுடன் தோலின் ஈரத்தன்மையையும் அளிக்கிறது. மேலும் இதன் ஆன்டிமைக்ரோபியல் தன்மை பாக்டீரியாகளை கட்டுபடுத்துகிறது. இத்துடன் ஆர்கன் எண்ணையும் சில துளிகள் சேர்த்து கொள்வது நல்லது. இந்த மருந்தை போட்டு சிறிது நேரம் கழித்து, சற்றே சூடான தண்ணீரால் தலையை கழுவி விடவும்.

தேனும் சர்க்கரையும் தேனும் சர்க்கரையையும் வைச்சு காமெடி கிமெடியெல்லாம் கிடையாது. நிஜமாகவே முன்பு எல்லாம் அடிப்பட்ட காயங்கள் / வெட்டு காயங்களுக்கு சர்க்கரை பத்து போடப்பட்டது. சர்க்கரையில் ஆன்டி-பாக்டீரியா மற்றும் ஆன்டி- செப்டிக் பண்புகள் உள்ளது. இது தோல் உரிதல் பிரச்சினை உள்ளவர்களுக்கும், தலைப்புண்களை ஆற்றவும் கூட பயன் படுகிறது. தேன் பற்றி சொல்லவே வேண்டாம். தேனை போட்டால் தோலில் ஏற்படும் சின்ன சின்ன கோடுகள், சுருக்கங்கள் மறையும். மேலும் இது ஆன்டிஏஜிங் பிரச்சினைக்கு மருந்தாகவும் ஆகிறது. தேன், சர்க்கரை இவற்றுடன் திராட்சை விதைகள் மற்றும் ஆர்கன் எண்ணை சேர்த்து தலைப்புண் பாதிப்புள்ள இடங்களில் தடவி கொஞ்ச நேரம் கழித்து கழுவி விட நல்ல குணம் கிடைக்கும். ஆனால் அதிகம் சர்க்கரை சேர்த்தால் மறுபடியும் புண் ஏற்பட வாய்ப்புள்ளது.

பப்பாளி பழம் பப்பாளி நார்ச்சத்து நிறைந்த பழம் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் அதுவே தலைப்புண்களுக்கும் சிறந்த மருந்து என்று தெரியுமா. பப்பாளி பழத்தில் உள்ள பலவித அமிலங்கள் தோலின் எண்ணை பசையை கட்டுப்படுத்துவதுடன், புதிதாக வளரும் தோலின் அடியில் உள்ள இறந்த செல்களையும் நீக்குகிறது. பப்பாளியில் உள்ள பபைன் என்ற என்சைம், வீக்கத்தை குறைக்கவும், தோலின் நுண்ணிய துவாரங்களை திறக்கவும் உதவுகிறது. இதனால் தலைப்புண்கள் சீக்கிரம் ஆறும். பப்பாளியுடன் அதே அளவு யோகர்ட், தேன் கலந்தால் நல்ல கெட்டியான பேஸ்ட் கிடைக்கும். அதை அப்படியே தலைப்புண் உள்ள இடத்தில் பத்து போட்டு 20 நிமிடம் ஊறிய பிறகு சூடு நீரால் அலசி விடவும்.

ஜாதிக்காய் ஜாதிக்காய் பொடியை, நான்கு டேபிள் ஸ்பூன் பாலுடன் குழைத்து தலைப்புண் உள்ள இடத்தில் பத்து போட்டு ஒரு மணி நேரம் கழித்து சூடு நீரால் அலசி விடவும்.

பூண்டு சில பூண்டு பற்களை எடுத்து கொண்டு நசுக்கி அதை தலைப்புண் உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இது புண்களை ஆறுவதுடன் புண்களால் ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

டீ ட்ரீ ஆயில் தேயிலை மர எண்ணையில் உள்ள ஆன்டிபாக்டீரியால் பண்பு தலைப்புண்களை எதிர்த்து போராட உதவுவதுடன் புண்களையும் ஆற்றி விடுகிறது. தேயிலை மர எண்ணையை தலைப்புண் உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். ஒருமணி நேரம் கழித்து கழுவி விட, புண்கள் ஆறிவிடும்

பன்னீர் சில துளி பன்னீரை தலைப்புண் உள்ள இடத்தில் தடவவும்.பன்னீர் புண்களால் ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

மல்லிகை எண்ணெய் மல்லிகை எண்ணெய் தலையில் ஏற்படும் அரிப்பு, தலைப்புண் மற்றும் இதர தொற்று நோய்களுக்கு நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் மல்லிகை எண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 3-4 டீஸ்பூன் தேயிலைமர எண்ணெயுடன் கலந்து தலைப்புண் உள்ள இடத்தில் தடவவும். நல்ல நிவாரணம் கிடைக்கும்

எலுமிச்சை சாறு அரை மூடி எலுமிச்சையின் சாறு எடுத்து தலைப்புண் உள்ள இடத்தில் தடவவும். இது தலையின் தோலை சுத்தம் செய்வதுடன் தலைபுண்ணை எதிர்த்து சீக்கிரம் ஆற்றி விடும்.

தக்காளி பழுத்த தக்காளியை சாறாக்கி தலைப்புண் உள்ள இடத்தில் தடவவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இது நல்லமருந்து ஆகும். பொதுவாகவே எண்ணெய் பசை அதிகம் கொண்ட கூந்தல் தைலங்களை தவிர்த்து விடுங்கள். இந்த கூந்தல் தைலங்கள் மயிர் கால்களை அடைத்து விடுவதால் தலைப்புண் உருவாக வாய்ப்புள்ளது. ஸ்டைல்காக பயன்படுத்தப்படும் கூந்தல் பாதுகாப்பு பொருட்கள் முறையாக உபயோகப்படுத்தவிட்டால் சில சமயம் அதுவே தலைப்புண் ஏற்பட காரணமாகி விடும். தலைமுடிக்காக விற்கப்படும் ஜெல், மெழுகு, ஸ்பிரே மற்றும் மொஸி ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

நீங்கள் அவ்வாறு பயன்படுத்தும் பொருட்கள் தலையின் தோலால் உறிஞ்சப்படும் நேரம் அதிகமாகும் போது அதுவே தலையில் புண் உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின் தோல் மேல் படர்ந்து விடுவதால் அவை தலைப்புண்களை உண்டாக்கலாம்.

தலைமுடியை அலசுதல் நீங்கள் கடினமாக உடற்பயிற்சி செய்யும் போது உச்சந்தலை பகுதியிலும் வேர்க்கும். அதனால் தலையின் தோல் பகுதி ஈரமாவதுடன் எண்ணெய் பசையும் அதிகமாகி விடுகிறது. இதுவே நோய் பரப்பும் கிருமிகளுக்கு ஏதுவாகி விடும். நம் வேர்வையில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் மூன்றும் சேர்ந்த கலவை வழுவழுப்பாகவும் கடினமாகவும் தலையின் தோலில் ஒட்டிக்கொள்ளும் போது அதுவே தலையில் புண்ணை உண்டாக்க காரணமாகி விடும். அதேபோல் மற்றும் வியர்வையுடன் கலந்து தலை முழுவதுமே பாதிக்கப்படலாம்.

ஆகையால் கடினமாக உடற்பயிற்சிக்கு பிறகு தலைமுடியை/தலையை நல்ல நீரில் கழுவி அலசவும். தலைமுடியை காயவைக்க இருக்கும் ஹேர் ட்ரையர் மூலம் காயவைப்பது நல்லது என்றாலும் எப்போதுமே அது அவசியம் இல்லை. சாதாரணமாக ஒரு ஃபேன் காற்றில் தலை முடியை உலர்த்தினாலே போதும்.

வினிகர் தலை முடியை நன்றாக ஷாம்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு டம்பளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை சேர்த்து தலைமுடியில் தேய்க்கவும். பிறகு நன்றாக தண்ணீர் விட்டு கழுவி விடவும். இப்படி செய்வதால் தலையின் தோல் பகுதியின் Ph அளவு சரியாக பராமரிக்கப்படுவதால் தலையில் பாக்டீரியா தொற்று ஏற்படாது. வினிகர் தலைமுடியின் கரோட்டின் படலத்தை நன்கு உயிரோட்டத்துடன் பாதுகாக்கிறது. இது மிகவும் இயற்கையான தீர்வாகும். ஆதலால் வினிகர் கொண்டு தலைமுடியை சுத்தம் செய்வதை அடிக்கடி மேற்கொள்ளலாம்

மருதாணி மருதாணி இயற்கையாகவே தலைமுடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், தலைப்புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகிறது. எந்த தலைமுடி பிரச்சனைக்கும் மருதாணியை அரைத்து விழுதாக்கி தடவுவது மிகச்சிறந்த இயற்கையான தீர்வாகும். மருதாணியை நீர் விட்டு அரைத்து விழுதாக்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி ஒரு 30 நிமிடம் ஊற வேண்டும். அப்போது தலைக்கு அணியும் ஷொவர் கேப் அணிவது நல்லது. பிறகு தண்ணீர் விட்டு அலசி விட்டால் உங்களின் கூந்தல் பளப்பளபதுடன் தலைபுண்ணிலிருந்தும் விடுதலை தான்.

கந்தக சத்து நீங்கள் உபயோகப்படுத்தும் ஷாம்பு மற்றும் லோஷன்களில் கந்தக சத்து அதாங்க சல்பரை அடிப்படையாக கொண்டுள்ளதா? அப்படி என்றால் அது தலைப்புண் பிரச்சனைக்கு நல்லது. ஆனால் அவற்றை கையாண்ட பின் நன்றாக கையை கழுவி கொள்ளுங்கள். லோஷனை தலையில் அப்படியே போட்டு தடவி பின் அலசி விடுங்கள். அப்போது தலையின் தோல் அழுக்கு குறைந்து ஃப்ரஷாக இருக்கும்.

புருன் பழங்கள் புருன் பழங்கள் இரும்பு சத்து மிக்கது. மலச்சிக்கலை தடுக்கும். அதுமட்டுமல்ல தலைமுடிக்கும் நல்லது. தமிழில் உலர்ந்த ப்ளம் அல்லது கொடி முந்திரி என்று சொல்லலாம். இதை எப்போது வேண்டுமானாலும் கொரிக்கலாம்.

க்ரீன் டீ க்ரீன் டீ குடிப்பது தலைமுடிக்கும் நல்லது என்று தெரியுமா? ஆமாம் கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்பு மற்றும் பாலிஃபினல்கள் தலைமுடியின் பொடுகு பிரச்சனையை குறைப்பதுடன் தலைப்புண்களுக்கும் சிறந்த மருந்தகின்றது. அதனால் நீண்ட பலமான அழகான கூந்தலுக்கு க்ரீன் டீயை விட்டுவிடாதீங்க..

கேரட் வைட்டமின் A நிறைந்த கேரட் கண்களுக்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் நல்லது. கேரட் செபும் உற்பத்திக்கு உதவுவதால் தலைமுடியின் ஈரப்பதத்தை காக்கவும் வளமாக்கவும் உதவுகிறது.அதனால் நீண்ட பலமான அழகான தலைமுடி அமையும்.

சால்மன் மீன் நீங்க அசைவம் சாப்பிடுவிங்க என்றால் சால்மோன் மீன் கண்டிப்பாக சாப்பிடுங்க.. இதில் உள்ள வைட்டமின் D மற்றும் ஒமேகா ஃபெட்டி அமிலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் நீண்ட நேரம் ஈரப்பதத்தையும் காப்பாற்றும். மேலும் தேவையான புரோட்டின் சத்தும் கிடைப்பதால் தலைமுடிக்கும் தலைபகுதி தோலுக்கும் நல்லது

மாட்டிறைச்சி மாட்டிறைச்சியில் உள்ள வைட்டமின் B மற்றும் புரோட்டின், இரும்பு சத்து, மற்றும் துத்தநாக சத்தும் உண்மையிலே தலைப்புண்ணை பிரச்சனைக்கு நல்ல தீர்வாகிறது

1 1532595351

Related posts

உங்களிடம் போதுமான வைட்டமின் பி 12 இல்லாவிட்டால், நீங்கள் எடையைக் குறைக்க மாட்டீர்கள்!

nathan

தடவத்தான் தைலம்… தேய்க்க அல்ல

nathan

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

nathan

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது – ஏன் தெரியுமா?

nathan

கட்டாயம் படிக்கவும்! உடலில் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் மறைந்து தாக்கும் புற்றுநோய்கள!

nathan

ரத்த அழுத்தம்

nathan

மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்

nathan

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா… இதப் படிங்க முதல்ல!

nathan

உங்களுக்கு தெரியுமா நம் முன்னோர்கள் ‘அந்த’ விஷயத்திற்கு வயாகராவாக இந்த பொருட்களைத்தான் சாப்பிட்டார்களாம் ?

nathan